ஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-16




'லூசாய்யா நீயி’ ன்னு
ஒரு மைண்ட் வாய்ஸ்!#*@$~#

காலம்                       : கூ.மு 1998 (கூகுள் பிறப்புக்கு முன்) 
பொருள் (மென்) : போட்டோஷாப் 3.ஓ.   
  

இந்த நாலு டம்மி ஓலைப் பட்டாசுகளையும் ஸ்கேனர்ல வெச்சு ஸ்கேன்  பண்ணித்தரமுடியுமா? ன்னு நான் ரொம்ம்ம்ம்ப்ப் பணிவாகக்கேட்டதற்கு அந்த (M.S.DOS) சிஸ்டம் ஆப்பரேட்டர் என்னை ஏற எறங்க எகத்தாளமான பார்வையிலே… என்னை நிக்க வெச்சே சீ.ட்டி ஸ்கேன் எடுத்தார்! (கரண்ட்டுல அடிபட்ட விவேக் எஃப்க்ட் மாதிரி)… அவர் வாய்ஸ் ம்யூட்ல இருந்தாலும் ஹை டெசிபல்ஸ்ல அவரோட மைண்ட் வாய்ஸ் எனக்கு தெளிவாகக் கேட்டது… அது உங்களுக்கும் கேட்கணும்னா..  மேலே சென்று நீங்கள் திரும்பவும் சிவப்புத் தலைப்பின் முதல் ரெண்டு வார்த்தைகளை மட்டும் படிங்க!                                      ( கேட்டுருக்குமே!?)



அப்போ…80 –ஸ்
இவ்ளோ சானல்ஸ் கெடையாது…வெள்ளிக்கிழமை மட்டும் ஒலியும் ஒளியும்…(எழுந்து போய்த்தான் டிவிய அட்ஜஸ்ட் பண்ணனும். அதுவும் அந்த அலுமினிய ஆண்டென்னாவுல காக்கா உட்கார்ந்தா கதை கந்தல்! ரிமோட் இல்லை. மொபைல் போன்.. இல்லவே இல்லை! பரபரப்புச் செய்திகள் யாவும் பத்திரிகை வாயிலாகவே!



சுஜாதாவின் வெகு எளிய நடை… கதை போற ரூட் மேப்பில் கெஸ் பண்ணக்கூட முடியாத திருப்பங்கள் வந்து போகும்… வாரத்துக்கு வாரம் என்ன ஆகுமோன்னு வாசகர்களுக்கு.. தொடரும்….னு படிச்சத்துக்கு அப்புறமும் ஒரு ரசாயன வினையாற்றலில் ’பல்ஸ்’ நார்மலுக்கு வர நேரமெடுக்கும்! என்னவாகும்னு திரும்ப 2 முறை படிப்போம்….அதுக்குள்ள அடுத்த வாரம் வந்துடும் அப்ப்டியாக பலருக்கும் சுஜாதா மேலிருந்த பிரமிப்பு என்னும் கண்ணுக்குத் தெரியாத ’வஸ்து’ …ஓவர்ஃப்ளோ ஆகி… ஒரு முறையாச்சும் நேர்ல பார்த்து ஒரு போட்டோ அல்லது ஆட்டோகிராப் வாங்கிறனும் சமயம் பார்த்துக்காத்திருக்கும் ஒரு மனநிலை!  


அப்படியான காத்திருப்பு வீண் போகவில்லை! காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் புத்தகக் காட்சியில் கண்டோம்… (நில்லுங்கள் ராஜாவே…என மனசுக்குள் கூவி) ஏன் எதற்கு எப்படி புத்தகம் வாங்கி… ஆட்டோகிராப் வாங்கி.. குடும்பத்துடன் ஒரு படம்…. எடுத்துக்கொண்டோம்…..ஆனா அதுல நம்ம டிஎன்ஏ  திருப்திப்படலேது!…

வேதாள மைண்ட்…மீண்டும் மரத்துல..! அவர் அருகாமையைப் பெற என்ன செய்யலாம் (?????)… அவரோட ஓலைப்பட்டாசு … கதையை மீண்டும் மீண்டும் படிச்சேன்…  

