சிலையாய் நின்றதனோ எங்கள் சின்னையா...?
~ இல.நாதன்
காயாமொழி
தந்த
கற்பகவிருட்சமே !
இரப்பது
இந்திரன் என்று
தெரிந்தும்.....
அங்கம்தங்கிய
கவசமும், குண்டலமும்
அறுத்துத்தந்த
"ஆதித்த"வழித்தோன்றல்
அங்கதேசத்து
அரசன் கர்ணனின்
இரண்டாம் பிறப்பே !
தென் இலங்கை
தெரிய
தென்காசி கோபுரம்
தந்த
இரண்டாம் பராக்கிரமபாண்டியரே !
நம் ஊர் கோவில்களின்
அஷ்டபந்தன கும்பாபிஷேகத்திற்கு
ஒன்பதாவது பந்தனமாக
உங்கள் பொருளுதவியே
பெரும்உதவியாய் செய்த
புரவலரே !
நம் செந்திலாண்டவன்
தேர்கால்கள்
எம் வீதிகளில்
வலம் வர
வடம் தந்த
"ஆதித்த வம்சாவளியின்"
அரிய வாரிசே !
சிக்கலில் வேல் வாங்கி
செந்தூரில் சம்காரம் செய்த
ஜெயந்திநாதனுக்கு
செவ்வேல் தந்த
செவ்வேளே !
எம் ஏழை மாணவர்களின்
கல்லுரிக் கல்விக்கனவை
நனவாக்கிய..
"தமிழர்தந்தை"
அய்யா ஆதித்தனார் அவர்களின்
அடியொற்றிய
அருந்தவப்புதல்வரே !
உங்கள்
பத்திரிகை அலுவலகத்திலும்..
பணியாளர் சீருடை அணிந்து
பணிகள் கற்ற பின்பே..."தினத்தந்தி"
அதிபர் பதவியை
அலங்கரித்த அதிசயமே !
விளையாட்டு,ஆன்மிகம்
கலை,இலக்கியம்,
மேதகு மேயர்.........
அலங்கரித்த
அத்தனை பதவிகளிலும்
தமிழனை கர்வப்படுத்திய
கெளரவமே !
தங்கள்
உள்ளத்தின் வண்ணத்தை.....
உங்கள்
உருவச்சிலையின் வண்ணத்தில்
வெளிப்படுத்தியே
இங்கே...
வெண்மையாய் நின்றீர்களோ?
எங்கள் சின்னையா ! !
எம் கல்லூரியில் பயின்ற
கர்வத்தோடு
இக் கவிப்பூக்களை
உங்கள்
காலடியில் சமர்பிக்கின்றேன்!!!! ~
-----------------------------
-----------------------------
கருத்துரையிடுக