எழுத்தும் நீயே .....
சொல்லும் நீயே....
மொழி என்பது பல இனங்களுக்கு ஒரு கருவி; தமிழர்களுக்கோ வாழ்வு. எங்கள் பண்பாடு, நாகரிகம், வரலாறு, நிலம், முக்காலம் அனைத்தையும் தீர்மானிப்பது மொழிதான். தாயே! தமிழ்த் தாயே! எங்கள் உயிராக இருப்பவள் நீயே; எம்மை உலக மாந்தராய் உய்யச் செய்வாயே...
*
Song : Ezhuthum Neeye
Lyrics : Vairamuthu
Composer : Vidyasagar
Singer’s : K.Krishnakumar, Rakshita Suresh
Director : EV Ganesh Babu
Produced by : Vairamuthu
பாடல் வரிகள்
எழுத்தும் நீயே
சொல்லும் நீயே
பொருளும் நீயே
பொற்றமிழ்த் தாயே
அகமும் நீயே
புறமும் நீயே
முகமும் நீயே
முத்தமிழ்த் தாயே
மாறும் உலகில் மாறாதியங்கும்
மாட்சி படைத்தனை நீயே
உனக்கு வணக்கம் தாயே - எம்மை
உலக மாந்தராய் உய்யச் செய்வாயே!
*
ஆயிரமாயிரம் ஆண்டுகள் எங்கள்
ஆன்ற புலவோர் எழுத்தில் இருந்தாய்
உழுதும் விதைத்தும் உலகைச் சமைத்த
உழைக்கும் மக்கள் சொல்லில் இருந்தாய்
ஆழி அலையிலும் ஆயுத மழையிலும்
அழிந்துபடாத பொருளாய் இருந்தாய்
நிலவும் கதிரும் நிலவும் வரையில்
நீயே தமிழே எங்கள் முதல்தாய்
உனக்கு வணக்கம் தாயே - எம்மை
உலக மாந்தராய் உய்யச் செய்வாயே!
*
காலக் கடலில் கரைந்த நாட்களை
ஓலைச் சுவடியில் ஓதி முடித்தாய்
காதல் வீரம் ஞானம் மானம்
கவியில் கலையில் கட்டி வளர்த்தாய்
அகிலத்துக்கே தமிழர் சேதி
அறமே அறமே என்று திளைத்தாய்
எத்துணை தலைமுறை மாறிய போதும்
எம்துணையாக என்றும் நிலைத்தாய்
உனக்கு வணக்கம் தாயே - எம்மை
உலக மாந்தராய் உய்யச் செய்வாயே!
*
ezhuthum neeyae
chollum neeyae
poruLum neeyae
potRamizhth thaayae
ahamum neeyae
puRamum neeyae
muhamum neeyae
muthamizhth thaayae
maaRum ulahil maaRaadhiyangum
maatchi padaithanai neeyae
unakku vaNakkam thaayae - emmai
ulaha maandharaay uyyach cheyvaayae!
*
aayiramaayiram aaNduhaL engaL
aanRa pulavoar ezhuthil irundhaay
uzhudhum vidhaithum ulahaich chamaitha
uzhaikkum makkaL chollil irundhaay
aazhi alaiyilum aayudha mazhaiyilum
azhindhubadaadha poruLaay irundhaay
nilavum kadhirum nilavum varaiyil
neeyae thamizhae engaL mudhaldhaay
unakku vaNakkam thaayae - emmai
ulaha maandharaay uyyach cheyvaayae!
*
kaalak kadalil karaindha naatkaLai
oalaich chuvadiyil oadhi mudithaay
kaadhal veeram nyyaanam maanam
kaviyil kalaiyil katti vaLarthaay
ahilathukkae thamizhar chaedhi
aRamae aRamae enRu thiLaithaay
ethuNai thalaimuRai maaRiya poadhum
emdhuNaiyaaha enRum nilaithaay
unakku vaNakkam thaayae - emmai
ulaha maandharaay uyyach cheyvaayae!
கருத்துரையிடுக