மாதாந்திர சிரிப்பு விழா

 

216 ஆவது 
மாதாந்திர சிரிப்பு விழா.


     நண்பர்கள் நகைச்சுவை மன்றத்தின் சார்பில் மாதந்தோறும் கடைசி சனிக்கிழமை பாளையங்கோட்டை சிவன் கோயில் அருகில் உள்ள ஆக்ஸ்போ மெட்ரிக் பள்ளியில் வைத்து சிரிப்பு விழா நடைபெற்றுவருகிறது. 

    இம்மாத சிரிப்பு விழாவிற்கு நண்பர்கள் நகைச்சுவை மன்ற தலைவர் கவிஞர் புத்தநேரி.கோ. செல்லப்பா தலைமை தாங்கினார். 

    வந்திருந்தவர்களை துணை செயலாளர் கவிஞர் சு முத்துசாமி வரவேற்றார். துணைத் தலைவர் கவிஞர் பாப்பாகுடி இரா.செல்வமணி முன்னிலை வகித்தார்.

 நண்பர்கள் நகைச்சுவை மன்ற செயலாளரும், பட்டிமன்ற பாவலருமான.முனைவர் கவிஞர் கோ கணபதி சுப்பிரமணியன் சிரிப்பு சிந்தனைகளை சிறப்புரையாற்றினார். 

    தொடர்ந்து நூலகர் அகிலன் முத்துக்குமார், பணி நிறைவு பெற்ற உதவி ஆய்வாளர் பாக்யராஜ், பணி நிறைவு பெற்ற துணை ஆட்சியர் தியாகராஜன் கவிஞர் செ.ச.பிரபு ஆகியோர் நகைச்சுவைகளை கூறினர்.

   சிறந்த நகைச்சுவை துணுக்குகளை கூறிய நூலகர் அகிலன் முத்துகுமாருக்கு  பரிசு வழங்கப்பட்டது. நிறைவாக கவிஞர் சுப்பையா நன்றி கூறினார்


                                     ---------------------


Post a Comment

புதியது பழையவை