துர்கா தேவியின்
திருஷ்டி மந்திரம் !
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள் சில பேரின் கண்பார்வை நம் வளர்ச்சியை மட்டுமல்ல குடும்பத்தின் ஒற்றுமையை கூட இல்லாமல் செய்துவிடும். அருகில் இருப்பவர்கள், அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் என இப்படி பல தரப்பட்ட மக்களின் திருஷ்டி பார்வையை நீக்க துர்காதேவியின் அற்புத மந்திரத்தை தினமும் 27 முறை கேட்டு வாருங்கள் எல்லாவிதமான கண் திருஷ்டி தோஷங்களும் நீங்கும். இம்மந்திரத்தை கேட்பதோடு மட்டுமல்லாமல் தினமும் இரவு படுக்க செல்லும் முன் நம் வீட்டு உறுப்பினர்கள் அனைவரையும் கற்பூரத்தை உடல் மற்றும் தலையைச் சுற்ற சொல்லி வாசல் நடையில் வைத்து கற்பூரத்தை எரித்து பின் தண்ணீர் தெளித்தால் அனைத்து கண் திருஷ்டிகளும் முழுமையாக நீங்கிவிடும்.
தமிழ்கோவில் யூடியுப் சேனலுக்காக சகலவிதமான கண் திருஷ்டிகளையும் நீக்கும், அன்னை ஆதிபராசக்தியான ஸ்ரீ துர்கா தேவியின் அற்புத மந்திரத்தை 27 முறை பாராயணம் செய்து உங்களுக்கு கொடுப்பது உங்கள் சுபாஷ் சந்தர். நன்றி வணக்கம்.
மந்திரம் :
ஓம் ஹரீம் தும் த்ருஷ்டி நாசின்யை வித்மஹே
தும் ஹரீம் ஓம் துஷ்ட நாசின்யை தீமஹி
தந்நோ த்ருஷ்டி துர்கா ப்ரசோதயாத்
-----------
Voice : M.K. SUBHASH CHANDER
Music - Directed, Produced, Recorded, Mixed, Mastered, Video Edited by Tamilkovil.
கருத்துரையிடுக