திருச்சி நால்ரோட்டில்
சட்டையில்லாமல்…
ஓர் இரவு!
திருச்சி நால்ரோட்டில் சட்டையில்லாமல்…ஓர் இரவு!
டி.வி.எஸ். டோல்கேட் எல்லாம் எறங்குன்னு…இன்னிக்கு பஸ்ல கேட்டாலும் ‘திக்’ என ஃப்ளாஷ் பேக்கடிக்கும்.. திருச்சி முதல் இரவு!
டி.வி.எஸ். டோல்கேட் எல்லாம் எறங்குன்னு…இன்னிக்கு பஸ்ல கேட்டாலும் ‘திக்’ என ஃப்ளாஷ் பேக்கடிக்கும்.. திருச்சி முதல் இரவு!
கால்கள் கடுக்க… கடுமையான (7 மணி நேர) முழுஇரவுப்பணிக்கு இடையில்
ஒரு தேநீர் அருந்துவது…அதுவும் இளையராஜா இசையுடன்…
காதில் ஏறும் அவரது ஒரு பாட்டுல…ஒரு ‘Bottle’ குளுக்கோஸ் ஏறியது…போல்
’எனர்ஜி லெவல் எகிறும்!இன்று ரொக்கம் நாளை கடன்… என பல கடைகளுக்கு போர்டு எழுதிக்கொடுத்த நானே… நடுச்சாமத்தில் நான் போட்டிருந்த சட்டையைத் திடீரென பறிகொடுத்து …கடன் சொல்லி தேநீர் குடித்த மறக்கமுடியாத ஒரு இரவு.
ஒரு தேநீர் அருந்துவது…அதுவும் இளையராஜா இசையுடன்…
காதில் ஏறும் அவரது ஒரு பாட்டுல…ஒரு ‘Bottle’ குளுக்கோஸ் ஏறியது…போல்
’எனர்ஜி லெவல் எகிறும்!இன்று ரொக்கம் நாளை கடன்… என பல கடைகளுக்கு போர்டு எழுதிக்கொடுத்த நானே… நடுச்சாமத்தில் நான் போட்டிருந்த சட்டையைத் திடீரென பறிகொடுத்து …கடன் சொல்லி தேநீர் குடித்த மறக்கமுடியாத ஒரு இரவு.
குளிர்தளும்ப காவிரி ஓடும் திருச்சியின் …1984 டிசம்பர் மாத கடைசி வாரம்…
அப்போ…புத்தாண்டு & பொங்கல் சிறப்புத் தள்ளுபடி 20% கோ-ஆப்டெக்ஸ்…(இப்பவும் தான்) அதற்கான வண்ணத்துப்பூச்சி லோகோவுடன்… தீரன் சின்னமலை (அப்போ…) பேருந்துகளின் பின்பக்கம் (3அடிக்க்கு 3 சதுரத்தில்) விளம்பர டிசைன்..15 பேருந்துகளுக்கு எழுதக்கிடைத்தது…முதல் நாள் ஒர்க் ஆர்டர் பேப்பர் எங்கே.???.வண்டி நம்பர் என்ன்ன்ன??? சாணிப்பேப்பரில் டைப் செய்யப்பட்ட கடிதங்களின் விவரம் சரிபார்க்க நேர்ந்த … பல குளறுபடியில் ஒரு வேலையும் செய்யாமல் வெட்டியாய்…நடு இரவு தாண்டியதில்… வெறுத்து வீணானது முதல் இரவு(!)
வெளியே….டோல்கேட் ரவுண்டானவுல தஞ்சாவூர் ரோடு பிரியும் இடத்தில்…சிறு மரத்தடி…பேஸ்ஸ்ஸ்ஸ் அதிர்ர்ர்ர்ரும்… ஜயண்ட் ஸ்பீக்கர்ஸ்… (Panasonic ..3 in 1… with extra Amplifier... ) கேஸட் & ரெக்கார்ட் பிளேயரில் .. நாய் ஊளை ப்ளஸ் குதிரைக் கனைப்பு மிமிக்ரியுடன்….
தேவதை இளம் தேவி….உன்னைச் சுற்றும் ஆவி…பாடல்
(A சஸ்பெண்டட்.. D மைனர் + E மேஜர் என கிட்டார் chords BGM இன்றும் விரல்கள் பரபரக்க்க்க்கும்! ) அந்தப் பாடலை திரும்பத் திரும்பப் போடச் சொல்லி…. நேரத்தைக் கடத்தியதில் இளையராஜா இசை என்னும் ஈர்ப்புப் புள்ளியில் அந்தக் கடை ஓனர் mutual friend ஆனார்…!
