"தர்பார் "திரைப்படத்தில் நெல்லை கவிநேசனின் நண்பர் நியூஸ்7 கோபாலகிருஷ்ணன்
சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்தில் செய்திவாசிப்பாளராக வரும் கோபாலகிருஷ்ணன் தென்தமிழகத்தின் நாகர்கோயில்காரர்.
நியூஸ்7தமிழ் தொலைக்காட்சியின் தொடக்க காலத்தில் இருந்து பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், ஆவணப்பட இயக்குனராகவும் அறியப்பட்டவர்.
"வரவேற்பறை" என்ற நிகழ்ச்சி மூலம் 1000 க்கு மேற்பட்ட திரை ஆளுமைகள், அரசியல் பிரமுகர்கள், இலக்கியவாதிகள், இசைக்கலைஞர்கள் என பலரை நேர்காணல் செய்துள்ளார். சட்ட நுணுக்கங்கள் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தொடந்து ஐந்து ஆண்டுகளாக" மாண்புமிகு நீதியரசர்கள் " என்ற நிகழ்ச்சியை வழங்கி வருகிறார்.
சமூதாயத்தில் அடையாளம் கிடைக்காமல் பல சாதனைகளை நிகழ்ந்து பிறருக்கு முன் உதாரணமாக இருக்கும் நபர்களை உலகிற்கு அடையாளப்படுத்தும் "ஃபீனிக்ஸ் மனிதர்கள்" நிகழ்ச்சியில் அவர்களின் வாழ்கை பயணங்களவ நேர்காணல் செய்கிறார்.
இது மட்டுமல்ல செய்திவாசிப்பது , லைவ் டிபேட்ஸ், நேரலை வர்ணனை செய்வது என தொடரும் இவரின் பயணத்தில் முக்கிய இடம் பிடிப்பது இவரின் ஆவணப்படங்கள்.
குறிப்பாக இவரின் அய்யா வைகுண்டர் குறித்த ஆவணப்படம் பெரிதும் பேசப்பட்டது...சமுதாய அல்லல்களையும், சாதிய கொடுமைகளையும் உடைத்தெரிந்த அய்யா வைகுண்டர் அய்யாவழி என்ற ஒரு மாபெரும் மார்க்கத்தையே உருவாக்கியவர் இங்கு மக்களுக்கான கடவுள் அவர் அவரை பற்றிய ஆவணப்படத்தை "அய்யா வைகுண்டர்' என இயக்கியவர் அதைத்தொடர்ந்து அய்யாவழியின் "அகிலத்திரட்டு" குறித்த ஆவணப்படம்.
இரணியல் அரண்மனை தமிழருக்கு சொந்தமா? , கேரளாவின் நிலமா? என கேள்விகளை வரும்போது இவரின் "தமிழர் நிலம்" என்ற ஆவணப்படம் இரணியல் அரண்மனை குறித்த முழு தகவல்களையும் அளிக்கும் ஆவணப்படமாக இருக்கிறது.
தொடந்து தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் குறித்த இவரின் பதிவுகளை ஊடகத்தில் இவரை தனித்துவமாக காட்டுகிறது. தற்போது தர்பார் திரைப்படத்தில் தோன்றி தனக்கான முத்திரையை பதித்துள்ளார்...
ஆனால் இதற்கு முன்பும் கூட பலமுறை வெள்ளித்திரையில் தோன்றியுள்ளார் ரஜினிகாந்தின் "கபாலி" திரைப்படத்தில் தான் இதில் முதல் திரைப்பயணம் இவருக்கு.இன்னொரு முகம் என்று பார்த்தால் தொடர்ந்து வாசித்தல் இலக்கியம், ஆன்மீகம், நாவல் என தேர்ந்த புத்தகங்களோடே பயணம் செய்கிறார். பட்டிமன்றம் ,மேடைப்பேச்சு என பரப்பரப்பாக இயங்குகிறார்.
இவரின் பூர்வீகம்
கன்னியாகுமரி. இவர் தாத்தா பெயர் எஸ். கோபாலகிருஷ்ணன் தாய்தமிழகத்தோடு இணைவதற்கு நடைப்பெற்ற போராட்டத்தில் பங்கெடுத்தவர். அவரின் பெயரை தான் இவருக்கு சூட்டியுள்ளனர்.
தந்தை இராஜமணி விவசாயமும் சமுதாய பணிகளையும் தொடந்து செய்து வருகிறார். நாகர்கோயில் மாநகரில் கோட்டார் பகுதியில் உள்ள வடலிவிளைஎன்ற ஊர் தான் இவருடையது...ஊடகப்பயணத்தில் நிறைய சாதிக்க வேண்டும் என வேகத்தோடு பயணிக்கிற இவரின் லட்சியத்தில் புத்தகங்கள் தான் எல்லாமாம்.
கருத்துரையிடுக