தூத்துக்குடியில் நடைபெற்ற புத்தகத்திருவிழாவில் (2019) - நெல்லை கவிநேசன்

தூத்துக்குடியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் (2019) - நெல்லை கவிநேசன் 

“தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம்” மற்றும் “தேசிய வாசிப்பு இயக்கம்” சார்பில் தூத்துக்குடி ராமையா திருமண மண்டபத்தில் கடந்த 04.04.2019 (வியாழக்கிழமை) அன்றுமுதல் 14.04.2019 (ஞாயிற்றுக்கிழமை) வரை தூத்துக்குடியில் நடைபெறுகிறது. அண்ணா பல்கலைக்கழக வஉசி பொறியியல் கல்லூரி டீன் டாக்டர்.திரு.B.ஜெயந்தி திறந்து வைத்தார்கள். நூலகர் டாக்டர்.திரு.முருகன் முதல் விற்பனையை துவங்கிவைக்க திரு.முத்துமுருகன் பெற்று கொண்டார்கள்

இங்கு 30 அரங்குகள் அமைக்கப்பட்டு ஒரு லட்சம் தலைப்புகளில் ஒரு கோடி புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் ஒவ்வொருநாளும் மாலையில் கலைநிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள்  மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

05.04.2019 வெள்ளிக்கிழமை அன்று - கலைமாமணி திரு.கைலாசமூர்த்தி மற்றும் எழுத்தாளர் திரு.மதிவாணன் அவர்களின் “இயற்கையை காப்போம்” கலைநிகழ்ச்சி நடைபெற்றது. டாக்டர்.திரு.மோகனப்பிரியா  (துணைத் தலைவர்,  தேசிய வாசிப்பு இயக்கம்) “வாசிப்பும், வாழ்வியலும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.  எழுத்தாளர் திரு.நா.நாகராஜன் அவர்கள் “நானும் நகைச்சுவையும்” என்ற தலைப்பில்  சிறப்புரையாற்றினர்

06.04.2019 சனிக்கிழமை அன்று - தூத்துக்குடி அழகர் ஜுவல்லர்ஸ் பெருமையுடன் வழங்கும் சிந்தனை சிரிப்பு பட்டிமன்றம் “மக்களை நல்வழிப்படுத்துவது நூல்களா? இணையதளங்களா?” என்ற தலைப்பில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் - நடுவர் கவிஞர்.முனைவர்.திரு.கோ.கணபதி சுப்பிரமணியன், “மக்களை நல்வழிபடுத்துவது புத்தகங்களே” என்ற தலைப்பில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர்.திரு.கு.கதிரேசன், வி.கே.புரம் திரு.பாரதி கண்ணன் மற்றும் சதக்கதுல்லா கல்லூரி மாணவி.மணிமாலா, “இணையதளங்களே என்னும் தலைப்பில்” சதக்கதுல்லா அப்பா கல்லூரி பேராசிரியை முனைவர் திரு.இரா.அனுசுயா, திருநெல்வேலி சேவியர் கல்லூரி பேராசிரியர் முனைவர்.திரு.அந்தோணிராஜ், கொம்மடிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் எழுத்தாளர் திரு.மு.பாலகிருஷ்ணன் ஆகியோர் வாதிட்டனர்.

தீர்ப்பு : “இணையங்களில் நல்ல இணையம் கெட்ட இணையம் உண்டு.. ஆனால் புத்தகத்தில் ஏது நல்ல புத்தகம் கெட்ட புத்தகம். எனவே, மக்களை நல்வழிப்படுத்துவது புத்தகமே புத்தகமே” என்று சொல்லி நிறைவு செய்தார் நடுவர்....

மாலையில், புத்தகத் திருவிழாவில் தேசிய வாசிப்பு இயக்கத் தலைவர் திரு.தம்பான் வரவேற்றார். தமிழ் சுவடி பதிப்பகத்தின் பொறுப்பாளர் திரு.பாலாஜி, தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கத் தலைவர் திரு.K.ரவிவர்மா ஆகியோர் முன்னின் வகித்தனர். பெட்காட் மாநகர செயலாளர் திரு.சு.முத்துசாமி தொடங்கி வைத்தார். அழகர் ஜுவல்லர்ஸ் சார்பில் வருகைதந்த திரு.சிவராமன் கெளரவிக்கப்பட்டார். நிறைவாக கலைமாமணி திரு. கைலாசமூர்த்தி நன்றி கூறினார்.

