V.Anuvidhya
Assistant Commissioner of Commercial Tax
சமீபத்தில் வெளியான குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று வணிக வரி உதவி ஆணையர் பணி ஆணை பெற்றுள்ளார் வேலூரை சேர்ந்த அனுவித்யா அவர்கள்.
வேலூரை சேர்ந்த அனுவித்யா அவர்கள் ஆய்வக உதவியாளராக கடந்த 2017 முதல் அரசு பள்ளி ஒன்றில் பணி புரிந்து வருகிறார். தற்காலிகமாக சில காலம் தனியார் பள்ளியிலும், இரண்டு ஆண்டுகள் வேலூர் மின்னணு மாவட்ட மேலாளராகவும் பணிபுரிந்துள்ளார்.
பள்ளிப்படிப்பை வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஹோலி கிராஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பயின்றுள்ளார். கணனி அறிவியல் மேற்படிப்பு பட்டத்தை தொலைதூர வழியில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்றுள்ளார்.
அனுவித்யா அவர்களின் கணவர் திரு A பழனி ராஜன் ஒரு ஆட்டோ ஓட்டுனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதியினருக்கு நான்காவது படிக்கும் மகன் ஒருவரும் உள்ளார். இந்த குரூப் 1 தேர்வு இவருக்கு முதலாவது முயற்சி என்பது மேலும் சிறப்பு அம்சம்.
கருத்துரையிடுக