TNPSC Group I-Results 2022

 TNPSC Group I-Results 2022

S.Dhatchayani -Deputy Collector 


TNPSC Exam Strategy  

V.Palanichamy


சமீபத்தில் வெளியான குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று  துணை ஆட்சியராக பணி ஆணை பெற்றுள்ளார், சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த அக்கரைப்பட்டியை சேர்ந்த தாட்சாயணி அவர்கள்

தாட்சாயணி தனது பள்ளிப்படிப்பை எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரத்தில் A G N மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் படித்தவர். தகவல் தொழில்நுட்ப பொறியியல் பட்டப்படிப்பை கோவையிலுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் படித்து முடித்து தற்போது  சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணி புரிந்து வருகிறார்.

இவரது தந்தை திரு செல்வராஜ் சிறப்பு காவல் துணை ஆய்வாளராக பணி புரிந்து, பணி நிறைவு பெற்றவர். தாயார் திருமதி ராஜாமணி ஓர் இல்லத்தரசி . இவரின்  மூத்த சகோதரி விஷ்ணு பிரியா அவர்கள் கடந்த 2019 இல் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று துணை ஆட்சியராக பணி புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குரூப் 1 தேர்வு இவருக்கு முதலாவது முயற்சி என்பது மேலும் சிறப்பு அம்சம்.

Post a Comment

புதியது பழையவை