….ஆளுக்கு 2 வது கிளாஸ் டீ!….. என 6 கப்….. இசை கலந்த தேநீர்… ஒரு வேலையும் ஓடல!மறுநாளும் அதே கதை…அதே.. இசை .. தேநீர்! தொடர்ந்த அரசு நிறுவன அதிகாரிகளின் ஈகோ மோதலில் படாதபாடு பட்டு ’#save நேசமணி’ காண்ட்ராக்ட் மாதிரி….!ப்ரஷ் பெயிண்ட் டப்பாக்கள் சகிதம் ’சுத்தி’ சுத்தி வந்ததில்…அனுதாப அடிப்படையில் வழி பிறந்தது
ஒருவழியா தீர்வு கிட்டி…!ஒரு ஸ்பேர் ஓட்டுனர் உதவியுடன்…எங்களுக்கு பெயிண்ட் செய்யத் தோதான வெளிச்சத்தில் ஒவ்வொன்றாக ரிவர்ஸ் எடுத்து 5 பஸ்களை வரிசையா TN–45 XXXX நிப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாட்டி …. முடிக்கிறதுக்குள்ள அன்னிக்கும் நேரம் நடுஇரவை தொட்ருச்சு!...கோஆப்டெக்ஸ் வண்ணத்துப்பூச்சி ஒரே அளவில் அமைய…நாம அட்டை போட உபயோகிக்கும் ப்ரெளவுன் பேப்பரில் ஊதுபத்தி நெருப்பில் புள்ளி புள்ளியாய் ஓட்டை போட்ட பட்டர்பிளை அவுட் லைன் ஸ்டென்சில் ரெடி…
போட்டிருந்த புது டெரிக்காட்டன் சட்டையில் பெயிண்ட் பட்டுவிடக்கூடாதுன்னு…வரிசையின் முதலில் நின்ற பஸ்ஸின் டிரைவர் சீட்டுக்கு பின் காலண்டர் மாட்டும் கொக்கியில் போட்டுட்டு…புது பெயிண்ட் டப்பா பாக்ஸுடன் பேனட் மூடி மேல வச்சுட்டு வேலையில் ஆழ்ந்தோம். உதவிக்கு வந்து சேர்ந்த அந்த ’நேர்மையான board exam’ பாஸ் செய்த Clerical staff cum Spare Driver அவரது வாழ் வழித்தடம் சொல்லிகேட்ட்தில் எங்கள் மூவரின் காதுகளில்..சேம் பிளட்!...
அதை அவாய்ட் பண்ண ….அடுத்தடுத்த பஸ்க்கு விரைந்தோம் …பின்பக்கங்கள் சுத்தம் செய்யப்பட்டு ஆரஞ்சு கலந்த பிங்க் கலர் பெயிண்ட் அடிச்சு காய விட்டு.. வண்ணத்து பூச்சி படத்தின் (ஸ்டென்சில் அடிக்க ) முதல் பஸ்ஸுக்கு வரைய திரும்ப வந்தால்…..
ஷாஷாக்க்க்க்க்க்க்க்க்க்….!
வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த முதல் பஸ்ஸ்ஸ்ஸ்ஸ காணோம்!…
(என் சட்டையும்… சட்டைப்பையில் இருந்த ஒரே சொத்து 130 ரூபாயுடன்)
(என் சட்டையும்… சட்டைப்பையில் இருந்த ஒரே சொத்து 130 ரூபாயுடன்)
அந்த இரவில்… நீங்க அந்த ‘கையறு பொஸிஷனில்..இருப்பதாக நெனைச்சுப் பாருங்க ஒரு கணம்…குளிரிலும் வேர்ர்த்த்து ஓடியது!
வரைய வேண்டிய பஸ் இல்ல…அந்த ஸ்பேர் டிரைவரும் இல்ல!எனக்கு சட்டையில்ல..கிழிந்த பனியன், கைலி இரண்டிலும்
இல்லாத கலரே இல்ல!கையில் வேற பணமும் இல்ல!பதட்ட்டம் பற்றிக்கொள்ள
இல்லாத கலரே இல்ல!கையில் வேற பணமும் இல்ல!பதட்ட்டம் பற்றிக்கொள்ள
Gate keeping - க்கு ஓடிப்போய் கேட்க .. நைட் டியூட்டியில்..(அந்த்த்த்தூ….! …தூங்கு மூஞ்சி .. முழிச்சிருக்கா தூங்குதான்னே அறிய முடியாத ஒரு முக பாவம்!)… காணாமல் போன பஸ் பற்றிய சரியான எண்ட்ரி இல்ல..! கறுப்பு போர்டு மாட்டி…நைட் சர்வீஸ்க்கு போயிருக்கலாம்னு டவுட்டினார்! (என் அப்போதைய 130 ரூபாயின் மதிப்புத் தெரியாமல்…)
மனதும் உடலும் சோர்ந்த உலர்ந்த நிமிடங்கள்…தேநீர் தேடியது …!கையில் காசில்லாத நெலமையைச் சொல்ல.. நல்லவேளை
முதல் நாள் ரெண்டு ரெண்டா (3x2) ஆறு டீ சாப்பிட்ட ஐடெண்டிட்டி.கைகொடுக்க …எல்லா கலர்களும் சிந்திய கைலியும் பனியனையும் பார்த்து, ஒரு 20 ரூபாய் லோன் ஈஸியா சாங்ஷன் ஆனது!
