எங்கள் காமராஜர்

 

எங்கள் காமராஜர்



இமயம் குமரி உள்ளவரை

கங்கை காவிரி ஓடும்வரை

காமராஜரின் புகழிருக்கும்! -  அதில்

சந்தியமூர்த்தி மணமிருக்கும்


சரணம்

சமதர்மம் காத்த மகன் - சத்திய

வாழ்க்கை வாழ்ந்த மகன்

சாதி பேதம்; அற்றமகன் - அவர்

சரித்திரம் பூகோளம் கற்றமகன்! 


தியாகத்தில் வளர்ந்த சீலன் - அவர்

அணைகள் கட்டிய கரிகாலன்

கல்லாமல் உயர்ந்த மேதை – அவர்

அறிவோ பாரத கீதை


பட்டி தொட்டி வாழ்ந்தது – அவராலே

பாசன வசதி கண்டது

பள்ளிச் சாலை வந்தது – எங்கும்

பசுமை வயல்களில் நிறைந்தது


மின் வசதி தந்தார் - மேவும்

தொழில் பல கண்டார்

மதிய உணவு வழங்கினார் - மாணவர்

உயர ஏணி ஆனார்


உலகம் எல்லாம் பாராட்டும் - இந்த

உத்தமன் பெயரைச் சொன்னால்

மனிதயினம் கூடித் தாலாட்டும் - எங்கள்

மக்கள் தலைவர் காமராஜ்


மனித குலத்தின் வழிகாட்டி – அவர்

மாண்புகள் நிறைந்த கைகாட்டி

நாட்டுப் பற்று மிக்க கோபுரம் - அவர்

நல்லவர் போற்றும் காவியம்.


தென்றலில் மணக்கும் சந்தனம் - தமிழத்

தேவியர் நெற்றி குங்குமம்

அவதார மாந்தரின் திருநீரு – பிறப்பில்

பெருமாள் ஆன பூந்தேரு


கத்தரி வெண்டை சாம்பாரு – அத்துடன்

மோரு சாதம் பரிமாறி

வாழை இலை சாப்பாடு – அவர்

உண்டு வாழ்ந்த வரலாறு


தோளில் நாடு காத்து – மக்கள்

தொண்டில் தன்னைச் சேர்த்து

சுய நலமின்றி நடை போட்டு – மக்கள்

மனங்களில் கடவுளாக வாழ்ந்தார்


ஏற்ற இறக்கம் வந்த போது – அவர்

எதிரிகளை அழ வைத்தார்

இப்படி ஒரு மனிதரா – என்று

இந்தியர் முகத்தில் விரல்வைத்தார்!


தமிழர் மனங்களில் கோவில் கட்டி

தரணி எங்கும் தீபம் ஏற்றி

மகாராஜன் வாழ்க வென்று - பாடி

மகிழ்வோம் கும்மி கொட்டி.



பேரா.முனைவர் அ. கந்தசாமி

முதல்வர் 

வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

குருவிகுளம்.

குறிப்பு: இந்தக் கவிஞர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டத்தில் உள்ள குத்தபாஞ்சாண் என்னும் குக்கிராமத்தில் பிறந்தவர். இவர் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர். தூத்துக்குடி காமராஜர் கல்லூரி பேராசிரியராக பணி ஆற்றியவர். இதுவரை 31 முனைவர் பட்ட ஆய்வாளர்களையும்     (Ph. D),    222 இளநிலை ஆய்வாளர்களையும் ( Ph.D) உருவாக்கியவர். மூன்று நூல் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட கவிதைகளையும் எழுதியவர். சிறந்த மேடைப் பேச்சாளர் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்.

                                                      -----------------------------


a

Post a Comment

புதியது பழையவை