சென்னை புத்தக கண்காட்சியில் "சிவகாமி புத்தகாலயம்"


சென்னை புத்தக கண்காட்சியில் "சிவகாமி புத்தகாலயம்"








கலைமாமணி தாமரைசெந்தூர்பாண்டி எழுதி, 1995,96களில் வெளி வந்து 15000 பிரதிகள் விற்பனையாகி, சாதனை புரிந்த "வடலிவிளை செம்புலிங்கம்" வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 27 ஆவது ஆண்டில் மீண்டும் வந்துவிட்டது! 

நெல்லை மாவட்டத்தின் எல்லை இல்லா வீரம் செறிந்த ஒரு மாவீரன்! வெள்ளையர் ஆட்சியில் கொள்ளையன் என்று பெயர் எடுத்தாலும், இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அள்ளிக்கொடுத்த மாபெரும் வள்ளல் மாவீரன் செம்புலிங்கம். 

வீரதீர செயல்களில் தன்னை மிஞ்சுபவர்கள் யாருமில்லை என்று நிரூபித்தவர்! நட்புக்கும், மத நல்லிணக்கத்திற்\கும் அதிக இடம் கொடுத்த உத்தமன்! எத்தனை முயன்றும் வெள்ளை ஏகாதிபத்தியத்தால்அவனை நெருங்கி முடியவில்லை! 

நண்பனை இழந்து உயிர் வாழ விரும்பாத அவனுடைய வீர வரலாறுதான் "வடலிவிளை செம்புலிங்கம்!" 

முந்நூற்றி எழுபத்தி ஆறு பக்கங்களில் மிக நேர்த்தியாக, திடுக்கிடும் சம்பவங்களுடன், விறுவிறுப்பாக எழுதப்பட்ட உண்மை கால வரலாற்று நூல் இது! கையில் எடுத்தால் படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாது என்ற சிறப்பான நூல் இது!




"தாமரை செந்தூர்பாண்டி நாவல்கள்" என்ற  இந்த நூலில் 16 நாவல்கள், 1200 பக்கங்களில் திரட்டித் தரப்பட்டுள்ளது! 

அனைத்து நாவல்களும் விறுவிறுப்பாகவும், மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் மிகச் சிறந்த கதைகளாக அமைந்துள்ளது. இந்நூலின் சிறப்பாகும்! இந்த நூல், 

ஆராய்ச்சி மாணவர்களுக்கு அவசியம் துணையாக இருக்க வேண்டிய நூலாகும். இது படிக்க, பாதுகாக்க உகந்தது இதன் விலை ரூ 900/- மட்டுமே.



"எனது வடகிழக்குப் பயணம்" என்ற பயணக்கட்டுரை நூல், பயணம் செய்பவர்களுக்கும், பயணம் செய்ய விரும்புபவர்களுக்கும் கையில் இருக்க வேண்டிய ஒரு அருமையான கையேடு நூலாகும்! 

இந்த நூலை நாவல் ஆசிரியர் தாமரை செந்தூர்பாண்டி ஒரு நாவலை போன்ற விறுவிறுப்புடன் காமெடி கதைகளும் புதிய புதிய வரலாற்று குறிப்புகளும், புவியியல்  சார்ந்த செய்திகளும் கலந்து, எங்கெங்கு, எப்படிச் செல்லலாம், என்னென்ன செலவுகள் வரும், எவ்வளவு எளிதாகப் பயணிக்கலாம் என்பன போன்ற, தன் அனுபவங்களோடு, அவர் பார்த்த, இந்தோ சைனா எல்லையின் அழகையும், ஆபத்தையும் தத்ரூபமாக விவரிக்கின்றார். 

படிக்க படிக்கப் பரவசம் ஏற்படுகின்ற அருமையான நூலாகும்! இதன் விலை 120 ரூபாய் மட்டுமே.



"எனது இமாலயப் பயணம்"என்ற இந்த நூலில் வட இந்தியாவின் முக்கியமான இடங்கள்-அவற்றின் புவியியல், வரலாறு, ஆன்மீக விளக்கங்களை சுவை மிகுதியுடன் எழுதப்பட்ட புத்தம்புது பயணக் கட்டுரை நூல். படிக்கப் படிக்க ஆவலைத் தூண்டும் இந்த நூல், பயணங்கள் செய்வோருக்கும், செய்ய விரும்புபவர்களுக்கும் கையேடாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!




மனிதவள மேம்பாட்டுத்துறை வல்லுநர். எஸ். ரத்தினவேல் ராஜன் எழுதிய, முதல் நூலும், முத்தான நூலுமான "உருப்படியாய் ஒரு நிமிடம்" என்ற உற்சாகமூட்டும் கட்டுரைத் தொகுப்பு இது! 

படித்துக்கொண்டு இருக்கின்ற, வேலை தேடிக் கொண்டிருக்கின்ற, வாழ்க்கையில் உயரவேண்டும் என்று துடிக்கின்ற இளைஞர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு  அறிவுப் பெட்டகம் இது!

 இருபத்தி எட்டு தலைப்புகளில், இளைஞர்கள் முன்னேறுவதற்கு ஏற்ற தலைப்புகளில், திருக்குறள் துணையோடு, சின்னச்சின்னச் சம்பவங்களும், கதைகளும், வரலாற்று, இதிகாசக் குறிப்புகளும் கலந்து, பாலும், தேனும், பருப்பும், தீஞ்சுவையும் கலந்து ஊற்றியதைப் போன்ற, கற்கண்டாய் இனிக்கும் அமுதசுரபி இந்த நூலாகும்! 

இது ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய நூல் என்பதில் ஐயமே இல்லை  இதன் விலை 100 ரூபாய் மட்டுமே!












Post a Comment

புதியது பழையவை