முதல் நாள் ரெண்டு ரெண்டா (3x2) ஆறு டீ சாப்பிட்ட ஐடெண்டிட்டி.கைகொடுக்க …எல்லா கலர்களும் சிந்திய கைலியும் பனியனையும் பார்த்து, ஒரு 20 ரூபாய் லோன் ஈஸியா சாங்ஷன் ஆனது!
1984 ல் அப்போ.. 130 ரூபாய் பெரிய காசு!… (இப்பவும்தான்!) நான் சட்டையை தொலைத்த கேர்லெஸ்னஸ் மனநிலையில்…உறிஞ்சிய தேநீர்….ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா… நுனி நாக்கு சூடு வாங்கியது!… மனசுக்குள்ளும் சுட்டது!… என் கவனக்குறைவை எண்ணி…கடன் சொல்லி சாப்பிடும் நிலை எண்ணி…. கூனிக்குறுகிய உணர்வில்…
(அந்த நிலையில்…ஒரு கணம் ... நெனைச்சுப் பாருங்க ..வலி புரியலாம்! )டிசம்பர் குளிரில் காலையில் பேருந்தில் சட்டையில்லாமல்…டிக்கட் எடுக்க்க்கூட காசில்லாமல் சத்திரம் பஸ்ஸ்டாண்ட் வரை எப்படிபோவது என்னும் யோசனை வேற!….
(அந்த நிலையில்…ஒரு கணம் ... நெனைச்சுப் பாருங்க ..வலி புரியலாம்! )டிசம்பர் குளிரில் காலையில் பேருந்தில் சட்டையில்லாமல்…டிக்கட் எடுக்க்க்கூட காசில்லாமல் சத்திரம் பஸ்ஸ்டாண்ட் வரை எப்படிபோவது என்னும் யோசனை வேற!….
சரி…முதலில் வந்த வேலையையாச்சும் முடிப்போம் என்ற வெறியில் டெப்போ கேட்டில் திரும்ப நுழையும் போது …எங்களை உரசிக்கொண்டு உள்ளே நுழைந்தது ஒரு பஸ்… அதே TN 45 xxxx பேருந்துதானா என நம்பரைப் பார்க்க…. நிற்பதற்குள் ஓடி ஏறிப்போய்பார்த்த்தில் ….என் முழுக்கைச் சட்டை மடிப்புக்கலையாமல் அதே டிரைவர் சீட்டுக்குப் கையசைத்ததை… கண்டேன்.. சீதையை….போல! காவிய சுகத்துடன் ஒப்பிடலாம்! கண்ணீர் துளித்தது!
எஞ்சினை அணைத்த டிரைவர் ( பெயிண்ட் பாக்ஸில் சொருகிய பிளாஸ்க் காட்டி)……நம்ம டெப்போ மேனேஜருக்கு காப்பி வாங்குவதற்காக டிவிஎஸ் டோல்கேட்டிலிருந்து மத்திய பஸ் நிலையம் வரை சென்று வந்ததாகச் சொல்லி (போக வர 7 கிலோமீட்டர்ஸ்)…அரசு நிர்வாகத்தின் ‘சிக்கன’ நடவடிக்கையை ’புரிய’ வெச்சார் (!) …
கடன்பட்டார் நெஞ்சம் கொண்ட …நான் …முதல் வேலையா ஓடிப்போய் ’டீ’ கடனை அடைத்தேன்!இனிமேல் சட்டையக் கழட்டக்கூடாது..இல்ல சட்டைய … கழட்டாத ஆபீஸ் தொழிலுக்கு மாறிவிடவேண்டும் என்னும் கொதிநிலையில் வைராக்கியம் கொண்டது உள்மனசு!
