நீங்களும் ஐஏஎஸ் அதிகாரி ஆகலாம்-14
சிவில் சர்வீசஸ் தேர்வு
முதல்நிலைத் தேர்வு - 14
நெல்லை கவிநேசன்
தயாரிப்பைத் தொடங்குவோம்...
“ஐ.ஏ.எஸ். தேர்வுதான் தேர்வுகளிலேயே மிகவும் கஷ்டமானது” என்பது சிலரது கருத்து.
“பள்ளியில் படிக்கும்போதே இந்தத் தேர்வுக்கான தயாரிப்பைத் தொடங்கிவிட்டால், இந்தத் தேர்வு மிகமிக எளிதானது” இப்படியும் சிலர் கருதுகிறார்கள்.
“சிவில் சர்வீசஸ் தேர்வு என்பது ஒரு போட்டித் தேர்வு. இந்தத் தேர்வில் வெற்றி பெற முறையான தயாரிப்பு மிகவும் அவசியம்” என்றும் சிலர் எண்ணுகிறார்கள்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற உயர் பணிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வு கடினமானதா? எளிதானதா? - என்னும் விவாதம் இன்றும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தத் தேர்வு கடினமாகத் தெரிவதும், எளிதாகத் தோன்றுவதும் போட்டியாளர்களின் மனநிலையைப் பொறுத்துதான் அமைகிறது.
மிகச்சிறந்த முறையில் தேர்வுக்கான தரமான தயாரிப்பை மேற்கொண்ட ஒரு போட்டியாளருக்கு, இந்தத்தேர்வு மிகவும் எளிதாகத் தோன்றுகிறது. ஆனால், தேர்வு நேரத்தில் மட்டும், தேர்வுக்கான தயாரிப்பை மேற்கொள்பவர்களுக்கு, இந்தத் தேர்வு மிகவும் கடினமாகதாகவே காட்சியளிக்கிறது.
பொதுவாக, தேர்வு எழுதும்போது, தான் தெரிந்து வைத்திருந்த தகவல்களின் அடிப்படையில் கேள்விகள் வந்தால், “தேர்வு மிக எளிது” என்கிறார்கள். ஆனால், போட்டியாளரின் அறிவுக்கு ஏற்ப கேள்விகள் அமையவில்லையென்றால் உடனே “தேர்வு மிகவும் கடினம்” என்று முத்திரைக் குத்துவதை சிலர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
“இந்தத் தேர்வு மிகவும் எளிது” என்பதை போட்டியாளர்கள் தங்கள் தரமான தேர்வு தயாரிப்பின்மூலம் (Exam Preparations) நிரூபித்துவிட முடியும். சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்கள் முதலில் “இந்தத் தேர்வு மிகவும் எளிதான தேர்வு” என்னும் மனநிலையைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். தேர்வு பற்றிய எண்ணம் ஒரு போட்டியாளருக்குத் நேர்மறையாக (Positive) இல்லையென்றால், இந்தத் தேர்வை வெற்றிகரமாக சந்திப்பதில் பிரச்சினைகள் உருவாகிவிடும்.
“எந்தவொரு தேர்வும் எளிதானதும் அல்ல. கடினமானதும் அல்ல. தனது மனநிலைக்கு ஏற்பவே ஒருவர் அந்தத் தேர்வு பற்றிய எண்ணத்தை வெளிப்படுத்துகிறார்” என்பதை இதன்மூலம் உணர்ந்துகொள்ளலாம்.
சிவில் சர்வீசஸ் தேர்வில் எத்தனை சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்? என்பது முக்கியம் அல்ல. ஒருவரைவிட மற்றவர் அதிக மதிப்பெண்கள் பெற்றுவிட்டால், அதிக மதிப்பெண்கள் பெற்றவருக்கே பணிகள் வழங்கப்படும். உதாரணமாக- ஒருவர் சிவில் சர்வீசஸ் தேர்வில் 80 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். இந்த மதிப்பெண்களை கருத்தில்கொண்டு இது மிக சிறந்த மதிப்பெண் என்று முடிவுக்கு வர முடியாது. அவரோடு இணைந்து தேர்வு எழுதிய போட்டியாளர்கள் பலர், 80 சதவீத மதிப்பெண்களுக்குமேல் பெற்றுவிட்டால், மிக அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படும் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, கவனமாகப் படித்து, தேர்வில் மிக அதிக மதிப்பெண்கள் பெறுவதுதான் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதும் போட்டியாளர்களின் முக்கிய நோக்கமாக அமைய வேண்டும்.
சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத மிக துல்லியமான விடைகளை எழுதும் திறன் படைத்தவர்களாக போட்டியாளர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். சின்னச்சின்ன நுணுக்கமான தகவல்களிலும், கவனம் செலுத்தி பொதுஅறிவை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். சிறு தகவல்கள்கூட மிகப்பெரிய வெற்றிக்கு துணைநிற்கும் என்பதை மனதில்கொண்டு, தேர்வுத் தயாரிப்பை மேற்கொள்வது நல்லது.
சிவில் சர்வீசஸ் தேர்வின் முதல்நிலைத் தேர்வில் (Preliminary Examination) கேள்விகள் “கொள்குறிவகை வினா அமைப்பில்
(Objective Type Questions) இடம்பெறும். அதாவது-ஒரு கேள்விக்கு 4 விடைகளை தந்து, அதில் சிறந்த விடையை தேர்ந்தெடுக்கும் வகையில் கேள்விகள் அமைக்கப்பட்டிருக்கும். தேர்வில்-ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே கேள்விகள் இடம்பெறும்.
“நான் தமிழ் மீடியத்தில்தான் படித்தேன். கேள்விகள் ஆங்கிலத்தில் இருந்தால் என்னால் எப்படி வெற்றி பெற முடியும்?” என்று எண்ணும் சிலர் இந்தத் தேர்வு எழுத தயக்கம் காட்டலாம். சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் கேள்விகள் ஆங்கிலத்தில் இருந்தாலும், பட்டப்படிப்புவரை ஆங்கிலம் படித்த ஒரு பட்டதாரியால் மிக எளிதாக கேள்வியைப் புரிந்துகொள்ள முடியும். முதல்நிலைத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பட்டப்படிப்பு தரத்தில்(Degree Standard) உருவாக்கப்பட்டிருப்பதால், பட்டதாரிகள் இந்தத் தேர்வை எழுதி எளிதில் வெற்றி பெறலாம்.
சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் கேள்விகள் கொள்குறி வகை வினா அமைப்பில் இருப்பதால், இந்தத் தேர்வுக்கு தயார் செய்பவர்களில் பலர், பொதுஅறிவு சம்பந்தப்பட்ட கொள்குறிவகை வினா, விடைகொண்ட புத்தகங்களை மட்டும் வாங்கிப் படித்தால் போதும் என நினைக்கிறார்கள். சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வுக்கு தயார் செய்யும்போதே, முதன்மைத் தேர்வுக்கும் (Main Examination) சேர்த்து தயார் செய்ய வேண்டியது அவசியமாகும். இப்படி-முதல்நிலைத் தேர்வுக்கும், முதன்மைத் தேர்வுக்கும் சேர்த்து ஒரேநேரத்தில் தயாரிப்பை மேற்கொள்வதை “ஒருங்கிணைந்த தயாரிப்பு” (Integrated Preparations) என அழைக்கிறார்கள்.