BREAK THE RULE ! & BE ORIGINAL

கணினி உலகில் ‘கூகுளாண்டவர்’ அவதரிக்காத கற்காலம்! சென்னைக்குள் ஓலைப்பட்டாசுக்காக அலைந்து வெடிக்கடைகளில் ஏறி இறங்கினேன். ஊஹூம்…பாதிப்பேருக்கு வரைஞ்சு காட்டியும் வேலைக்கு ஆகல!…
சற்றும் மனம் தளராத விக்கிரமனா… காதி கிராஃப்ட் போனேன்… ஒரு பனை வெல்லம் டப்பா வாங்கி ..பிரிச்சு… உருவி… ஊறப்போட்டு, எனக்கு நினைவில் இருந்த முக்கோண வடிவில் ஒப்பேற்றி… ’பிஜிலி’ வெடியின் திரிகளை மட்டும் எடுத்து நான் செய்த நாலு ஓலைப் பட்டாசுக்குள்ளும் சொருகி பாலிதீன் பையில போட்டு… ஆர்வத்தில் ஓடி.. மூச்சு வாங்க.. இந்தக் கட்டுரையின் முதல் வரியில் மீண்டும் நின்ன்னாச்சு!  
(ட்ராக் மாறி ஓடியதுக்கு மன்னிச்ச்சூ!)

இந்த நாலு டம்மி ஓலைப் பட்டாசுகளையும் ஸ்கேனர்ல வெச்சு பண்ணித்தர முடியுமா? கேட்ட…என்னை ('லூசாய்யா நீயி’ ன்னு ஒரு மைண்ட் வாய்ஸ்) ப்ளஸ் …கோவத்துடன் ’வெடியக் கொண்டாந்து ஸ்கேன் பண்ண சொல்ற...மொத்த சிஸ்டமும் வெடிச்சுரும்’ன்னு சொல்லி விரட்டியவரிடம்… 
வெடியில் சொருகி இருந்த திரியை உருவி ‘டம்மி’ பட்டாசு தான். சார். ஒலைப்பட்டாசு ன்னு ஒரு கதை அட்டைப்பட்த்துக்கு தேவைப்படுதுன்னு சொல்லி முடிப்பதற்குள்….. ’அட நம்ம சுஜாதா சார் கதை’ன்னு நொடியில் ஃபிரண்ட் ரெக்வெஸ்ட் அக்ஸெப்ட் ஆகி…தேநீர் அருந்தி…க்ளோஸ் ஃப்ரெண்டாகி… ஸ்கேனிங் நடந்து ’ரிசல்ட்- டபுள் பாஸிட்டிவ்’ வாக வந்தது.


(1.44 எம்.பிக்கு மேல் ஏறாத) 3.5 இன்ச் ஃப்ளாப்பி டிஸ்க் 2லேயும் இமேஜ் ஃபைல் காப்பி செய்து…( சில சமயம் வீட்டுக்குப் போனதும் ஃப்ளாப்பி எர்ரர் வரும்…திரும்ப அலைச்சல் ..அந்த அடிபட்ட தடம் தான் 3 டிஸ்க் ) அப்போ போட்டோ ஷாப்ல கலந்து கட்டி…கதைப்படி கிளைமேக்ஸ்ல ஓலைப்பட்டாசு ’ப்ளாக்மெயில்’ வெடிக்காமல் நமுத்துப்போக (வேலைக்காரி - சின்னா ) ’மேட்டர புகை வடிவப் பெண்ணுருவாக வடிவமைப்பு செய்தேன்…


போட்டோஷாப் 3.0 வெர்சன் புழக்கத்தில்… ப்ளஸ்
2001 வருடத்தில்… Fontographer 3.0 மென்பொருளில் ஓலைப்பட்டாசுக்காக ஒரு எழுத்துரு உருவாக்கி… ஓலைப்பட்டாசு என்னும் … தலைப்பைக் ’க்க்கீழேர்ந்து மேல்ல்ல்ல்’ 90 டிகிரி திருப்பி விட்டேன். சுஜாதா சார் தவிர வேற யாரும் ஈஸியா ஒத்துக்கமாட்டாங்க! (பிரேக் த ரூல் நாயகன் அவர் ) 



