மதுரையில் ‘வெற்றி மேல் வெற்றி’ வழிகாட்டும் நிகழ்ச்சி

மதுரையில் 
‘வெற்றி மேல் வெற்றி’ வழிகாட்டும் நிகழ்ச்சி

பள்ளிக் கல்வித்துறை மற்றும் பத்மராஜம் கல்விக்குழுமம் சர்பில் “வெற்றி மேல் வெற்றி” என்ற தலைப்பில் மாணவர்களுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் திரு.பங்கஜம் தலைமைத்தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் திரு.முத்தையா முன்னிலை வகித்தார். பத்மராஜம் கல்விக்குழுமம் சேர்மன் திரு.ப.பாலன் நலத்திட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். 

அதன்பிறகு ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் டாக்டர்.எஸ்.நாராயணராஜன் என்ற நெல்லை கவிநேசன் கலந்துகொண்டு உரையாற்றினார். முடிவில் முனைவர்.புலவர்.வை.சங்கரலிங்கம் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். 























Post a Comment

புதியது பழையவை