ஒரு மைக்ரோ செகண்ட் கூட தூங்காத களைப்புடன்… நாங்கள் எழுதிய ’ கோ ஆப் டெக்ஸ் சாம்பிள்’ விளம்பரத்துடன் கோ ஆப்டெக்ஸ் தில்லை நகர் அலுவலகம் வழியாகப் பயணிக்கும் வழித்தடத்து முதல் பேருந்தில் அதிகாலை பயணிகள் யாரும் இல்லாத நிலையில் ஓட்டுனர் நடத்துனர் நட்புடன்.. திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட் கலையரங்கம் எதிரில் நாகநாதர் டீ ஸ்டாலில் தேநீருக்காக .. (மெர்க்குரி லைட் ..!) வெளிச்சத்தில் ஆர்வத்துடன் இறங்கி வந்து…. பின் பக்கம் வரைஞ்சதைப் பார்த்தால்…!
உவ்வ்வ்வ்வ்வ்வே!
பஸ் டெப்போவின் ..சோடியம் வேப்பர் மஞ்சள் ஒளியில் …நாங்க வெச்ச கலர் எல்லாம்
( அமிலம்.. லிட்மஸ் தாளுடன் நிறம் மாறியது போல்) மாறிப்போய்..எல்லா கலரும் தாறுமாறு கண்ராவி..… கோ ஆப்டெக்ஸ் பியூன் பார்த்தாலே ..கரூர் பஸ் ஆர்டரும் சேர்த்து ஊத்திக்கும் லெவெல்ல இருந்துச்சு…
( அமிலம்.. லிட்மஸ் தாளுடன் நிறம் மாறியது போல்) மாறிப்போய்..எல்லா கலரும் தாறுமாறு கண்ராவி..… கோ ஆப்டெக்ஸ் பியூன் பார்த்தாலே ..கரூர் பஸ் ஆர்டரும் சேர்த்து ஊத்திக்கும் லெவெல்ல இருந்துச்சு…
…அதுனால.. உடனே அந்த டிசைன் வேலை யார் கண்ணிலும் படாதபடி ஆங்காங்கே பெயிண்ட் தடவி கிடைத்த தினசரி பேப்பர் வாங்கி…அதன் மேல ஒட்டி மூடிவிட்டோம் …
அப்புறம்….வடிவேலு சொல்றா மாதிரி…!அன்றிரவு மறுபடியும் மொதல்ல்ல்ல்லேர்ர்ர்ர்.ந்.ந்.த் .தா!
இந்த முறை மெர்க்குரி லைட் போஸ்ட் வெளிச்சத்தில் ..மிக்க் கவனமுடன்
செய்த வேலை…கோ ஆப்டெக்ஸ் மேலாளர் கண்ணில் பட்டு..
…கரூர் டெப்போ வின் 12 பஸ் ஆர்டரையும் உறுதிசெய்தது…அதே வாரம்…திருச்சி முடித்த கையோடு இருவர் மட்டும் இரவு 7 – 8 அளவில் கரூர்க்க்க்குள் நுழைய பழைய அமராவதி பாலம் அருகில் லைட் ஹவுஸ் பஸ் ஸ்டாப்!
ஆங்காங்கே சின்ன சலசலப்பு…பார்க்கின்ற டவுன் பஸ் எல்லாம் சிவப்பு எழுத்துகளில் ’பணி மனை’என்னும் ஊர்ப்பெயர் தாங்கி பயணிகள் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தது கண்டு முதலில் ஆச்சரியம்….நெஜமாவே…இராங்கியம் கிராமத்தானுக்கு அப்ப தான் தெரிந்தது ’பணிமனை’ என்பது தமிழில் ’ பஸ் டிப்போ’ என்று…!அப்போதைய இரவில் எம்.ஜி.ஆர் இறந்துவிட்டார் என்னும் வதந்தியால்
எல்லா பேருந்துகளும் அவசர அவசரமாக பணிமனைக்குத் திருப்பியது புரிந்த்த்த்த்தது !திருச்சி டெப்போ போல அங்கே சோடியம் ’ஆவி’ இல்லை!…எல்லாமே மெர்ர்க்குரி லைட்ஸ்
#சட்டையைக் கழட்டாமலே!
மீண்டும் ரிபெயிண்ட் அடிக்க…வர்றேன்!
கூடவே நானும் புது அனுபவமா இருக்கட்டுமேன்னு அதே கரூர் பஸ்டெப்போவில் மணிவண்ணன் சகிதம் வந்து வேலைசெய்தது இன்னும் இன்றும் பசுமரத்தாணிபோல் பதிந்துள்ளது
பதிலளிநீக்குஎன்றும் நட்புடன்
நீக்குசோகத்தையும் சுகமாக.....
பதிலளிநீக்குஅருமை.
நன்றியும்...வணக்கமும்..
நீக்குReal experience...
பதிலளிநீக்குHappy to expose that days of 80s..thank you sir!
நீக்குகருத்துரையிடுக