07.04.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று - கலைவளர் மணி உமா மாணிக்கம் தலைமையில் சிவா அஞ்சலி நாட்டியாலயா மாணவிகள் பரதநாட்டியத்துடன் துவங்கியது புத்தகத் திருவிழா கலை நிகழ்ச்சிகள். 




கவிஞர் பாலா இலக்கிய வட்டம் சார்பாக புத்தகத் திருவிழாவில் கவிஞர்.பால மணிவண்ணன் வரவேற்றுப் பேசினார். பேராசிரியர் திரு.சு.அழகேசன் (மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் ஆட்சிமன்றக்குழு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,  தலைவர் முத்துநகர் இலக்கிய வட்டம்) அவர்கள் “பாலாவின் பக்கங்கள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

கவிஞர் பாலா இலக்கிய வட்டம் ஒருங்கிணைத்த கவியரங்கம், கோவை வசந்தவாசல் கவிமன்றம், மற்றும் கவிஞர் பாலா இலக்கிய வட்ட கவிஞர்கள் "வாசிப்போம் சுவாசிப்போம்" என்பதை மையமாகக்கொண்டு  கவியரங்கம் நடத்தினார்கள்.  தமிழருவி கோவை கோகுலன் வசந்த (வாசல் கவிமன்றம் செயலாளர்) தலைமை வகித்தார். 

“புத்தகங்கள் அட்சய பாத்திரங்கள்” என்ற தலைப்பில் கவிஞர் திரு.அன்பு, “நாலும் அறிந்திட நூல் படிப்போம்” என்று  எழுத்தாளர் திரு.முகில் தினகரன், “படிப்புலகின்  படிக்கட்டுகள்” என்ற  தலைப்பில் கவிஞர்.பால மணிவண்ணன், “ஆற்றலைப் பெருக்கும் அறிவாலயம்” என்று  வழக்கறிஞர் திரு.இரா.சண்முகம் “நாளும் படிப்போம் நல்லன படைப்போம்” என்ற தலைப்பில் கவிஞர் திரு.மாரிமுத்து “நம்பிக்கையான நல்ல நண்பர்கள்” என்ற தலைப்பில்  தமிழ் சுடர்மணி திரு.பா.சுகுமாரன் ஆகியோர் கவியரங்கில் கவிதை பொழிந்தனர்.

தூத்துக்குடியில் கவியரங்கம் நிகழ்ச்சி நடைபெறுவது இதுவே முதல்முறை. பேராசிரியர். கவிஞர். திரு.பாலமணிவண்ணன் மிகுந்த ஆர்வத்துடன் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். இந்நிகழ்ச்சியை சிறப்பிக்க கோவையிலிருந்து வசந்தவாசல் கவிமன்றத்தையும் வரவைத்து, நிகழ்வை சிறக்க வைத்தார். கோவை வசந்தவாசல் கவிமன்ற செயலாளர் திரு.தமிழருவி கோவை கோகுலன், எழுத்தாளர் திரு.முகில்தினகரன், வழக்கறிஞர் திரு.இரா.சண்முகம் கவிஞர்.திரு.ஆ.மாரிமுத்து, தமிழ்சுடர் மணி திரு.பா.சுகுமாரன் ஆகியோர் வருகைதந்து தூத்துக்குடி புத்தக திருவிழாவிற்கு பெருமை செய்தனர்.

தூத்துக்குடியில் நடைபெற்ற முதல் கவியரங்கம் இவர்களால் சிறப்பாக நடைபெற்றது இவர்களுக்கும், பரதநாட்டியத்தால் நிகழ்ச்சியை மேலும் சிறப்பு செய்த சிவாஞ்சலி நாட்டியாலயா மாணவிகளுக்கும், அவர்கள் பெற்றோர்களுக்கும், பயிற்சி அளித்த கலைவளர் மணி உமா மாணிக்கம் அவர்களுக்கும், கலைமாமணி கைலாசமூர்த்தி அவர்கள் வாழ்த்தி பாடல்கள்மூலம் நன்றி உரைசெய்தனர்.

