அறிவியலை அறிந்துகொள்வோம்
- நெல்லை கவிநேசன்
சிவில் சர்வீசஸ் தேர்வின் (Civil Services Examination) பொதுஅறிவுப் பாடத்தில் (General Studies) வரலாறு, புவியியல், அறிவியல், இந்திய அரசியல், பொருளாதாரம், தற்கால நிகழ்வுகள் ஆகியவவை இடம்பெறுகிறது. எனவே, இந்தப் பாடங்களுக்கான தயாரிப்பை தனித்தனியாக மேற்கொண்டால் பொதுஅறிவுப் பாடத்தில் மிக அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்புகள் உள்ளது. இதனால்தான் கடந்த இதழ்களில் பொதுஅறிவுப் பாடத்தில் இடம்பெறும் வரலாறு மற்றும் புவியியல் பாடம் பற்றிய விரிவாக விளக்கங்களைப் பார்த்தோம்.
இனி - பொதுஅறிவுப் பாடத்தில் இடம்பெறும் பொது அறிவியல் பாடம் பற்றிய விளக்கங்களையும், தேர்வு தயாரிப்புக்கு உதவும் புத்தகங்களின் பட்டியலையும், கடந்த ஆண்டுகளில் சிவில் சர்வீசஸ் தேர்வின் முதல்நிலைத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளையும் பார்ப்போம்.
3. அறிவியல் (Science)
சிவில் சர்வீசஸ் தேர்வில் பொதுஅறிவுப் பாடத்தின், அறிவியல் பாடத்தில் இருந்து அதிக கேள்விகள் கேட்க வாய்ப்புகள் உள்ளது.
சிவில் சர்வீசஸ் தேர்வின் முதல்நிலைத் தேர்வில் பொது அறிவியல் பாடத்திற்கான முக்கியத்துவம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. பொதுஅறிவியல் பாடத்தை பொதுவாக 4 முக்கிய பிரிவுகளாகப் பிரித்துக்கொள்ளலாம். அவை - (1) இயல் அறிவியல் (Physical Science), (2) வேதியியல் அறிவியல் (Chemical Science), (3) உயிர் அறிவியல் (Biological Science), (4) வேளாண் அறிவியல் (Agricultural Science) - ஆகியவை ஆகும்
இயல் அறிவியல் (Physical Science) பாடப்பிரிவில் Physical Properties of matter and its states – Mass, Volume and Density – The principle of Archimedes – The Newton’s law of motion – The basic knowledge of work, power and energy – Sound, waves and their qualities and properties – Speed, Pressure and Rotation – Force – Light – Sound and Reflection – Temperature and heat – Light – Magnetic properties – The working principles of-simple pendulum – Atomic physics ஆகிய பாடப் பிரிவுகளிலிருந்து கேள்விகள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது.
வேதியியல் அறிவியல் (Chemical Science) பாடப்பிரிவில் The states of matter – The physical and chemical changes – Material, mixtures and compounds – The Physical and chemical properties of air and water – Hydrogen, Oxygen, Nitrogen and Carbon Dioxide gas – Reduction, Oxidation – Acids, bases and salts – Carbons – Atom – Proton – Catalysts – Petroleum – Fertiliser – natural and artificial ஆகிய பாடப் பிரிவுகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.
உயிர் அறிவியல் (Biological Science) பாடப்பிரிவில் The basic knowledge of the human body and its parts – The knowledge of the systems of the human body – The process of Digestion – The various glands of the body – Carbonic Nutritive Materials – Non–Carbonic nutritive compounds – Vitamin – Common Diseases – Genetics ஆகிய பாடப்பிரிவுகளிலும் கேள்விகள் இடம்பெற வாய்ப்புள்ளது.
மேலும், தாவரவியல் பாடப்பிரிவில் இருந்தும் General Classification of Plants – Cellular biology – The general diseases of the plants – The fungal plants – The characteristic of root, trunk, flower, fruit and seeds – Bio manure – Photosynthesis – Ecology – Pollution – Animal Husbandry – Agriculture Science ஆகிய பாடங்களிலிருதும் கேள்விகள் இடம்பெறும்.
இவைதவிர, அறிவியல் வளர்ச்சியின் அம்சங்களைப் பிரதிபலிக்கும் Space Science – Important inventions and the inventors – Important terms related to science – Brief introduction to chief scientists – Important scientific instruments – General information about bio technology – Science and technology in India – Biotechnology – Development of the oceans – ஆகிய பாடப்பிரிவுகளில் இருந்தும் கேள்விகள் இடம்பெறும்.
