கலாம் வியாபாரிகள் சங்கம்
20 .10. 2024 அன்று கலாம் வியாபாரிகள் சங்கம் துவக்க விழா மாலை 6 மணி அளவில் அண்ணாமலை ரெசிடென்சி மினி A/C ஹாலில் வைத்து மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கலாம் வியாபாரிகள் சங்கத் தலைவர் R.தர்மராஜா அவர்கள் மற்றும் கலாம் வியாபாரிகள் சங்கத் துணைத் தலைவர் சிவனேசன் ஆகியோர் தலைமை வகித்தனர் .
அமுதா மெஸ் S. பட்டு துணைச்செயலாளர் P. ஜெயக்குமார் இணைச் செயலாளர் கலாம் வியாபாரிகள் சங்கம் A.கந்தன் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்செந்தூர் தாலுகா காவல் ஆய்வாளர் G.சுந்தரமூர்த்தி அவர்கள் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் .
விழாவிற்கு வந்த அனைவரையும் பொருளாளர் திருப்பதிT. விஜி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் .
அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டல தலைவர் R. கோடீஸ்வரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள் .
கலாம் வியாபாரிகளின் சங்கத்தின் தலைமை வழக்கறிஞர் பிரகாஷ் அவர்கள் நன்றி உரை கூறினார்.
இந்த நிகழ்ச்சியினை கலாம் வியாபாரிகள் சங்க செயலாளர் S. அஜித் குமார் அவர்கள் துணை செயலாளர் சிவராம் பால் மணி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்..
இந்த நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வாழ் வியாபார பெருமக்களின் அடிப்படை பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
மேலும் அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும், வியாபாரிகள் அடிப்படை பிரச்சனைகளை அரசுக்கு எடுத்து செல்வதற்கும் நலிந்த வியாபாரிகள் வளர்ச்சிக்கு உதவி செய்து அவர்களை வியாபாரத்தில் உயர்த்துவது,மிகவும் வறுமையில் இருக்கும் வியாபாரிகளின் நன்றாக படிக்கும் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்பது,10th மற்றும் 12th மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற பள்ளி குழந்தைகளுக்கு பரிசு மட்டும் ஊக்கத்தொகை வழங்குதல் போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டது
கருத்துரையிடுக