திக்கெட்டும் பரவட்டும்

 

திக்கெட்டும் பரவட்டும்


 தீப ஒளி 



                                                                                  கவிஞர் எஸ் அரிலிங்கம்.

                                                                                  Cell: 94436 95923

தீபாவளி திருநாள் தீப ஒளி நன்னாள் 

தீப ஒளி முன்னே ஏற்போம் சூளுரை 

ஏற்றுக தீபம் ஏற்றுக தீபம் எழில் முகம் நாம் காண 

எண்ணமதில் ஏற்றுக தீபம் ஏற்றுக தீபம் நலம் வாழ.


விழும் இடிக்கும் எழும் ஞாயிருக்கும் ஜாதிகள் இல்லை

ஏழிசைக்கும் விழிஅசைவுக்கும் மொழிகள் இல்லை.

மனித ஜீவன் கழித்துப் பார்த்தால் மதமும் இல்லை.

இனமும் மொழியும் மதமும் இயற்கைக்கு இல்லை. 


இடையில் தோன்றி இடையில் மறையும்- மானிடா 

துளிர் விடும்போதே எண்ணமதில் எண்ணிவிடு.

சிந்தும் ரத்தமும் அழியும் யாக்கையும் 

அனைவருக்கும் ஒன்றுதான் ஆணவம் அழித்திடு. 


உண்டால் அமுதம் உமிழ்ந்தால் எச்சில் 

சிரித்தால் நட்பு சினந்தால் வெறுப்பு 

உணர்ந்தால் வெற்றி மறந்தால் தோல்வி 

உண்மை தீபஒளி உள்ளமதில் ஏற்றிவிடு 


திக்கெட்டும் பரவட்டும் தீபஒளி திருநாள்

Post a Comment

புதியது பழையவை