நெல்லை கவிநேசன் நண்பர் ஜார்கண்ட் மாநில வருமான வரித்துறை ஆணையர் திரு.V.மகாலிங்கம் ஐ.ஆர்.எஸ்., வழங்கிய தேர்தல் விழிப்புணர்வு அறிவுரை

நெல்லை கவிநேசனின் நண்பர் 
ஜார்கண்ட் மாநில வருமான வரித்துறை ஆணையர் திரு.V.மகாலிங்கம் ஐ.ஆர்.எஸ்., வழங்கிய தேர்தல் விழிப்புணர்வு அறிவுரை
  

திரு.V.மகாலிங்கம் ஐ.ஆர்.எஸ். அவர்கள் நெல்லை கவிநேசன் இல்லத்திற்குவந்து பாராட்டிய நிகழ்வு.  

திருநெல்வேலி மாவட்டம், உவரியில் பிறந்து திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பி.எஸ்.சி.கணிதம் பயின்றவர் திரு.V.மகாலிங்கம். கல்லூரியில் படிக்கும்போதே கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர்.ஆர்.கனகசபாபதி அவர்களின் அறிவுரைப்படி 'யூ.பி.எஸ்.சி.' நடத்தும் 'சிவில் சர்வீசஸ் தேர்வு' எழுத ஆர்வம்கொண்டு, முயற்சிகளை மேற்கொண்டார். பின்னர், எம்.எஸ்.சி.கணிதம் பட்டப்படிப்பை சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் முடித்தார். அதன்பின்னர், 'சிவில் சர்வீசஸ் தேர்வு' எழுதினார். சிவில் சர்வீசஸ் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள்பெற்று "ஐ.ஆர்.எஸ்." பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மதுரை, கோயம்புத்தூர், சென்னை என தமிழகத்திலுள்ள முக்கிய வருமான வரித்துறை அலுவலகங்களில் சிறப்பாக பணியாற்றினார். தற்போது பதவி உயர்வுபெற்று, ஜார்கண்ட் மாநிலத்தில் வருமான வரித்துறை ஆணையராக பணிபுரிந்து வருகிறார். தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் புலமைப்பெற்ற இவர், 'தற்போது வாக்காளர்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்?' என இந்தி தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியை கேட்டுப் பாருங்கள். எல்லோருக்கும் எளிதில் புரியும்.

எளிமை, இனிமை இதுதான் திரு.V.மகாலிங்கம் அவர்களின் தனிச்சிறப்பு.

Post a Comment

புதியது பழையவை