ஆனந்தம் தரும் ஆத்திசூடி-17 புலவர் சங்கரலிங்கம்.

 

ஆனந்தம் தரும் ஆத்திசூடி-17

 புலவர் சங்கரலிங்கம்.


நினைப்பது முடியும்

அப்போது நடந்து முடிந்திருந்த தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஒரு மாணவன் தேர்ச்சி பெறவில்லை. 

ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி .

வகுப்பில் பண்பான மாணவனாகவே நடந்து கொண்டிருந்தான். ஆனாலும் ,என்ன காரணமோ தெரியவில்லை .

அவன் தேர்ச்சி பெறாமல் போய்விட்டான். பாடம் நடத்தும் போது கவனித்து இருந்தாலே போதுமே .அதை வைத்து எழுதினால் கூட தேர்ச்சி பெற்று இருக்கலாமே,



"வகுப்பில் பாடம் நடத்தும் போது நீ என்ன காதுல பஞ்சு வெச்சு அடைச்சுகிட்டிருந்தியா? "என்று கோபத்தில் திட்டி விட்டார் ஆசிரியர்.

அந்த மாணவனுக்கு வாழ்க்கையின் பாதை கிடைத்து விட்டது. ஆசிரியர் சொன்ன அந்த வரிகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அதிலிருந்தே தன்னால் முன்னேறி விட முடியும் என்று நினைத்தான்

அந்த மாணவன் தெருவில் இறங்கி நடந்தான்.

"உன் காதில் என்ன பஞ்சா அடைத்து வெச்சிருக்கே?" என்ற அந்த வார்த்தை காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

உடனே தன் காதுகள் இரண்டையும் நன்றாக முடினான். 

அமைதியான அந்த உலகம் அவனுக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. 

ஒரு புதிய சிந்தனை உருவானது.

ஆசிரியர் சொன்னது போல் பஞ்சு வைத்து காதை அடைத்துப் பார்த்தான். 

ஒரு புது சாதனத்தை வடிவமைத்தான். 




அதன் பெயர் இயர் மஃப்" .

முதலில் தன்னை சுற்றி உள்ளவர்களிடம் மார்க்கெட் செய்தான். 

பரீட்சைக்குப் படிக்கிறவர்கள் தொந்தரவின்றிப் படிக்க வாங்கினார்கள். 

இரைச்சலான இடங்களில் வேலை செய்பவர்கள் வாங்கினார்கள். 

ஓரளவுக்கு வியாபாரம் நடந்தது.

அந்தச் சமயம் முதல் உலகப் போர் ஆரம்பமானது.

பீரங்கிச் சத்தத்தினால் காது செவிடாகாமல் தடுக்க இயர் மஃப் கட்டாயம் அணிய வேணடும் என அதிகாரி உத்தரவிட்டார்.

போர்வீரர்களுக்கு வசதியாக ஹெல்மட்டில் அமைத்து கொடுத்தான்.

கோடீஸ்வரனானான்"




அவர்தான், செஸ்டர் கீரின் வுட்"

மோசமான சூழ்நிலையில் தான் நம் எதிர்காலத்திற்கான வழி ஒளிந்திருக்கும். ஏன்? எதற்கு இப்படி நடக்கிறது?.இது எனக்கு என்ன கற்று கொடுக்கிறது? என்று உங்களுக்குள் கேள்வி கேட்டுக் கொண்டிருங்கள். அதில் வரும் பதில்தான் உங்கள் எதிர்காலத்திற்கான வழி. 

கிடைக்கும் யோசனையை சரியான முறையில் பயன்படுத்தி முன்னேறி வாருங்கள். 

உங்களால் முடியும். நீங்கள் நினைப்பது முடியும். இதை நாம் சொல்லவில்லை பாரதியார் அன்றே 'நினைப்பது முடியும்' என்று புதிய ஆத்திசூடியில் பாடுகிறார்.

                                                 --------------------------------------------------


Post a Comment

புதியது பழையவை