மாவட்ட கலை விழா மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு விழா

 

மாவட்ட கலை விழா 

மற்றும் 

வாக்காளர் விழிப்புணர்வு விழா



நெல்லை மாவட்டத்தின் தமிழர் பாரம்பரிய கலைகள் ஓரிடத்தில் சங்கமமான மாவட்ட கலை விழா 2022 பாளையங்கோட்டையில் கோலாகலமாக நடந்தது :- 

       இந்திய அரசு நேரு யுவ கேந்திரா திருநெல்வேலி, நெல்லை மாவட்ட அரசு இசைப் பள்ளி, NPNK - நல்லதை பகிர்வது நம் கடமை நண்பர்கள் மன்றம், FOP நெல்லை தென்காசி ஆகிய அமைப்புகள் இணைந்து பாளை  சாராள் டக்கர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் வைத்து மாவட்ட கலை விழா  2022 மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

     திருநெல்வேலி நேரு யுவகேந்திரா,தேசிய இளையோர் படை தொண்டர் M.மது பாலா வரவேற்புரை வழங்கினார்.

   நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு பரதம், வாய்ப்பாட்டு, வயலின் இசை, ஒயிலாட்டம், சிலம்பம், வால் சண்டை என பத்துக்கும் மேற்பட்ட நிகழ்த்து கலைகளை பார்வையாளர்கள் முன் நிகழ்த்திக் காட்டினார்கள்.

      இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் சலீமா வழங்கி தான் இரண்டு மணி நேரம் மாணவர்களின் திறமைகளை வியந்து பார்த்ததாக பேசினார்.

       மேலும் விழாவில் கலந்து  கொண்ட அரும்புகள் அறக்கட்டளை  நிர்வாக இயக்குநர் முனைவர்.இரா. மதிவாணன் வாழ்த்துரை வழங்கும் போது மாணவர்களுக்கு இந்த போட்டி எவ்வளவு பெரிய வாய்ப்பு என்பது பற்றி கூறி மாணவர்களுக்கு வாழ்த்துக்களை கூறினார்.



        இந்த விழாவில் கலந்து கொண்ட நெல்லை மாவட்ட இளைஞர் சமுதாய மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் வைரவராஜன் குடவோலை முறை பற்றிய கலை நிகழ்வுகள் மூலம் திறமைகளை வெளிக்காட்டி வெற்றி பெறுவது குறித்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

    நிறைவாக பேசிய முனைவர்.கவிஞர்.கணபதி சுப்ரமணியன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் பற்றியும் வாக்கின் அவசியம் மற்றும் நேர்மையாக வாக்களிக்க வேண்டியதன் முக்கியத்துவம் என பல்வேறு விஷயங்களை பற்றி பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் விழாவில் கலந்து கொண்ட அனைவரும் வாக்காளர் உறுதிமொழி எடுத்தனர்.

       விழாவில்,  தென்காசி மாவட்ட FOP - அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் N. M. மிதார் முகைதீன் , ராக் டேன்ஸ் அகடெமி நிறுவனர் முனைவர் ஆரோக்கியம், கவிஞர் சு.முத்துசாமி, மாவட்ட அரசு இசைப்பள்ளி ஆசிரியர்கள் கவரிசங்கர், முனைவர் விஜயலெட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


        இந்த நிகழ்ச்சியை  NPNK - நல்லதைப் பகிர்வது நம் கடமை நண்பர்கள் மன்றம்.ஒருங்கிணைப்பாளர்.எழுத்தாளர். மு.வெ.ரா தொகுத்து வழங்கினார்.


        விழாவிற்கான ஏற்பாடுகளை திருநெல்வேலி நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர்,தேசிய இளையோர் படை தொண்டர், செல்வன். M. மாரியப்பன்  ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.


                                                                   ---------------------------------

Post a Comment

புதியது பழையவை