கால்நடை மருத்துவப் படிப்பு (B.V.Sc.) - 5

கால்நடை மருத்துவப் படிப்பு (B.V.Sc.)
- நெல்லை கவிநேசன்

‘கால்நடை மருத்துவம்' என்பது மருத்துவ சிகிச்சை முறைகளை சரியான விதத்தில் மிருகங்களுக்கு அளிப்பதாகும். 

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்

கால்நடை மருத்துவம் சம்பந்தப்பட்ட படிப்புகளை “தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்" (Tamilnadu Veterinary and Animal Science University) நடத்துகிறது.  இங்கு பலவிதமான பட்ட படிப்புகளும், பட்ட மேற்படிப்புகளும் நடத்தப்படுகிறது. 

பாடப்பிரிவுகள்
இங்கு நடத்தப்படும் முக்கியப் படிப்புகள்: 
1. பி.வி.எஸ்சி., அன்ட் ஏஹெச் (B.V.Sc. and AH)
2. பி.எப்.எஸ்சி., (B.F.Sc.)
3. பி.டெக். எப்.பி.டி. (B.Tech. F.P.T)
4. பி.டெக். பி.பி.டி. (B.Tech. P.P.T.)

கல்வித்தகுதிகள் 

1. பி.வி.எஸ்சி., அன்ட் ஏஹெச் (B.V.Sc. and AH)

“பேச்சிலர் ஆஃப் வெட்னரி சயின்ஸ் அண்ட் அனிமல் ஹாஸ்பண்டரி” (Bachelor of Veterinary Science and Animal Husbandry) என்னும் இந்தப் படிப்பு 5 வருடப் படிப்பாகும். பிளஸ் 2 தேர்வில் உயிர் அறிவியல் (Biology) அல்லது தாவரவியல் மற்றும் உயிரியல் பாடத்தை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்து இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களைத் தேர்ந்தெடுத்து படித்தவர்கள் இந்தப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம். 

2. பி.எப்.எஸ்சி., (B.F.Sc.) 

“பேச்சிலர் ஆஃப் பிஷரிஸ் சயின்ஸ்” (Bachelor of Fisheries Science) என்னும் இந்தப் படிப்பு நான்கு வருடப் படிப்பாகும். மீன்வளக் கலை பற்றிய இந்தப் படிப்பில் பிளஸ் 2 தேர்வில் உயிர் அறிவியல் (Biology)  அல்லது தாவரவியல் மற்றும் உயிரியல் பாடங்களை விருப்பப் பாடமாகவும், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களைத் தேர்ந்தெடுத்து படித்தவர்கள் சேர்ந்து படிக்கலாம். 

3. பி.டெக். எப்.பி.டி. (B.Tech. F.P.T)

“பி.டெக். புட் பிராசஸ் டெக்னாலஜி” (B.Tech. Food Process Technology)  என்னும் படிப்பு நான்கு வருடப் படிப்பாகும். உணவைப் பதப்படுத்துதல் பற்றிய பிளஸ் 2 தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களைத் தேர்ந்தெடுத்துப் படித்தவர்கள் இந்தப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம். 

4. பி.டெக். பி.பி.டி. (B.Tech. P.P.T.)

“பி.டெக். பவுல்ட்ரி புரொடக்ஷன் டெக்னாலஜி” (B.Tech. Poultry Production Technology) என்னும் படிப்பு நான்கு வருடப் படிப்பாகும். கோழி வளர்த்தல் பற்றிய இந்தப் படிப்பில் பிளஸ் 2 தேர்வில் கணிதம், உயிரியல், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகியப் பாடங்களைப் படித்தவர்கள் சேர்ந்து படிக்கலாம். 

பட்ட மேற்படிப்புகள்

இளநிலைப் பட்டப் படிப்புகளைப் போலவே எம்.வி.எஸ்சி., எம்.எப்.எஸ்சி., போன்ற பட்ட மேற்படிப்புகளும் இந்தப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகிறது. இவை 2 ஆண்டு படிப்பாகும். மேலும், கால்நடை அறிவியல் மற்றும் மீன்வள அறிவியல் துறைகளில் பி.எச்டி என்னும் ஆராய்ச்சி படிப்புகளும் இங்கு நடத்தப்படுகிறது. பயோ டெக்னாலஜியில் எம்.டெக். படிப்பும் இந்தப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகிறது. பயோ இன்பர்மேட்டிக்ஸ் (Bio Informatics), வொய்ல்டு அனிமல் டிசிஸ் மேனேஜ்மெண்ட் (Wild Animal Disease Management), வெட்னரி லேபரெட்டரி டயாக்னாசிஸ்  (Veterinary Laboratory Diagnosis), பிசினஸ் மேனேஜ்மெண்ட் (Business Management) ஆகிய பாடங்களிலும் முதுநிலைப் பட்டயப் படிப்புகளும் நடத்தப்படுகிறது. 

தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து சில கல்வி நிறுவனங்களும் இப்படிப்புகளை நடத்துகின்றன. 

தொடர்புக்கு.....

மேலும் விவரங்களுக்கு: 
Tamilnadu Veterinary and Animal Science University, 
Madhavaram Milk Colony, 
Chennai - 600 051
இணையதள முகவரி :  www.tanuvas.ac.in

Post a Comment

புதியது பழையவை