கண்ணதாசன் எழுத்துரு!
எழுத்துரு ஓவியர் நாணா
எழுத்துரு ஓவியர் நாணா! ( ஹிந்து தமிழ் நாளிதழிலில்)
வடிவமைப்பில் புதுமையை நாடுபவர்கள் தமிழில் தொடர்ந்து புதுப்புது எழுத்துருக்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள் அவர்களில் ஒருவர் நாணா. கையெழுத்தைக் கொண்டு புதிய எழுத்துருக்களை உருவாக்குவது நாணாவின் தனி அடையாளம். சுஜாதா, கண்ணதாசன் ஆகியோர்களின் கையெழுத்தில் புதிய எழுத்துருக்களை உருவாக்கிய நாணா… அடுத்து அண்ணா, எம்ஜிஆர் ஆகியோர் கையெழுத்துக்களை எழுத்துருக்களாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
வயதான பிறகு கை தடுமாறும்… கையெழுத்தே மாறும். அதை தவிர்ப்பதற்கு கையெழுத்துகளை கொண்டு எழுத்துருக்களை உருவாக்கிச் கணினியில் தட்டச்சு செய்யலாம், என்கிறார். அவர் தமிழ் இணையப் பல்கலைக் கழகத்துக்கு 50 தமிழ் எழுத்துருக்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். அவற்றில் முல்லை, மருதம் என்று இரண்டு எழுத்துக்கள் சமீபத்தில் வெளியான தமிழ்நாட்டுப் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன.
கருத்துரையிடுக