யாதும் ஊரே யாவரும் கேளீர் !
( நகர்வலம் – by நாணா )
ஆப்கானிஸ்தானமோ…சீனாவோ ஈராக்கோ…
எந்த நாட்டு யுத்தமோ அல்லது வைரஸ் அழிவோ அதில்
சிந்தப்படுவது நம் சகோதர ரத்தம் இல்லையா?
ஐக்கிய நாடுகள் சபையில் பேசப்பட்ட நம் தமிழ்..
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்னும் பாஸ்போர்ட் தாண்டிய
கணியன் பூங்குன்றனார் வரிகளை…நெஞ்சில் சுமந்து…
(அதனை லோகோ வடிவமைப்பிலும் இடம் பெறச்செய்து)
அதன் அர்த்தம் சொல்லி தமிழில் முழங்கிய போது அமைச்சர்
திரு.பாண்டியராஜன், திரு. இறையன்பு, இலங்கை, மலேசிய தூதரக
அதிகாரிகளும் மற்றும் அரங்கம் முழுதும் அவரது சரளமான வரிகளில் அசந்து வியந்தது.
சமீபத்தில் சென்னை அம்பாசிடர் பல்லவா அரங்கில்
Association of Domestic Tour Operators of India (ADTOI)grand launch of Tamilnadu Chapter (ADTOI) சுற்றுலா ஒருங்கிணைப்பு
அமைப்பின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர்கள் விழாவில்
அப்பாவைப்போல பிள்ளையும் (Sriharan Balan) பாரம்பரிய வேட்டியில்…ஆங்கில உரை தந்து அவையத்து முந்தியிருப்பது, வள்ளுவம் சொல்லும் மகிழ்வுநிலை!
சரித்திரத்தை மாற்றிய கீழடி புகழ் சொல்லும் தொல்லியல் சுற்றுலா,
வைல்ட் லைஃப் சுற்றுலா, ஆன்மீகச் சுற்றுலா, மெடிக்கல் டூரிஸம்,
மற்றும் சுற்றுலா சார்ந்த தொழில் வளர்ச்சிக்கான முன்னெடுப்பு
வர்த்தகக் கூட்டமைப்பின் (ADTOI) தமிழகம் பெருமை கொள்ள
செயல் தலைவராக பதவியேற்ற கலைமாமணி. திரு .வீ.கே.டி பாலன்
அவர்கள் ஆணித்தரமாக அடித்துச் சொல்லியது போல் உலக அளவில்
தமிழ்நாடு சுற்றுலா துறையில் முதலிடம் பெறும் என்று அதற்கான
அவர்களின் முயற்சிகள் யாவும் வெற்றி பெற உறுதுணையாக இருப்பது தமிழரின் கடமை.
இதனை இவன் கண் விடல் என - என்னிடம் வழங்கப்பட்ட
இந்த லோகோ வடிவமைப்பை முழுச்சுதந்திரத்துடன்
செய்ய வாய்ப்பு வழங்கி..அதற்கான உரிய கெளரவத்தையும்
நட்புடன் அன்பு மேலிட வழங்கிமகிழும் நட்புள்ளம் கொண்ட
கலைமாமணி. திரு .வீ.கே.டி பாலன் அவர்கள் எடுக்கும் முயற்சிகள்
யாவும் வெற்றியை நோக்கியே பயணிக்கும்!…
வடிவமைப்புடன்
வாழ்த்துகளுடன்
…நாணா!
கருத்துரையிடுக