உடற்கல்வியியல் படிப்புகள் (PHYSICAL EDUCATION COURSES)
- நெல்லை கவிநேசன்
வீட்டில் படிக்கும் நேரத்தில் படிக்காமல் இருக்கும் குழந்தைகளைப் பார்த்து “விளையாடாதே” என பெற்றோர்கள் சொல்வார்கள். ஆனால் விளையாடிக் கொண்டே படிப்பதற்கு இன்று பல்வேறு வசதிகள் வந்துவிட்டது.
பட்டப் படிப்புகளும், பட்ட மேற்படிப்புகளும், ஆராய்ச்சிப் படிப்புகளும் இன்று “விளையாட்டுக் கல்லூரிகள்” என அழைக்கப்படும் உடற்கல்வியில் கல்வி நிறுவனங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
“தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம்“ (Tamilnadu Physical and Sports University) என்னும் பல்கலைக்கழகம் இந்தியாவில் விளையாட்டுத் துறைக்காக முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் சென்னையில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பான ஒன்றாகும்.
இங்கு -
இங்கு -
1. எம்.பில். (M.Phil)
2. பி.எச்டி. (Ph.D.)
ஆகிய படிப்புகள் நடத்தப்படுகிறது.
இந்தப் பல்கலைக்கழகத்தில் இயங்கும் “Department of Yoga” என்ற துறையில் எம்.எஸ்.சி., (இரண்டு வருடப்படிப்பு), எம்.பில்., பி.எச்.டி., ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன.
இங்குள்ள “Department of Sports Managemnet” என்னும் துறையில் MBA Sports Management என்ற இரண்டு ஆண்டுப் படிப்பு நடத்தப்படுகிறது. மேலும், M.Phil., Ph.D., என்னும் படிப்புகள் இந்த துறைகள்மூலம் நடத்தப்படுகிறது.
இங்குள்ள “Department of Sports Managemnet” என்னும் துறையில் MBA Sports Management என்ற இரண்டு ஆண்டுப் படிப்பு நடத்தப்படுகிறது. மேலும், M.Phil., Ph.D., என்னும் படிப்புகள் இந்த துறைகள்மூலம் நடத்தப்படுகிறது.
“Department of Sports Technology” என்னும் இங்குள்ள துறைமூலம் M.Tech. இரண்டு ஆண்டு படிப்பு நடத்தப்படுகிறது. இந்தப் படிப்பில் B.E. பட்டப் படிப்பில் எந்தப் பிரிவு எடுத்துப் படித்திருந்தாலும் சேர்ந்து படிக்கலாம்.
M.Phil., Ph.D., என்னும் படிப்புகளும் இந்தத் துறையில் நடத்தப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தோடு இணைந்துள்ள “Department of Exercise Physiology and Nutrition” என்னும் துறையில் மூன்று ஆண்டு B.Sc., பட்டப்படிப்பு நடத்தப்படுகிறது. இந்தப்படிப்பில் அறிவியல் பட்டதாரிகள் அல்லது உடற்கல்வியில் பட்டதாரிகள் சேர்ந்து கொள்ளலாம். இதே துறையில் M.Sc., M.Phil., Ph.D., ஆகிய படிப்புகளும் நடத்தப்படுகின்றது.
M.Phil., Ph.D., என்னும் படிப்புகளும் இந்தத் துறையில் நடத்தப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தோடு இணைந்துள்ள “Department of Exercise Physiology and Nutrition” என்னும் துறையில் மூன்று ஆண்டு B.Sc., பட்டப்படிப்பு நடத்தப்படுகிறது. இந்தப்படிப்பில் அறிவியல் பட்டதாரிகள் அல்லது உடற்கல்வியில் பட்டதாரிகள் சேர்ந்து கொள்ளலாம். இதே துறையில் M.Sc., M.Phil., Ph.D., ஆகிய படிப்புகளும் நடத்தப்படுகின்றது.
“Department of Sport Psychology and Sociology” என்னும் துறையில் M.Sc., பட்டப்படிப்பு நடத்தப்படுகிறது. எந்தத் துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் இந்தப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம். இந்தத் துறைமூலம் M.Phil., Ph.D., ஆகிய பட்டப்படிப்புகளும் நடத்தப்படுகிறது. இந்த உடற்கல்வியியல் பல்கலைக்கழகத்தின் மற்றொரு துறையான “Department of Coaching” என்னும் துறை சில டிப்ளமோ படிப்புகளையும் நடத்துகிறது. கால்பந்து, இறகு பந்து, ஹாக்கி ஆகிய பாடங்களில் டிப்ளமோ படிப்புகள் நடத்தப்படுகின்றது. பல்கலைக்கழக அளவில் அல்லது மாநில அளவில் விளையாட்டில் சிறப்புப் பெற்று பட்டம் பெற்றவர்கள் இந்தப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம். “Department of Sports Biomechanics and Kinesiology” என்னும் துறை இரண்டாண்டு எம்.எஸ்.சி. படிப்பை நடத்துகிறது. பட்டதாரிகள் இந்தப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.
தமிழகத்தில் விளையாட்டு துறை படிப்புகளை சிறப்பாக படிப்பதற்கு வசதியாக பல்வேறு கல்லூரிகள் உடற்கல்வியியல் படிப்பில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளை நடத்தி வருகிறது.
தொலைதூர கல்வித்திட்டம் (Distance Education Programme)
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்விமூலம் (பல படிப்புகளை நடத்துகிறது. அந்தப் படிப்புகள் பற்றிய விவரம் பின்வருமாறு. அவை -
1. எம்.பி.ஏ., ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட்
2. எம்.பி.ஏ., ஸ்போர்ட்ஸ் இன்பர்மேஷன் சிஸ்டம்
3. எம்.எஸ்.சி., யோகா
4. எம்.எஸ்.சி., யோகா (லேட்டரல் என்ட்ரி)
5. எம்.எஸ்.சி., சைக்காலஜி
6. எம்.எஸ்சி., ஸ்போர்ட்ஸ் ஜர்னலிஸம்
7. எம்.பி.ஏ., ஜெனரல்
8. போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் பிட்னஸ் அன்ட் வெல்னஸ் மேனேஜ்மெண்ட்
9. போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் ஒபிசிட்டிஅன்ட் வெய்ட் மேனேஜ்மெண்ட்
10. போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ மூவ்மெண்ட் எஜுகேஷன் அன்ட் சைல்ட் கேர்
11. போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் பிட்னஸ் அன்ட் நியூட்ரிஷன்
13. போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் ஸ்போர்ட்ஸ் ஜர்னலிஸம்
14. போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் ஸ்போர்ட்ஸ் மார்க்கெட்டிங்
15. போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட்
16. போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் ஹெச்.ஆர்.எம். இன் ஸ்போர்ட்ஸ் ஆர்கனைசேஷன்
17. போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் கவுன்சிலிங்
18. போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் அப்ளைடு ஸ்டேட்டிக்ஸ் அன்ட் பிசிகல் எஜுகேஷன்
19. போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் யோகா
20. டிப்ளமோ கோர்ஸ் இன் யோகா
21. சர்டிபிகேட் கோர்ஸ் இன் யோகா
- ஆகியவை ஆகும்.
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 படித்தவர்கள் சேர்ந்துபடிக்கும் விதத்தில் 6 மாத சான்றிதழ் படிப்புகளும், ஒரு வருட டிப்ளமோ படிப்புகளும் இந்தப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்விமூலம் நடத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துரையிடுக