உலகெங்கும் தமிழர் தடம்

     

உலகெங்கும் தமிழர் தடம்


உலகெங்கும் தமிழர் தடம் நூலை எழுதிய அமுதனுக்கு முதல் பரிசை, முன்னாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம் வழங்கினார். அருகில் "கவிதை உறவு" இதழ் நிறுவனர் ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் .




   தினத்தந்தியின் தலைமை செய்தி ஆசிரியராகப் பணிபுரிந்து, 50 ஆண்டுகாலப் பணிக்குப் பின் ஓய்வு பெற்ற எம்.தனசேகரன் என்ற அமுதன், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எவ்வாறு உலகம் முழுவதும் பயணித்து, அந்த நாடுகளில் தங்களது தடத்தைப் பதிவு செய்தார்கள் என்ற ஆய்வாக எழுதிய நூல், உலகெங்கும் தமிழர் தடம்.

  அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடிக்கும் முன்பே தமிழர்கள், அமெரிக்காவின் தென் பகுதியான மெக்சிகோவுக்குச் சென்று, தங்கள் தடத்தைப் பதிவு செய்தார்கள் என்பது போன்ற ஆச்சரியமான பல தகவல்களை இந்த நூல் ஆதாரத்துடன் தெரிவிக்கிறது.

   எகிப்து நாட்டின் முன்னோர்கள் தமிழர்களே என்பதும் ஆதி காலத்தில், தமிழர்களுக்கும் அரேபியா, கிரேக்கம் போன்ற நாடுகளுக்கும் இடையே இருந்த தொடர்புகளும், சீனாவில் காணப்படும் தமிழ்க் கல்வெட்டு சொல்லும் அதிசய செய்திகளும், தென் கொரியாவில் முதன் முதலாக ஆட்சியைத் தொடங்கி வைத்த தமிழ்ப் பெண் குறித்த வியப்பான தகவல்களும், தமிழ் மொழிக்கும் ஜப்பான் மொழிக்கும் உள்ள தொடர்புகளும் இந்த நூலில் விவரிக்கப்பட்டு இருக்கின்றன.

   பள்ளிக்கூடங்களில் பாடப் புத்தகமாக வைக்க வேண்டிய நூல் என்று பேராசிரியர்கள் சாலமன் பாப்பையா. கு.ஞானசம்பந்தன் போன்றவர்கள் பாராட்டிய இந்த நூலுக்கு, சென்னையில் நடைபெற்ற கவிதை உறவு இலக்கிய பரசளிப்பு விழாவில் முதல் பரிசும் பொற்கிழியும் வழங்கப்பட்டது.


                                             ---------------------------------------


Post a Comment

புதியது பழையவை