உழவனின் நண்பன் மண்புழு. மண்புழுவின் நண்பர் யார்?

"உழவனின் நண்பன் மண்புழு. மண்புழுவின் நண்பர் யார்?


"உழவனின் நண்பன் மண்புழு. மண்புழுவின் நண்பர் யார்? "இந்த கேள்விக்கான விடையை தெளிவாக்குகிறது இந்த வீடியோ தொகுப்பு.

E-Mail : geethasamypublishers@gmail.com

சாதிக்க துடிக்கும்  இளைஞர்கள்  உங்களுக்காக வாழ்க்கையில் பல சாதனைகளை தன்வசமாக்கி பயணித்துக்கொண்டிருக்கும் வெற்றியாளர்களை சந்தித்து   அவர்களின் அனுபவங்களை ஆலோசனைகளை Geethasamy  publishers தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் இந்தத் தொடரின் இன்றைய பதிவில் பங்கு பெறுபவர் புதுவையில் சாதாரணமான ஒரு குடும்பத்தில் பிறந்து உலக அளவில் பெயர் பெற்றவர் முனைவர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில் அவர்கள். மண் புழு வளர்த்து விவசாயிகளை காப்பாற்ற சொல்லும் இயற்கை விஞ்ஞானி 

புதுவையில் பள்ளிப்படிப்பை முடித்த இவர் தனது கல்லூரி வாழ்க்கையை சென்னை புதுக்கல்லாரியில் தொடர்ந்து அங்கே பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, முனைவர் பட்டம் என அனைத்தையும் தனதாக்கி கொண்டவர். தாம் படித்த அதே கல்லூரியில் உதவிப்பேராசிரியராக பணியை தொடங்கி துணை முதல்வர் என பல நிலைகளில் பணியாற்றி உள்ளார். பல மாணவர்களுக்கு அவர்களின் ஆராய்ச்சி மற்றும் முனைவர் பட்டம் பெற வழி காட்டியவர். அது மட்டுமல்ல இன்றும் இளைஞர் முன்னேற்றத்திற்காகவும்  சமூக வளர்ச்சிக்காகவும் தன்னை முழுதும் அர்பணித்துக்கொண்டுள்ளவர்.

சமீபத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்த மாநில அரசின் வளர்ச்சிக்குழுவில் உறுப்பினராக அறிவிக்கப்பட்ட இவரின்  மண்புழு ஆராய்ச்சி உலக பிரசித்தி பெற்றதால், அவரை பல நாடுகள் அவர்கள் நாட்டிற்கு வந்து குடியேற சொன்ன போதிலும் அந்த அழைப்புகளை மறுத்து விட்டார்.

அவர்தம்  அனுபவத்தை  நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். 


Post a Comment

புதியது பழையவை