திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 'தொழிலாளியை முதலாளி ஆக்குவோம்'

திருச்செந்தூர் 
ஆதித்தனார் கல்லூரியில்  
'தொழிலாளியை முதலாளி ஆக்குவோம்'  

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் 'தொழிலாளியை முதலாளி ஆக்குவோம்' சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் முனைவர். S.நாராயணராஜன் (நெல்லை கவிநேசன்) தலைமைத் தாங்கினார். பயிற்சி முகாமை கல்லூரி முதல்வர் முனைவர்.D.S.மகேந்திரன் தொடங்கி வைத்தார். 

இந்த முகாமில் வணிக நிர்வாகவியல் துறை மாணவர்கள்  ஒவ்வொரு குழுக்களாக இணைந்து புரோட்டா, சிக்கன் பிரியாணி, சிக்கன் கறி, நுங்கு ஜூஸ், தர்பூசணி ஜூஸ், பேல் பூரி, பாணி பூரி, தோசை, கடலைக்கறி உள்பட பல்வேறு உணவு பொருட்களை தயாரித்து பயிற்சி பெற்றனர்.

பயிற்சி முகாமில் கல்லூரி பொருளியல் துறைத்தலைவர் முனைவர். திரு.C.ரமேஷ், கணிதவியல் துறைத்தலைவர் முனைவர்.திரு.S.பசுங்கிளி பாண்டியன், கல்லூரி தொழில்முனைவோர் மையத்தின் இயக்குனர் பேராசிரியர் முனைவர்.திரு.V.மாலைசூடும் பெருமாள், பேராசிரியர்கள் திரு.பாலகிருஷ்ணன், திரு.வேலாயுதம், திரு.முத்துக்குமார், அலுவலக கண்காணிப்பாளர் திரு.ராஜன் மற்றும் திரு.பொன்னுத்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர். 

இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியை A.அந்தோணி சகாய சித்ரா, பேராசிரியர்கள் திரு. A.தர்மபெருமாள், திரு.M.R.கார்த்திகேயன், திரு.T.செல்வகுமார், நூலகர் திரு.M.முத்துக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.





















Post a Comment

புதியது பழையவை