நெல்லை கவிநேசன் பங்குபெற்ற நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் அணி எண் 45 சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது. திருச்செந்தூரை அடுத்த வீரபாண்டியன்பட்டணம், சண்முகபுரம் கிராமத்தில் நடந்த 7 நாட்கள் சிறப்பு முகாமின் நிறைவு விழா 28.03.2019 அன்று நடைபெற்றது.
விழாவிற்கு ஆதித்தனார் கல்லூரி முதல்வர் டாக்டர்.சி.மகேந்திரன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். ஆதித்தனார் கல்வி நிறுவனங்களின் செயலர் டாக்டர்.பெ.சுப்பிரமணியம் வாழ்த்துரை வழங்கினார். நாட்டு நலப்பணித்திட்டத்தின் முக்கியத்துவம்பற்றி நெல்லை கவிநேசன் சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக நாட்டு நலப்பணித்திட்ட அணி எண் 45 திட்ட அலுவலர் டாக்டர்.பே.மருதையா பாண்டியன் வரவேற்புரையாற்றினார். மாணவச் செயலர் 7 முகாம் பற்றிய செயல்திட்ட அறிக்கையை சமர்பித்தார்.
விழாவில் சண்முகபுரம் ஊர் கமிட்டி தலைவர், செயலர், பொருளாளர் ஆகியோர் கலந்துகொண்டார்கள். பின்னர் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சியோடு இனிதே நிறைவு பெற்றது.
கருத்துரையிடுக