சௌந்தரபாண்டியனார் பள்ளி ஆண்டுவிழா.



சௌந்தரபாண்டியனார் பள்ளி 
ஆண்டுவிழா.





    திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, செட்டிகுளம் அமரர் திருமிகு. என் சௌந்தர பாண்டியன் அவர்கள் பெயரில் இயங்கும் பள்ளி சௌந்தரபாண்டியனார் நர்சரி
மற்றும் பிரைமரி பள்ளியாகும்.


    எனது அன்பு தந்தையான திரு என் சௌந்தரபாண்டியன் அவர்கள் 1962 மற்றும் 1967 ஆம் ஆண்டுகளில் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக சிறப்பான முறையில் பணியாற்றியவர்கள். வள்ளியூர் யூனியன் சேர்மன் ஆக சுமார் 10 ஆண்டுகள் பணிபுரிந்து மக்கள் சேவை ஆற்றினார்கள். செட்டிகுளம் பஞ்சாயத்து தலைவராக பல ஆண்டுகள் பணிபுரிந்தார்கள்.

    அவர்கள் நினைவாக எனது அன்புச் சகோதரர் திரு என். எஸ் . கணேசன் அவர்கள் (முன்னாள் வேளாண்துறை இணை இயக்குனர்) உருவாக்கிய பள்ளி யில் 20வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. 




இந்த விழாவிற்கு நல்லாசிரியர் திரு .பி .காண்டீபன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். 



கூடங்குளம் அணுமின் நிலைய மனித வள மேம்பாட்டு துறை தலைமை அலுவலர் திருமதி E.T. விஜயராணி அவர்கள் முதன்மை விருந்தினராக வருகை புரிந்து உரையாற்றினார்கள். 





திருச்செந்தூர் ,ஆதித்தனார் கல்வி நிறுவன செயலர் டாக்டர் எஸ் நாராயண ராஜன் (நெல்லை கவிநேசன்) சிறப்புரையாற்றி பரிசளிப்பு நிகழ்விலும் கலந்து கொண்டார்கள். 


விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் திரு என் எஸ் கணேசன் அவர்கள், நிர்வாக அதிகாரி தெரு என் எஸ் ஜி சௌந்தர பாண்டியன் மற்றும் என் எஸ். ஜி .பங்கஜம் அவர்கள், ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவியர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள்.



























-----------------------------------------------------------


Post a Comment

புதியது பழையவை