வேளாண் அறிவியல் (Agricultural Science) பாடப்பிரிவில் - Principles of plant physiology – Diagnosis of nutrient deficiencies – Cell and cell organelles – Genetic basis of plant breeding – Important fruit and vegetable crops of India – Principles of economics as applied to agriculture - போன்ற முக்கியப் பாடப்பிரிவுகளிலும் கேள்விகள் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.
முன்பெல்லாம் சிவில் சர்வீசஸ் தேர்வின் முதல்நிலைத் தேர்வில் பொதுஅறிவுப் பாடத்தில் சுமார் 20 கேள்விகள் மட்டுமே அறிவியல் பாடத்தில் இடம்பெறும். ஆனால் தற்போது 35க்கும் மேற்பட்ட அறிவியல் கேள்விகள் கேட்கப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக தொழில்நுட்பம் (Technology) சம்பந்தப்பட்ட கேள்விகளும் பொதுஅறிவுப் பாடத்தில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக “பயோ டெக்னாலஜி” (Bio Technology), “ஜெனடிக் இன்ஜினியரிங்” (Genetic Engineering), “ரிமோட் சென்சிங்” (Remote Sensing) போன்ற சம்பந்தப்பட்ட அண்மைக்கால தொழில்நுட்பம் பற்றியும் கேள்விகள் இடம் பெற்றுள்ளன.
மேலும் “தகவல் தொழில்நுட்பம்” (Information Technology) சம்பந்தப்பட்ட தகவல்கள் குறிப்பாக, “கம்ப்யூட்டர்” (Computer), “டேட்டா நெட்வொர்க்” (Data Network), வீடியோ கான்பெரன்சிங்” (Video Conference), “இண்டர்நெட்” (Internet) பற்றியும் கேள்விகள் இடம்பெற வாய்ப்புள்ளது.
பொதுஅறிவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றி அறிந்துகொள்ள உதவும் சில முக்கிய புத்தகங்கள் -
1.Science – VIIth to Xth std - NCERT
2. The History of Science (5 Vol.s) - Ray and Moser (University Press)
3. Marching Ahad with Science - (NBT)
4. The Human Machine - Bijlani and Man Chandra
5. Life ‘Cell to Cell’ - Jaban Bhattacharya
இந்த புத்தகங்கள் தவிர ‘Science Reporter’ என்ற ஆங்கில அறிவியல் இதழையும் தொடர்ந்து வாசித்து வரலாம்.
கடந்த சில ஆண்டுகளில், சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வின் அறிவியல் பாடத்தில் கேட்கப்பட்ட சில முக்கிய கேள்விகளைப்பற்றி பார்ப்போம்.
1. A fuse is used in mains electric supply as safety device. Which one of the following statements about the fuse is correct?
(a) It is connected in parallel with the main switch
(b) It is made mainly from silver alloys
(c) It must have a low melting point
(d) It must have a very high resistance
2. Haemophilia is a genetic disorder which leads to :
(a) Decrease in haemoglobin level
(b) Rheumatic heart disease
(c) Decrease in WBC
(d) Non – clotting of blood
3. The stones formed in human kidney consist mostly of
(a) Calcium Oxalate (b) Sodium Acetate (c) Magnesium Sulphate (d) Calcium
4. Standard 18 carat gold sold in the market contains
(a) 82 parts gold and 18 parts other metals
(b) 18 parts gold and 82 parts other metals
(c) 18 parts gold and 6 parts other metals
(d) 9 parts gold and 15 parts other metals
5. Stethoscope used by the doctors works according to the principles of
(a) Refraction (b) Induction of sound waves (c) Interference (d) Reflection
6. Which one of the following enzymes digests starch?
(a) Ptyalin (b) Pepsin (c) Renin (d) Trypsin
7. The man cause of ozone depletion is the accumulation of
(a) Nitrogen Oxide (b) Chlorofluorocarbons
(c) Methane (d) Carbon Dioxide
8. Which of the following alkali metals has the highest specific heat?
(a) Potassium (b) Caesium (c) Rubidium (d) Lithium
9. Out of the following glands, which is referred to as the master gland?
(a) Adrenal (b) Thyroid (c) Pancreas (d) Pituitary
10. Single density recording is also known as
(a) return – to – zero encoding
(b) phase encoding
(c) frequency modulation
(d) None of these
விடைகள்
1. (c) 2. (d) 3. (a) 4. (c) 5. (b) 6. (a) 7. (b) 8. (a) 9. (d) 10. (c)
கருத்துரையிடுக