அனைத்திந்திய தமிழ்ச் சங்கமும் செங்கரும்பு மாத இதழும் இணைந்து நடத்திய *ஆற்றல்மிகு ஆவடியாா்* நூல் வெளியீட்டு விழா, சென்னை மேற்கு முகப்பேரில் உள்ள அமுதா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில், முனைவா் தாமரைப்பூவண்ணன் தலைமையில் நடை பெற்றது.
தமிழ்த்துறை அமைச்சா், மாண்புமிகு மாஃபா க. பாண்டியராஜன் நூலை வெளியிட , தமிழ்ச்செம்மல்,எழுத்தாளர், முனைவா் அமுதா பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.
அனைத்து இந்திய தமிழ் எழுத்தளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் இதயகீதம் இராமானுஜம் , பொதிகைத் தொலைக்காட்சி முன்னாள் இயக்குநர் கலைமாமணி பால ரமணி, கவிதை உறவின் ஆசிரியர் கலைமாமணி கவிஞர் ஏர்வாடி இராதாகிருக்ஷ்ணன் ,மேனாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம்,நூலின் நாயகர் சொல்லின் செல்வர் ஆவடி குமார் , செங்கரும்பின் ஆசிரியர் முனைவர் தாமரைப் பூவண்ணன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கவிச்சுடர், முனைவர் சிந்தைவாசன்...மற்றும் பலர்...
கருத்துரையிடுக