NEET 2021 Results - R.Dharanisri - Topper from Government Schools - Tamil Nadu Topper- MBBS in MMC


NEET 2021 Results 

 R.Dharanisri 

Topper from Government Schools 

Tamil Nadu Topper

 MBBS in MMC

2021ம் ஆண்டு நடைபெற்ற NEET தேர்வில் அரசு பள்ளியில் படித்த மாணவி தாரணிஸ்ரீ 447 மதிப்பெண்கள் பெற்று காஞ்சிபுரம் மாவட்ட அளவில் அரசு பள்ளி மாணவர்களில் முதலிடம் பிடித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அய்யன்பேட்டை கிராமத்தை சேர்ந்த இவர், எகனாம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்துள்ளார். தனது முதல் முயற்சியிலேயே மாவட்டத்தில் முதல் இடம் பிடித்து சாதனை செய்து சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்க சேர்ந்துள்ளார்.


சாதாரண குடும்பத்தை சேர்ந்த இவருக்கு 11வது வகுப்பு படிக்கும்போது நீட் தேர்வில் வெற்றி பெறுவோம்  என்ற நம்பிக்கை இல்லையாம். அதன்பிறகு அவரது பள்ளி ஆசிரியர்களால் அரசு நடத்தும் நீட் பயிற்சியில் சேர்ந்து தயார் செய்துள்ளார். அந்த நேரத்தில் அவர்  நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒருவரை சந்தித்தது , மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான நம்பிக்கையை அவருக்கு  ஏற்படுத்தியுள்ளது .அவர்தான் CBSE புத்தகங்களை படிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். அந்த வழியில் படித்து இன்று சாதனையும் செய்துள்ளார். அவருக்கு நமது வாழ்த்துக்கள். 


NEET தேர்வில் தான் வெற்றி பெற்ற அனுபவத்தையும் மாணவர்கள் வெற்றியை எவ்வாறு அடைய முடியும் என்ற தனது அனுபவத்தையும் நமக்கு இங்கு சொல்ல இருக்கிறார் வாருங்கள் கேட்போம்.


In the NEET 2021 results, Ms.R. Dharanisri from Kanchipuram district of Tamil Nadu topped the list of government school students in the district. She scored 447 marks in her very first attempt. She hails from Iyyanpettai village near Kanchipuram.  Belongs poor weaving family, father is weaver and mother is a home maker.  She did her schooling in Ekanpattai Government Girl's Higher Secondary School, Kanchipuram. Earlier, she was hesitant to pursue her doctor dream. Meeting a successful senior, who is pursing medicine at Government College in Tamil Nadu changed her fortunes. In addition family members and teachers also motivated her to write NEET she got District Rank among  Kanchipuram Government School students. In the counseling, she chose the prestigious Madras Medical College for her MBBS Course. Great achievement, we also wish her, "All the Best"


E-Mail: geethasamypublishers@gmail.com

Instagram: Geethasamypublishers

Twitter: GeethasamyPublishers


Post a Comment

புதியது பழையவை