08.04.2019 திங்கட்கிழமை அன்று - “மாணவரும் வாசிப்பும்” என்ற தலைப்பில் வஉசி கல்லூரி இரண்டாம் ஆண்டு இயற்பியல் துறை மாணவன்.மணிகண்டன் சிறப்பாக உரையாற்றினார். திரு.L.N.ஷாஜகான் MJF அவர்கள் “வாசிப்பும் தலைமைப்பண்பும்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

வாசகர்கள், பொதுமக்கள் மாணவர்கள் அனைவருக்கும் “சிரிப்பு யோகா” என்ற ஒரு சிறப்பான பயிற்சியை சிரிப்பானந்தா வழங்கினார்கள். மிக முக்கியமானது சிரிப்பு யோகாவும், வாசிப்பும் இது இரண்டு முக்கியத்துவத்தையும் மிக அருமையாக விளக்கி கூறினார் திரு.சிரிப்பானந்தா. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மிக உற்சாகத்தோடு இந்த பயிற்சியில் பங்குகொண்டனர். புத்தக திருவிழாவில் சிரிப்பொலி கேட்டுகொண்டே இருந்தது.



09.04.2019 செவ்வாய்கிழமை அன்று - இன்று  மாலை “தாமிரபரணியும் தூத்துக்குடியும்” என்ற தலைப்பில் எழுத்தாளர் திரு.முத்தாலங்குறிச்சி காமராசு மற்றும் எழுத்தாளர் திரு.நாறும்பூ நாதனின் இலக்கிய சொற்பொழிவு நடக்கிறது. கலை பண்பாட்டுத்துறை தூத்துக்குடி ஜவகர் சிறுவர்மன்றம் மாணவ-மாணவிகள் வழங்கும் பரத நாட்டியம்,  நிகழ்ச்சியும் நடைபெறுகிறது

10.04.2019 புதன்கிழமை அன்று - தேசிய வாசிப்பு இயக்க கவுரவ தலைவர் திரு.நவமணி சண்முகவேலு, திரு.ஸ்ரீதர கணேசன், திரு.ஜெயலீலா ஆகியோர் பேசுகின்றனர்.

11.04.2019 வியாழக்கிழமை அன்று - திரை ஆய்வாளர் திரு.வருணன், வ.உ.சி. கல்லூரி பேராசிரியர் திரு.ஜாக்சன் ஆகியோர்  பேசுகின்றனர்.

12.04.2019 வெள்ளிக்கிழமை அன்று - ஆதித்தனார் கல்லூரி பேராசிரியர் திரு.கதிரேசன், கவிஞர்.திரு.மாரிமுத்து, எழுத்தாளர் திரு.ஆண்டோ கால்பட் ஆகியோரும் பேசுகின்றனர்.

13.04.2019 சனிக்கிழமை அன்று - எழுத்தாளர் திரு.பி.சங்கரலிங்கம், எழுத்தாளர் திரு.பிரபாகரன், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியர் திரு.சௌந்திர மகாதேவன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

14.04.2019 ஞாயிறன்று - மாலை நடைபெறும் நிறைவுநாள் நிகழ்ச்சியில் கலைவளர்மணி திரு.இசக்கியப்பன் தலைமையிலான ஸ்ரீசாரதா கலைக்கூட மாணவ, மாணவிகளின் தேசபக்தி பாடல்களை தொடர்ந்து தூத்துக்குடி மகாலட்சுமி கல்லூரி பேராசிரியை திரு.மல்லிகா, தேசிய வாசிப்பு இயக்க துணைச்செயலாளர் திரு.சரவணக்குமார் ஆகியோரின் சொற்பொழிவு நடக்கிறது.

நிகழ்ச்சியின்போது பொதுமக்கள் மற்றும் வாசகர்களுக்கு “படித்ததில் பிடித்தது” என்ற தலைப்பில் உரையாற்ற வாய்ப்பும், சிறப்பாக சொற்பொழிவாற்றும் வாசகர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது. கண்காட்சியில் அனைத்து முன்னணி பதிப்பகங்களின் புத்தகங்கள் இடம்பெற்றிருப்பது வாசகர்களுக்கு மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.

கண்காட்சிக்கான ஏற்பாடுகளை தேசிய வாசிப்பு இயக்க தலைவர் திரு.எஸ்.தம்பான், தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க தலைவர் திரு.ரவிவர்மா, செயலாளர் திரு.சரவணன், பொருளாளர் திரு.கார்த்திக், செயற்குழு உறுப்பினர் திரு.ரமேஷ், திரு.கஜேந்திரன், திரு.மணிமாறன், திரு.வென்பா, தேசிய வாசிப்பு இயக்க நிர்வாகிகள் டாக்டர் திரு.மோகன பிரியா, திரு.சரவணகுமார், திரு.நவமணி சண்முகவேலு, திரு.பாலாஜி ஆகியோர் சிறப்பாக செய்துள்ளனர்.

Post a Comment

புதியது பழையவை