அட்டையில் உள்ள ஓலைப்பட்டாசு என்று நீங்கள் பார்க்கும் எனது வடிவமைப்பு எழுத்துரு..(எழுத்துரு உலகப் பிதாமகர் ஆசான் திரு. https://www.facebook.com/muthu.nedumaran அவர்களின் முரசு அஞ்சல் தொகுப்பில் வரிசை என்ற பெயரிlல் இடம்பிடித்தது வரலாற்று மகிழ்ச்சி! …தற்போது 2020 ல் மறுவடிவமைப்பில் அந்த (யூனிக்கோட்) எழுத்துருவின் இன்றைய பெயர் நெய்தல்! (TAU-Neithal)  மேலும் அதில் சுஜாதா என்னும் பெயருக்கு ஒரு எழுத்துரு வடிவமைத்தேன்…அது இன்று நிலவு என்ற பெயரில்…                    (திரு. உதயச்சந்திரன் சாருக்கு மீண்டும் நன்றி) (http://www.tamilvu.org/en/Tamil-Keyboard-interfaces-fonts)  இலவச தரவிறக்கம் செய்து கொள்ளலாம்!


கவர் டிசைனை வேண்டுமென்றே ஒரு போட்டோ பேப்பரில் பிரிண்ட் செய்து ஒரு சுப மாலை வேளையில் …அவரிடம் காட்டினேன்… கொண்ண்ண்ண்டாடிட்டார். என் தோளில் தட்டியது அவரது மோதிரக்கை. ஓலைப்பட்டாசு முதல்செட் ஆசிரியர் பிரதியில் அன்பு நாணாவுக்கு ஆசியுடன் சுஜாதா என கையெழுத்திட்டுத் தந்தார்
இன்றும் அது ஒரு பொக்கிஷம். புத்தகக்காட்சியரங்கில்  "எனது மகள் சிந்து பார்கவிக்கு......." என்று எழுதிய அவர் கையெழுத்துக்கும் ஓலைப்பட்டாசு புத்தகத்தின் கையெழுத்துக்கும் ஆறு வித்தியாசத்துக்கு மேல இருந்தது.
அவர் கையெழுத்து பற்றி இயக்குநர் வசந்த்:
https://www.facebook.com/naanaasfoto/videos/2586873134915096/?epa=SEARCH_BOX 

 ஆறாவது வித்தியாசம் சரியா படிக்கமுடியல…கம்ப்யூட்டர் விசைப்பலகையிலே நடனமாடிய விரல்கள் பேனாவுடன் பிரயத்தனப்பட்டது கண்டு…நானும் அவரது உதவியாளர் திருமதி .லீனா அவர்களின்  பேருதவியுடன் இணைந்து அவருடைய கையெழுத்தை எழுத்துருவாக உருவாக்கினோம்!
அந்த எழுத்துரு கொண்டு சுஜாதாவின் ஆருயிர் நண்பர் சுஜாதா தேசிகன் அவர்களுக்கு தட்டச்சு செய்து அனுப்பிய கடிதம் உங்கள் பார்வைக்கு!



அன்று முதல் அவரது கடைசி நாள் வரை
நேரடி அருகாமை பெற்றுத்தந்தது… நானும் அவரும் மட்டும் பேசிக்கொண்டே ஒரு பயணம் திருச்சி ஸ்ரீரங்கம் சென்று வந்தோம்!… என் வீடு புதுமனை புகுவிழாவுக்கு அவர் நேரில் வந்து ஆசி பெறும் அளவுக்கு நெருக்கமாகி (தொடர் 15ல்) அவரிடம் கற்றதும் பெற்றதும் ஏராளம்!

 மீண்டும் வருவேன்….
(நைலான் கயிற்றுடன்…)

Post a Comment

புதியது பழையவை