மதுரையில் மனம் இனிக்கும் முப்பெரும் விழா


மதுரையில்
 மனம் இனிக்கும்
 முப்பெரும் விழா



 பழங்காநத்தம் பகுதியின் வள்ளுவர் வழி மன்றத்தின் 53வது ஆண்டு விழா சிறப்பான முறையில் சோமசுந்தர பாரதியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது... 

 உழவர் திருநாள், வள்ளுவர் நாள் மற்றும் குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா என்று முப்பெரும் விழாவிற்கு நாகரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் திரு. நாகரத்தினம் அவர்கள் தலைமை தாங்கினார். 

 சி.இ.ஓ.ஏ கல்வி நிறுவனத்தின் தலைவர் திரு. ராஜா கிளைமாக்ஸ் அவர்கள் முன்னிலை வகித்தார். மேனாள் தெற்கு மண்டலத் தலைவர் திரு. பெ. சாலை முத்து, மேனாள் அரசு உறுப்பினர் திரு. நா. முத்துராமலிங்கம், மேனாள் மாமன்ற உறுப்பினர் திரு. எஸ். எஸ். போஸ், சுற்றுச்சூழல் ஆர்வலர் திரு. ஆ. க. தவமணி, உடற்பயிற்சி ஆசான் திரு. வீ. கே. பழனி, சமூக ஆர்வலர் திரு. ஏ. பெரியசாமி, துணை வேளாண் மேலாளர் திரு. க. செ. சேதுராமன் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.

 திருக்குறள் நெறியின் வெற்றிக்கு பெரிதும் துணை நிற்பது நட்பா? - உறவா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

 நடுவர் - சொற்கொண்டல் திரு. சண்முக. ஞான சம்பந்தன்.. 

நட்பே என்ற அணியில் .........
முனைவர். வை. சங்கரலிங்கனார்  மற்றும் திருமதி. ஞான. செல்வராக்கு. 

உறவே என்ற அணியில்
முனைவர் சத்யா மோகன் மற்றும் திருமதி. ஞான. சண்முகா தேவி.

Post a Comment

புதியது பழையவை