வேளாண்மை படிப்புக்கான விண்ணப்பம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 2019-2020 ஆண்டின் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு மே 8ஆம் தேதி தொடங்குகிறது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இந்தக் கல்வி ஆண்டுமுதல் 10 பட்டப்படிப்புகள், 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 27 இணைப்புக் கல்லூரிகள்மூலம் படிப்புகள் நடத்தப்படுகின்றன.
வேளாண்மை படிப்பு படிக்க விரும்புபவர்கள் www.tnau.ac.in/admission.html என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை வருகிற மே மாதம் 8ஆம் தேதிமுதல் பூர்த்திசெய்து, பதிவு செய்யலாம். விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய ஜுன், 7ஆம் தேதி கடைசி நாள் ஆகும். விண்ணப்பத்தில் ஏதேனும் பிழை திருத்தம் செய்ய ஜுன் 10ஆம் தேதிமுதல் 12ஆம் தேதிவரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. ஜுன் 11ஆம் தேதிமுதல் 13ஆம் தேதிவரை சிறப்பு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. ஜுன் 20ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான மேலும் விவரங்களைப் பெற 0422 - 6611345 / 6611346 என்ற தொலைபேசி எண்களில் காலை 9.00 மணிமுதல், மாலை 5.00 மணிவரை வேலைநாட்களில் தொடர்புகொள்ளலாம்.
கருத்துரையிடுக