கதம்பமாலை-1
நெல்லை கவிநேசன்
நெல்லை கவிநேசன்
[கதம்பமாலை தொடரில் பார்த்தது படித்தது ரசித்தது என கேட்டது என பல்வேறு தகவல்களைத் திரட்டி உங்களுக்கு வழங்குகிறார் நெல்லைகவிநேசன் ]
இன்றைய கதம்ப மாலையில் ஃபேஸ்புக்கில் (FACE BOOK) ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியவர் திரு. என். ரத்தினவேல் அவர்கள் முகநூலில் பேஸ்புக்கில் பதிவிட்ட ஒரு நிகழ்வு
குரூப்-1 தேர்வில்
பட்டாசு தொழிலாளி மகள் வெற்றி
துணை ஆட்சியர் பதவிக்கு தேர்வாகிறார்.
இந்தச் சாதனைச் செய்திகளைப் படித்து யார் என தெரியவில்லையே,
திருத்தங்கல் நாம் சென்ற பகுதி தானே, NCLP சிவஜோதி ஊரில் இருந்தால் நமக்குத் தெரிந்திருக்குமே, அவர் குழந்தைகள் பணி நிமித்தம் சென்னை சென்று விட்டாரே என யோசித்தேன்.
NCLP - National Child Labour Project (NCLP) Scheme
திருமிகு , NCLP சிவஜோதி அவர்களே 3.1.20 அன்று சென்னையிலிருந்து போன் செய்தார், ஐயா, நமக்குத் தெரிந்த பெண் தான், நான் 4.1.20 அன்று திருத்தங்கல் வருகிறேன், நாம் சென்று சந்திப்போம் என்றார். 4.1.20 அன்று போன் செய்துமகாலட்சுமிக்கு சென்னையில் அரசிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது, எனவே நாம் அடுத்த வாரம் சென்று பார்ப்போம் என்றார்.
அதே மாதிரி 11.1.20 சனிக்கிழமை காலை போன் செய்தார். அன்று மாலை திருத்தங்கல் சென்றோம். சிவஜோதி அவர்கள் மகாலட்சுமி வீட்டுக்கு எங்களை அழைத்துச் சென்றார், NCLP பள்ளிகளுக்காக ஏற்கனவே சென்ற பகுதி தான்.
மகாலட்சுமி வீட்டுக்குச் சென்றோம். மிகவும் எளிய குடும்பம், பட்டாசுக்கூடு தயாரிப்பில் தான் அவர்கள் வாழ்க்கை ஓடுகிறது (எங்கள் குடும்பமும் ஆரம்ப நிலையில் தீப்பெட்டி மேல் பெட்டி ஒட்டித் தான் வாழ்க்கையை ஓட்டினோம்).
வீட்டில் மின்சார வசதி இருக்கிறது. இணையத்தொடர்பு இல்லை. அவர்கள் பெற்றோர்கள் படிப்பு 5 அளவில் தான் இருக்கும். அருகிலும் படிப்பதற்கான சூழல் இல்லை. இந்தச் சூழலிலும் இவர் படித்து தேறினார் என்றால் இது மகத்தான சாதனை தான்.
கலைமகள் பள்ளியில் ஆரம்பத்திலிருந்து படித்திருக்கிறார், எப்போதும் முதல் இடம் தான், பின்பு வங்கி கடன் மற்றும் உதவியுடன் மெப்கோ பொறியியல் கல்லூரியில் பி.டெக். முடித்திருக்கிறார். சென்னையில் உள்ள உதவும் உள்ளங்கள் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவத்தினரும் (இவர்கள் ஒவ்வொரு வருடமும் திருத்தங்கல் வந்து அங்கு படிக்கும் எளிய மாணவ, மாணவிகளுக்கு கிட்டத்தட்ட 50 லட்சம் அளவுக்கு உதவுகிறார்கள்) இவருக்கு உதவியிருக்கிறார்கள். என்ன உதவிகள் என்றாலும் இந்தச் சூழலில் இவர் படித்தது மகத்தான சாதனை, இவரைப் படிக்க வைத்தது அவர்கள் குடும்பத்தினரின் பொறுமையும் சாதனையும். அவர்கள் அளவுக்கு மீறிய பொறுப்பு. மனமார்ந்த பாராட்டுகள்.
நாங்கள் நிறைய நேரம் அவருடன் இருந்து பேசினோம். ஒரு மாவட்ட ஆட்சியர் என்ன செய்ய முடியும் என்பதற்கு திருமிகு சிஜி தாமஸ் வைத்யன் அவர்கள் விருதுநகர் மாவட்ட்த்தில் இருக்கும் போது திருமுக்குளம் நீர் மட்டம் பிடிக்க முனிசிபல் குடிநீரை தினம் ஒரு மணி நேரம் குளத்துக்கு விடச் சொன்னதைச் சொன்னோம். தைரியமாகவும் நேர்மையாகவும் பணியாற்றும்படி கேட்டுக் கொண்டோம்.
இந்துதமிழ் வெளியீடான ‘மாபெரும் தமிழ் கனவு’ புத்தகம் பரிசளித்தோம்.
மகாலட்சுமி அவர்களை அங்குள்ள தொண்டு நிறுவனங்களும், அரிமா, ரோட்டரி போன்ற சங்கங்களும், கல்லூரிகளும், பள்ளிகளும் கொண்டாட வேண்டும்.
பிறகு NCLP சிவஜோதி அவர்கள் வீட்டுக்கு, இவர்கள் வீட்டுக்கு 4 வீடுகள் தள்ளி,
சென்று வந்தோம். அவர்கள் எனது மனைவிக்கு புத்தாண்டு பரிசாக சேலை வழங்கினோம். மகளாக வழங்குவதாக்ச் சொன்னார். அவர் அன்பில் நெகிழ்ந்து போனோம்.
மகிழ்ச்சி, வாழ்த்துகள்
மிக்க மகிழ்ச்சி சார் திரு Nellai kavinesan - நெல்லை கவிநேசன் - தங்கள் பதிவு ஒரு நல்ல அங்கீகாரம். எனது முகநூல் பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Nellai kavinesan - நெல்லை கவிநேசன்
பதிலளிநீக்குகருத்துரையிடுக