விக்கிரமசிங்கபுரம் பசுக்கிடைவிளை அருள்மிகு ஸ்ரீ பத்திர காளியம்மன் திருக்கோவில் கொடை விழா சிறப்பு நிகழ்ச்சியாக மாபெரும் திரைப்பட இசை பட்டிமன்றம் நடைபெற்றது.
மக்கள் மனதில் பெரிதும் நிலைத்து நிற்பது காதல் பாடல்களா? தத்துவ பாடல்களா?என்ற தலைப்பில் சன் டிவி அரட்டை அரங்க புகழ் நல்லாசிரியர் முனைவர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் தலைமையில் மாபெரும் திரைப்பட இசை பட்டிமன்றம் நடைபெற்றது.
நிகழ்வுக்கு வந்திருந்தவர்களை பக்தி தமிழ் பாவலர் பிரில்லியன்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் பைந்தமிழ் செல்வர். பாரதி.க.கண்ணன் வரவேற்றார்கள். பட்டி மன்ற குழு ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சு.முத்துசாமி பக்தி பாடல் பாடினார்.
மக்கள் மனதில் பெரிதும் நிலைத்து நிற்பது காதல் பாடல்களே என்று நாஞ்சில் இசையரசி மலர்விழி, பேராசிரியை மங்கையர்கரசி, இயல் இசை அரசி.ஏரல் சொர்ணலதா ஆகியோரும் தத்துவப் பாடல்களே என்று நாவலர் முனைவர் இராம. பூதத்தான்,கல்வி கலைமணி உக்கிரன்கோட்டை மணி, எழுத்தாளர் சிந்தனையாளர் மு.வெ.ரா.ஆகியோரும் வாதிட்டனர்.
ஊர் தலைவர் பி. பரமசிவன் நாடார், ஊர் செயலாளர் எஸ் மயில்வண்ணன் நாடார், ஊர் பொருளாளர். எஸ்.கணேசன் நாடார் ஆகியோர் பட்டிமன்றப் பாவலர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்கள்.
நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு மயூரி தொலைக்காட்சி அதிபர் லயன். எம். ஆறுமுகநயினார் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார். 1330 குறளையும் மிகச் சிறப்பான முறையில் ஒப்புவித்து மாவட்ட ஆட்சியர்.திரு.வே விஷ்ணு.இ.ஆ .ப .அவர்களிடம் பாராட்டு பெற்ற பசுக்கிடைவிளை பகுதியைச் சார்ந்த மாணவி பிருந்தா பிரில்லியன்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் லயன் பி.எஸ்.வி.எஸ். சின்னசாமி அவர்களால் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டப்பெற்றார்.
இந்நிகழ்வில் திருக்கோயில் உப தலைவர், உப செயலாளர் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள், ஆலோசகர்கள், மற்றும் இலக்கிய ஆர்வலர் இளங்கோ மற்றும் பொதுமக்கள் தாய்மார்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு பட்டிமன்றம் கண்டு கேட்டு மகிழ்ந்தனர்.
---------------------------------------------
கருத்துரையிடுக