Deputy Collector
M.Kalaivani
சமீபத்தில் வெளியான குரூப்-1 தேர்வின் முடிவில் தமிழ் வழியில், அதுவும் தொலைதூர கல்வியில் படித்து துணை ஆட்சியராக வெற்றி பெற்றுள்ளார் ஈரோட்டை சேர்ந்த கலைவாணி அவர்கள்.
ஈரோடு மாவட்டம் நசியனூர் கிராமத்தைச் சேர்ந்த இவரது தந்தை ஒரு அரசு அலுவலகத்தின் கடைநிலை ஊழியராக பணி தொடங்கி ஒரு எழுத்தராக ஓய்வு பெற்றவர். ஆசிரியராக பணியை தொடங்கிய இவர் வெற்றி பெற வேண்டும் என்ற உந்து சக்தியால் தமிழ் வழியில் பி காம் மற்றும் பி எஸ் சி கணிதம் ஆகிய இரண்டு பட்டங்களை பெற்றுள்ளார்.
பல அரசு வேலையில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. கடந்த 2019 ஆம் ஆண்டு குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று துணை காவல் கண்காணிப்பாளராக தேர்ந்தெடுத்தப்பட்டார். வண்டலூரில் துப்பாக்கி சூடு பயிற்சியின் போது காலில் தசை பிடிப்பு ஏற்பட்டதால் தொடர்ந்து பயிற்சிகள் ஈடுபட முடியாமல் மீண்டும் குரூப் 1 தேர்வு எழுதி தற்போது துணை ஆட்சியராக பணியை ஏற்க உள்ளார். தனது வெற்றிப்பாதையை நம்மோடு இங்கு பகிர்ந்து கொள்கிறார்.
கருத்துரையிடுக