600 ஆண்டுகள் பழைமையான அதிசய தர்கா

 

600 ஆண்டுகள் பழைமையான அதிசய தர்கா

கூடுவிட்டுக் கூடு பாயும் ஆற்றல் மிக்கவராக திகழ்ந்த முகமது அன்சர் இலா இஸ் வலியுல்லா அவர்களுக்கு தன் தீராத கண்டமாலை நோயினைத் தீர்த்து வைத்ததற்காக எட்டயபுரம் மன்னர் மேற்கு தொடர்ச்சி மலையில் கூமாபட்டி அருகில் இரண்டு கல் மண்டபங்கள் அமைத்துக் கொடுத்தார்.

 அந்தக் கல் மண்டபங்களை நாம் காணவேண்டும் என்றால் வனவிலங்குகள் நிறைந்த அடர்ந்த காட்டின் ஊடாக பயணித்து மலை ஏறிச் செல்ல வேண்டும். 

தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனல் அவ்வாறு பயணித்து இந்த அதிசய கல் மண்டப தர்கா vlogஐ உங்களுக்காக வழங்குகிறது. 
கூமாபட்டியில் அடங்கியிருக்கும் இரண்டு அவுலியாக்களில் ஒருவர்தான் ஒருவர்தான் முகமது அன்சர் இலா இஸ் வலியுல்லா. மற்றொருவர் பால மஸ்தான் வலியுல்லாஹ். இவ்விடத்திற்கு செல்ல ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பேருந்துகள் உண்டு. இது வத்திராயிருப்பு வட்டத்தில் அமைந்திருக்கக் கூடிய ஒரு ஊர். இந்த கல் மண்டபம் பகுதிக்கு வனப்பகுதிக்குள் செல்ல வேண்டுமென்றால் சுமார் ஐந்து கிலோமீட்டர் நடந்துதான் செல்ல வேண்டும். 

அதற்கு வனத்துறையினரின் அனுமதியையும் பெற வேண்டும். மலையின் மீது ஏறி விட்டால், மூலிகைகள் நிறைந்த அடர்ந்த வனம் ஒன்று உண்டு அந்த மலை வனப்பகுதியில் சிதிலமடைந்த நிலையில் காணப்படும் இந்த கல் மண்டபதர்காவில் இருக்கும் குகையில்தான் அன்சர் இலா இஸ் வலியுல்லா திக்ர் செய்ததாகவும் கூறப்படுகிறது. வாய்ப்பு இருந்தால் ஒரு ட்ரெக்கிங் ஆக நீங்களும் இந்தக் கல்மண்டபத்திற்குச் சென்று வரலாம்.

தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனல் அவ்வாறு பயணித்து இந்த அதிசய கல் மண்டப தர்கா vlogஐ உங்களுக்காக வழங்குகிறது.

Post a Comment

புதியது பழையவை