முதல்நிலைத் தேர்வுக்கும், முதன்மைத் தேர்வுக்கும் ஒரேநேரத்தில் தயாரிப்பை மேற்கொள்ளும்போது சிவில் சர்வீசஸ் தேர்வின் கேள்விகளின் அமைப்பைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். முதல்நிலைத் தேர்வில் கேள்விகள் “கொள்குறி வகை வினா” (Objective Type Questions) அமைப்பில் இருக்கும். ஆனால், முதன்மைத் தேர்வில் கேள்விகள் எளிதாகத் தோன்றினாலும் போட்டியாளர்கள் விளக்கமாக, விரிவாக பதில் எழுத வேண்டும். இதனால், இந்தக் கேள்விகளை விரிவான விளக்க வகைக் கேள்விகள் (Descriptive Type Questions) என அழைப்பார்கள். தேர்வுக்கு ஒருங்கிணைந்த தயாரிப்பை மேற்கொள்ளும்போது, மிகவும் கவனமாக கேள்விகளின் அமைப்புக்கு ஏற்றவாறு சரியான பதிலை தருவது எப்படி? என்பதைப்பற்றி அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
கொள்குறி வகைக் கேள்விகளை பொதுவாக 5 வகையாகப் பிரிக்கலாம். அவை -
1.எளிய நேரடிக் கேள்விகள் (Simple Straight Questions)
2.தொகுப்புக் கேள்விகள் (Compiled Questions)
3.குழுக் கேள்விகள் (Group Questions)
4.சொற்றொடர்களின் உண்மைநிலை கேள்விகள்.(The Truth of Statement Questions)
5.பகுத்தறிவுத் திறன் கேள்விகள் (Reasoning Type Questions)
- ஆகியவை ஆகும்.
1. எளிய நேரடிக் கேள்விகள் (Simple Straight Questions)
எளிமையாகவும், நேரடியாகப் பதிலை அடையாளம் கண்டுகொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்ட கேள்விகளை “எளிய நேரடிக் கேள்விகள்”(Simple Straight Questions) என அழைப்பார்கள். பொதுவாக இந்த வகைக் கேள்விகளுக்கு போட்டியாளர்களால் மிக எளிதான முறையில் பதில் எழுதிவிட முடியும்.
எளிய நேரடிக் கேள்விகள் மிகவும் எளிமையாக இருப்பதால், தேர்வுக்கு மிக அதிகமான தயாரிப்பை மேற்கொண்டவர்கள் “நாம் எவ்வளவு நேரம் விழித்திருந்து படித்தோம். இவ்வளவு எளிமையாக கேள்விகளை கேட்டுவிட்டார்களே” என்று எண்ணுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. ஆனால், அதேவேளையில், கடைசி நேர தேர்வுத் தயாரிப்பில் ஈடுபட்டவர்களுக்கு இந்த எளிய நேரடிக் கேள்விகள் மிகவும் உதவும் வகையில் அமையும்.
எளிய நேரடிக் கேள்விகள் அமையும் விதத்தைப் பார்ப்போம்.
கேள்விகள் :
1. Which is the largest palace of Mughal period?
(a) Maryama Mahal (b) Jodhabai Palace (c) Panch Mahal (d) Rang Mahal
2. The National Technology Day is celebrated on which of the following day?
(a) May 8 (b) May 11 (c) June 2 (d) June 20
3. Where was the first Biosphere Reserve set up in India?
(a) Andaman and Nicobar (b) Nilgiri (c) Himalayas (d) Gulf of Kutch
4. What is the name of India’s supersonic cruise missile?
(a) Prithvi (b) Akash (c) Tejas (d) Brahmos
5. Mahatma Gandhi set out on a 388 km march from Sabarmati to Dandi to
challenge the imposition of the Salt Law. The march was started on which day
(a) March 13, 1930 (b) April 6, 1930 (c) March 11, 1930 (d) March 9, 1930
6. Who gave the slogan: “Give me blood and I Promise you freedom”?
(a) Chandra Shekhar Azard (b) Subhash Chandra Bose (c) Bhagat Singh (d) Iqbal
7. Nanda Devi peak forms a part of
(a) Assam Himalayas (b) Kumaon Himalayas
(c) Nepal Himalayas (d) Jammu and Kashmir Himalayas
8. When was the federal Court established at Delhi?
(a) 1932 (b) 1935 (c) 1937 (d) 1939
9. The study of fruits and seeds is called
(a) Cetology (b) Carpology (c) Chronology (d) Cardiology
10. The Nagarjuna Dam is located on the
(a) Godavari (b) Kaveri (c) Krishna (d) Narmada
ANSWERS
| |||||||||
1. (b)
|
2. (b)
|
3. (b)
|
4. (d)
|
5. (a)
|
6. (a)
|
7.(b)
|
8.(c)
|
9.(b)
|
10.(c)
|
«
கருத்துரையிடுக