நடிகர் கமலஹாசன்
பாடிய
கொரானா விழிப்புணர்வு பாடல்
நடிகர் கமலஹாசன் பாடிய கொரானா விழிப்புணர்வு பாடல்
பொது நலமென்பது தனி மனிதன் செய்வதே தன் நலமென்பதும் தனி நபர்கள் செய்வதே
பொது நலமென்பது தனி மனிதன் செய்வதே தன் நலமென்பதும் தனி நபர்கள் செய்வதே
அலாதி அன்பிருந்தால் அனாதை யாருமில்லை
அடாத துயர் வரினும் விடாது வென்றிடுவோம்
அகண்ட பாழ் வெளியில் ஓர் அணுவாம் நம்முலகு - அதில் நீரே பெருமளவு. நாம் அதிலும் சிறிதளவே
சரி சமம் என்றிடும் முன்பு உனைச் சமம் செய்திடப் பாரு
சினையுறும் சிறு உயிர் கூட உறவெனப் புரிந்திடப் பாரு
சரி சமம் என்றிடும் முன்பு உனைச் சமம் செய்திடப் பாரு
சினையுறும் சிறு உயிர் கூட உறவெனப் புரிந்திடப் பாரு
உலகிலும் பெரியது உம் அகம் வாழ் அன்பு தான்
உலகிலும் பெரியது நம் அகம் வாழ் அன்பு தான்.
புதுக் கண்டம் புது நாடு என வென்றார் பல மன்னர் அவர் எந்நாளும் எய்தாததை சிலர் பண்பால் உள்ளன்பால் உடன் வாழ்ந்து உயிர் நீத்து அதன் பின்னாலும் சாகாத உணர்வாகி உயிராகிறார்
சரி சமம் என்றிடும் முன்பு உனைச் சமம் செய்திடப் பாரு சினையுறும் சிறு உயிர் கூட உறவெனப் புரிந்திடப் பாரு
சரி சமம் என்றிடும் முன்பு உனைச் சமம் செய்திடப் பாரு சினையுறும் சிறு உயிர் கூட உறவெனப் புரிந்திடப் பாரு
அழிவின்றி வாழ்வது நம் அறிவும் அன்புமே
அழிவின்றி வாழ்வது நம் அறிவும் அன்புமே
சரி சமம் என்றிடும் முன்பு உனைச் சமம் செய்திடப் பாரு சினையுறும் சிறு உயிர் கூட உறவெனப் புரிந்திடப் பாரு
அழிவின்றி வாழ்வது நம் அறிவும் அன்புமே..
----------------------------------------
கருத்துரையிடுக