முதியோர் இல்லத்தில்....
தமிழ்நாடு நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் மார்லிங் முதியோர் ஆதரவற்றோர் இல்லத்தில் 60 பேர் வாழ்கின்றார்கள். பெற்றெடுத்த பிள்ளைகளே பெற்றோர்களை தூக்கி எறிந்து வீசும் அரக்கர்கள் இன்னும் வாழ்கிறார்கள். தன் உயிர் தந்த வேர்களை வெறுத்த விழுதுகளாய் வாழும் மனிதர்கள் நிலை என்னவென்று உணராமல் சொத்துக்காக சுயநலத்திற்காகவும் வாழும் ஒரு கூட்டம் இன்னும் இருக்கிறது இந்த உலகத்தில். கரம் பிடித்த கையும் உதறி விட்டதால் செயல்படாமல் துடிக்கும் நெஞ்சங்களும் இங்கு உண்டு.
உறவுகள் தந்த பிச்சைப்பாத்திரம் அது மட்டுமே இங்கு மிஞ்சியிருந்தது. இந்த இல்லத்தில் ஒற்றுமையாய் நண்பர்களாய் உறவுகளாய் தனக்கென்று ஒரு உலகமாய் எண்ணி வாழும் இதயங்கள் இங்கு கண்டேன். ரத்தத்தை தாய்ப்பாலாய் கொடுத்த தாயையும் தோள் மீது போட்டு வளர்த்த தந்தையையும் தூக்கி எறிய விதையாய் விழுந்த இடம்தான் இந்த இல்லம்.
இனிவரும் காலங்களில் இனியாவது இந்த முதியோர் இல்லம் அனாதை இல்லம் ஆதரவற்றோர் இல்லம் கருணை இல்லம் இல்லாமல் இருக்கட்டும்.
இல்லாதவர்க்கும் இயலாதவர்களுக்கும்
நம்மால் முடிந்த உதவியை செய்வோம்.
அன்பை விதைப்போம்!
உதவிக்கரம் நீட்டுவோம்!
கருத்துரையிடுக