வாரத்திருப்பாளோ வண்ணமலர்-இனிய பாடல்

வாரத்திருப்பாளோ வண்ணமலர்-இனிய பாடல்


“குத்து விளக்கெரிய கூடம் எங்கும் பூ மணக்க

மெத்தை விரித்திருக்க மெல்லியலாள் காத்திருக்க”

கவிஞரின் இந்த இரண்டு வரிகள் முழு காட்சியையும் படம் பிடித்துவிடும் நேர்த்தியை என்னென்பது!

டில் இருந்தும் கட்டுப்பாடு காக்கும் காதலர்கள் பாடல். காட்சியில் எஸ்.எஸ்.ராஜேந்திரனும், விஜயகுமாரியும் நடிப்பிலும் பாவத்திலும் அந்த கண்ணியமான நெருக்கத்தை பாவத்தோடு வெளிப்படுத்தி இருப்பார்கள்.

சோகப்பாடல் என்று நினைக்க வைக்கும் அளவுக்கு உருக்கம் நிறைந்த செனாய் வாசிப்பு…குறிப்பாக,

கட்டுப்பாட்டுடன் அருகில் நிற்கும் காதலனைப்பார்த்து

“பக்கத்தில் பழமிருக்க பாலோடு தேன் இருக்க

உண்ணாமல் தனிமையிலே உட்கார்ந்த மன்னன் அவன் “

என்ற வரிகளின் பின்னணியில் ஒலிக்கும் செனாய் இசை , காதலனின் இதய வேதனையை வெளிப்படுத்துகிறது.

அதே சமயம் இடையிசையில் குழல் வயலின் உற்சாக இசை தரும். எனினும் பாடல் முழுவதும் காதலின் ஏக்கத்தை சோகமாக பரவ விட்டிருப்பது போல தோன்றும். பாடலின் மெட்டும் மிதமான வேகமும் காரணமாக இருக்கலாம்.

இலக்கிய நயம் வரிகளில் மிளிர, காதலும் சோகமும் குரல்களில் தெரிய, சுகமான உணர்வை ஏற்படுத்தும் மெல்லிசைப் பாடல்.

——————————

படம்: பச்சை விளக்கு (1964)

இசை: M S V, T K ராமமூர்த்தி

குரல்: டி.எம்.எஸ் – P.சுசீலா

வரிகள்: கண்ணதாசன்

————————–

குத்து விளக்கெரிய

கூடமெங்கும் பூ மணக்க

மெத்தை விரித்திருக்க

மெல்லியலாள் காத்திருக்க


வாராதிருப்பானோ வண்ண

மலர் கண்ணன் அவன்

சேராதிருப்பானோ சித்திரப்

பூம்பாவை தன்னை


வாராதிருப்பானோ வண்ண

மலர் கண்ணன் அவன்

சேராதிருப்பானோ சித்திரப்

பூம்பாவை தன்னை


கண்ணழகு பார்த்திருந்து

காலமெல்லாம் காத்திருந்து

பெண்ணழகை ரசிப்பதற்கு

பேதை நெஞ்சம் துடி துடிக்க

பேதை நெஞ்சம் துடி துடிக்க


வாராதிருப்பாளோ வண்ண மலர் கன்னி அவள்

சேராதிருப்பாளோ தென்னவனாம் மன்னவனை


பக்கத்தில் பழமிருக்க

பாலோடு தேனிருக்க

உண்ணாமல் தனிமையிலே

உட்கார்ந்த மன்னனவன்

உட்கார்ந்த மன்னனவன்


வாராதிருப்பானோ வண்ண

மலர் கண்ணன் அவன்

சேராதிருப்பானோ சித்திரப்

பூம்பாவை தன்னை


கல்வி என்று பள்ளியிலே

கற்று வந்த காதல் மகள்

காதலென்னும் பள்ளியிலே

கதை படிக்க வருவாளோ

கதை படிக்க வருவாளோ


வாராதிருப்பாளோ வண்ண

மலர் கன்னி அவள்

சேராதிருப்பாளோ

தென்னவனாம் மன்னவனை.

நன்றி: ஜெயசீலன் பிளாக்


Post a Comment

புதியது பழையவை