திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை சார்பில் நடைபெற்ற “தொழில்முனைவோர் நேரடி பயிற்சி கண்காட்சி”
திருச்செந்தூர், ஆதித்தனார் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை மற்றும் தொழில்முனைவோர் மையம் [ENTREPRENEURSHIP CELL] சார்பில், கல்லூரி வளாகத்தில் “வணிக ஒளி - 2019” என்னும் “தொழில் முனைவோர் நேரடி பயிற்சி கண்காட்சி” நடைபெற்றது.
இந்தக் கண்காட்சியில் பொருட்களின் உற்பத்தி, நிதி, சந்தைப்படுத்துதல் மற்றும் மனிதவளம் ஆகிய துறைகளில் தேவையான நேரடி பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இந்தப் பயிற்சியில் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், பூக்கள், அழகு சாதனப் பொருட்கள் போன்றவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
கல்லூரி மாணவ-மாணவிகள் அனைவரும் இந்த தொழில் முனைவோர் நேரடிப் பயிற்சி கண்காட்சியைப் பார்வையிட்டு தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சென்றார்கள். மாணவர்களால், மாணவர்கள் நலன்கருதி நடத்தப்பட்ட இந்தக் கண்காட்சி “தொழிலாளியை, தொழில்முனைவோராக்கும் முயற்சி” என்று பலரும் பாராட்டினார்கள்.
கண்காட்சியில் கலந்துகொண்ட மாணவர்களில் கதிர்வேல் கிருஷ்ணன் அணியினர் முதலிடமும், பாலாஜி அணியினர் இரண்டாம் இடமும், பாலகிருஷ்ணன் அணியினர் மற்றும் சிவா அணியினர் மூன்றாம் இடமும் பெற்றனர்.
பரிசு பெற்றவர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் பொருளாதார துறைத்தலைவர் டாக்டர்.C.ரமேஷ், உடற்கல்வி இயக்குநர் டாக்டர்.D.ஜிம் ரீவ்ஸ் சைலன்ட் நைட் மற்றும் இயற்பியல் துறைத்தலைவர் டாக்டர்.T.பாலு ஆகியோர் செயல்பட்டார்கள்.
தொழில்முனைவோர் நேரடி பயிற்சி கண்காட்சிக்கான ஏற்பாடுகளை வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் டாக்டர்.S.நாராயணராஜன் என்ற நெல்லை கவிநேசன் மற்றும் பேராசிரியர்கள் டாக்டர்.A.அந்தோணி சகாய சித்ரா, A.தர்மபெருமாள், டாக்டர்.M.R.கார்த்திகேயன், T.செல்வக்குமார், நூலக உதவியாளர் M.முத்துக்குமார் மற்றும் மாணவர்கள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
பரிசு பெற்றவர்களை கல்லூரி முதல்வர் டாக்டர்.D.S.மகேந்திரன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
கருத்துரையிடுக