திருச்செந்தூர்
ஆதித்தனார் கல்லூரியின்
வணிக நிர்வாக இயல் துறை (B.B.A)
பொன்விழா
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் வணிக நிர்வாக இயல் துறை (B.B.A) யில் ஐம்பதாவது பொன்விழா ஆண்டை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் வணிக நிர்வாக இயல் துறை தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
பொன்விழாவை கொண்டாடும் வகையில் இங்கு B.B.A படித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து"மாணவர்கள் சந்திப்பு" நிகழ்வு நடைபெற்றது.
அதன் பின்னர், தாங்கள் கல்வி கற்ற கல்லூரிக்கு, சுமார் 9 லட்சம் ரூபாய் செலவில் SMART ROOM வசதியை அமைத்து தந்தார்கள்.
இந்த SMART ROOM அறையை ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜ் திறந்து வைத்தார்.
பின்பு கல்லூரியில் நடைபெற்ற பொன்விழா நிகழ்ச்சிக்கு ஆதித்தனார் கல்லூரி முதல்வர் டாக்டர். மகேந்திரன் தலைமை வகித்தார்.
முன்னாள் மாணவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.
ஆதித்தனார் கல்லூரியில் B.B.A பயின்ற முன்னாள் மாணவர்இந்திய விமான நிலைய பொருளாதார ஆணைய முன்னாள் தலைவர் மச்சேந்திர நாதன் ஐ.ஏ.எஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
வணிக நிர்வாக இயல் துறை முன்னாள் தலைவர் மற்றும் முதல்வர் டாக்டர் செல்வராஜ் விழாவின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு உரையாற்றினார்.
ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜ்
வாழ்த்துரை வழங்கினார்.
ஆதித்தனார் கல்லூரி செயலர் டாக்டர். ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
கல்லூரி முதல்வர் டாக்டர் மகேந்திரன்
வாழ்த்துரை வழங்கினார்.
தற்போது பி.பி.ஏ படிக்கும் மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளை வழங்கினார்கள்.
பொன்விழா நிகழ்வை வெற்றிகரமாக அமைக்க உதவிய அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவுக்கான ஏற்பாடுகளை ரவிச்சந்திரன், ராமகிருஷ்ணன், டாக்டர் விஜயகுமார், இளங்கோ, பிரகாஷ், ஆறுமுகம், மூர்த்தி என்ற சண்முக வேலாயுதம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.பொன்விழா நிகழ்ச்சிகளை நாகராஜு தொகுத்து வழங்கினார்.
வணிக நிர்வாக இயல் துறை தலைவர் டாக்டர். சித்ரா, டாக்டர் கார்த்திகேயன், பேராசிரியர் தர்ம பெருமாள் மற்றும் மாணவர்கள் விழாவில் பங்கேற்று விழா சிறப்புற அமைய அனைத்து உதவிகளையும் செய்திருந்தார்கள்.
கருத்துரையிடுக