தன்னம்பிக்கை திருவிழா-- செட்டிக்குறிச்சி
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம்,செட்டிகுறிச்சி அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தன்னம்பிக்கை திருவிழா.
இந்தத் தன்னம்பிக்கை திருவிழாவிற்கு மதுரை பிரபல ஜெயபிரபா ஜூவல்லர்ஸ் அதிபரும்,செட்டிகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவருமான திரு கே. வி. கே .ஆர் .பிரபாகரன் அவர்கள் தலைமை வகித்தார் .
தமிழ்ச்செம்மல் முனைவர் வை. சங்கரலிங்கனார் முன்னிலை வகிக்க, தலைமை ஆசிரியர் எஸ் ரவிச்சந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து திரைப்பட நடிகரும் ,கல்வி ஆலோசகருமான அஜய் இரத்தினம் அவர்களின் சிறப்புரை மற்றும் வழிகாட்டல் நிகழ்வு நடைபெற்றது.
இறுதியாக ஓவிய ஆசிரியர் எஸ் பழனி குருசாமி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
மாணவர்கள்" நம்மால் முடியும் "என்ற நம்பிக்கையை பெற்றார்கள்.
கருத்துரையிடுக