இலங்கை சம்பவத்திற்கு நெல்லை கவிநேசன் கண்டனம் - மனிதநேயம் மாண்டுபோனதா?

இலங்கை சம்பவத்திற்கு 
நெல்லை கவிநேசன் கண்டனம்
மனிதநேயம் மாண்டுபோனதா?
 

சமீபத்தில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் தினத்தன்று, உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இலங்கையில் நடந்த கொடூர குண்டுவெடிப்பு சம்பவம் இதயத்தில் ஈரமுள்ளவர்களை காயப்படுத்தி, கண்ணீரை வரவழைத்துள்ளது.

இந்த கோரசம்பவம் அனைத்து மத மக்களையும் சொல்லமுடியாத சோகத்திற்குள்ளாக்கியுள்ளது. போர்க்காலங்களில் வெடிக்க வேண்டிய குண்டு, தேவாலய பிரார்த்தனை நேரத்தில் வெடித்திருக்கிறது. இது மதத்தின் பெயரால் மனித மனங்களில் ஏற்பட்டுள்ள வெறுப்பை வெளிக்காட்டி இருக்கிறது.

மதம் என்பது மனிதர்களின் நல்வாழ்வுக்காக உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம். பூமியிலுள்ள ஒவ்வொரு மக்களும் நம் உறவுகள்தான். மதத்தின் பெயரைச்சொல்லியோ, சாதியை சொல்லியோ, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று சொல்லியோ வேறுபடுத்திக்காட்டுவது அறியாமையின் வெளிப்பாடு.

குழந்தைகளும், வயதான பெரியவர்களும் மன அமைதிக்காக செல்லும் இறைவனின் ஆலயங்கள் புனிதமானது. இதுபோன்ற இடங்களில் சண்டையிடுவதே தவறானது. ஆனால், இன்று குண்டு வெடித்திருக்கும் துயர சம்பவம் இனிவரும் காலங்களில் எங்கும் நடைபெறாதவண்ணம் நம் அனைவரும் ஒற்றுமையுடனும், மத நல்லிணக்கத்துடனும் அனைவரும் நம் சொந்தங்கள் என்ற முறையில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அன்புடனும், பாசத்துடனும் வாழ கற்றுக்கொள்வது உலக அமைதிக்கு வழிவகுக்கும்.

மனிதநேயம் மாண்டுபோகக்கூடாது.

1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை