நெல்லை கவிநேசன் அப்போது சென்னை சட்டக் கல்லூரியில் பி எல் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தார்.
பின்னர் 1986 ஆம் ஆண்டு திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உதவி பேராசிரியர் பணியில் சேர்ந்தார் .அப்போது பேராசிரியர் டாக்டர் கண்ணன் அவர்கள் முயற்சியால் பார்த்திபன் பதிப்பகம் மூலம் இந்த கட்டுரைகள் "சட்டம் சந்தித்த பெண்கள் " என்னும் நூலாக வெளிவந்தது.
இந்த நூலை 1987 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் மதிப்புக்குரிய பேராசிரியர் .அ.கி ஆழ்வார் அவர்கள். திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் ஆங்கிலத் துறை பேராசிரியர்.
நெல்லை கவிநேசன் மீது அன்பு கொண்ட பேராசிரியர், அந்த நூலை மொழிபெயர்த்த பின்னர், வெளியிட வாய்ப்புகள் இல்லாததால் கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்த நூல்"WOMEN AND LAW" வெளியிடப்பட்டுள்ளது.
விழாவுக்கு மதுரை எழுத்தாளர் திரு நேரு அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
விழாவுக்கு வந்திருந்தவர்களை அனிதா குமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் திருமதி . மீனா அவர்கள் வரவேற்றார்கள்.
பள்ளி நிர்வாக அதிகாரி திரு. கண்ணபிரான் அவர்கள் மற்றும் பள்ளி துணை முதல்வர் திருமதி சாந்தி அவர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தான் எழுதிய ஆங்கில சிறுகதையை வாசித்தார், பள்ளி ஆசிரியை அபிஷா ஞான டயானா அவர்கள்.
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முன்னாள் துறை தலைவரும் பேராசிரியருமான டாக்டர் பாபு கிருபாநிதி அவர்கள் நூல் மதிப்புரை வழங்கினார்கள்.
அவர்கள் தனது மதிப்புரையில்...
"ஒரு மொழிபெயர்ப்பு நூல் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு இந்த நூல் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. நூலை எழுதியவரை விட மொழிபெயர்ப்பாளர் மிகச் சிறப்பாக தனது கடமையை செய்திருக்கிறார். ஒரு மாணவனின் நூலை பேராசிரியர் மொழிபெயர்த்திருப்பது உலக வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகும். மொழிபெயர்ப்பு என்பது மூல நூலின் கருத்துக்களையும் உணர்வுகளையும் கலாச்சாரத்தையும் அப்படியே பிரதிபலிக்கும் வகையில் அமைய வேண்டும். இந்த நூல் அத்தனை சிறப்புகளையும் உள்ளடக்கி இருக்கிறது " எனப் புகழாரம் சூட்டினார்
"சட்டம் சந்தித்த பெண்கள்" என்னும் நூலை எழுதிய நெல்லை கவிநேசன் , நூல் உருவாக எடுத்துக்கொண்ட முயற்சிகளை விளக்கினார். பேராசிரியர் ஆழ்வார் அவர்களது அன்பையும், அறிவு சார் உதவிகளையும் பெரிதும் பாராட்டினார்.பேராசிரியர் டாக்டர். பாபு கிருபாநிதி அவர்களது ஆங்கில நூலுக்கான முன்னுரைக்கும் நன்றி தெரிவித்தார்.
அனிதா குமரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சார்பில்பேராசிரியர் ஆழ்வார் அவர்களுக்கும், நெல்லை கவிநேசன்அவர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கினார்கள்.
"WOMEN AND LAW" என்னும் நூலின் ஆசிரியர் பேராசிரியர் . அ.கி. ஆழ்வார் அவர்கள் நூல் உருவாகிய விதம் பற்றி விரிவான விளக்கம் அளித்தார். மொழிபெயர்ப்பு நூலை எவ்வாறு உருவாக்க முடிந்தது என்பதை தெளிவாக சுட்டிக்காட்டினார்.
"பேராசிரியர் டாக்டர் பாபு கிருபாநிதி அவர்களின் மதிப்புரை எனக்கு மன மகிழ்ச்சியை தருகிறது." எனக் குறிப்பிட்டார், பேராசிரியர் . அ.கி ஆழ்வார் அவர்கள்.
பேராசிரியர் டாக்டர் கதிரேசன் அவர்கள் நூல் ஆசரியர்களை பாராட்டி பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தார்.
நிகழ்வின் முடிவில், திருச்செந்தூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆங்கில ஆசிரியர் திரு .பத்மநாபன் அவர்கள் நன்றி கூறினார்.
விழாவில் பேராசிரியர் டாக்டர் கதிரேசன் அவர்கள், சென்னை மாலை முரசு முன்னாள் செய்தி ஆசிரியர் திரு. குமார் ராமசாமி ஆதித்தன் அவர்கள், தொலை தொடர்புத்துறை முன்னாள் அதிகாரி திரு. சந்திரசேகர் அவர்கள், தூத்துக்குடி மின்சாரத்துறை முன்னாள் அதிகாரி திரு. பாலகிருஷ்ணன் அவர்கள், உடன்குடி ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் திரு சிவசுப்பிரமணியன் அவர்கள், உடன்குடி பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி ஆசிரியை திருமதி அமுதா, மற்றும் அனிதா குமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.
----------------------------------------------------------
அருமையான விழா
பதிலளிநீக்குதங்கள் அன்பான பாராட்டுக்கு இனிய நன்றிகள்
பதிலளிநீக்குகருத்துரையிடுக