பேப்பர் மடிப்புக்குள்…
ஒரு…’ஆ----’பரவசம்
ஓவியனுக்கு க்ளூக்கோஸ் ஏற்றிய ’ஒரு ஓவியக் கடிதம்!’
86 களில் இவ்“LOW” டி.வி சேனல்ல்லாம்
இல்லவே இல்லை! அதனால் வார, மாத இதழ்கள்
லெண்டிங் லைப்ரேரியில் ‘ஊரடங்கு நேரத்திலும்
மீன் வாங்கக் கிளம்பிய சனி ஞாயிறு கூட்டம் போல’ அள்ளும்!… அப்போதைய
வார இதழ்களில்…குமுதம் விகடனுக்கு
மேல பாக்யா இதழில் மட்டும் ‘முருங்கைக்
காய்’ ஸ்மெல் அதிகம்
என்று பேசப்பட்டது. அதற்கு பதிலளிக்கும்
விதமாக… முதல் பக்கத்திலேயே
பாக்யாவில் பலானது அதிகமா? என்ற தலைப்புடன்
பாக்யராஜ் சார் கட்டுரைக்கு நான் வரைந்த ’அறை’ நிர்வாணப்
படத்துடன் ஒரு இதழ்!… அதில் #18ம் பக்கத்த
மட்டும் ஓப்பன் பண்ணிப் பாக்காதீங்க என்று மூடிய மடிப்புடன் விடுத்த வைரஸ் எச்சரிக்கையையும்
மீறி…. பேப்பரைக் …கிழித்துத் திறந்து
பார்த்தவர்களுக்கெல்ல்ல்லாம் ஒரே
மாதிரியான (ஆ* * * ப்…பரவசம்!) கிடைத்த மகிழ்ச்சியில்… ஒரு reference copy இல்லாத அளவுக்கு விற்றுத்தீர்ந்தது!
பாக்யாராஜ்ன்னா…பக்கம்
நம்பர் கூட பாருங்க ’18’ ன்னு அதுவா அமையும் J
அந்த ஆவன்னா…பரவசம்
என்ன்ன்னு … நீங்க கேட்கிறது
…எனக்கு கேட்கிறது!
அதுக்கு
முன்ன.. ஒரு சின்ன மேட்டர்!…
( 1988 - கம்ப்யூட்டர் இல்லாத கட்
& பேஸ்ட் கற்காலம் என்பதை மனதில் கொள்க! ) அப்போதெல்லாம்
ஆசிரியர் பாக்யராஜ் அளிக்கும் கேள்வி பதில் ’குட்ட்ட்டி’க் கதைகள்…புராணக்கதைகள்
கலந்து மறுவாரம் வரைக்கும் தாங்கும்… வைரல் லெவல்! (இப்போது
அவையெல்லாம் தொகுக்கப்பட்டு புத்தக வடிவில் @… http://www.kannadasanpathippagam.com/ )
வழக்கமா….ஒரு பத்திரிகையில
…..ஒரு கதையோ…செய்தியோ
நல்லா விறுவிறுப்பா போய்ட்ட்ருக்கும்போது…திடீர்ன்னு
நிறுத்தி, தொடர்ச்சி- 49ம் பார்க்கன்னு
போட்ருக்கும்…. L J .. நீங்களும்
மந்திரிச்சு விட்டா மாதிரி அந்தப் பக்கத்த சர்ர்ர்ர்ன்னு தேடிப்போயி படிச்சுருவீங்க!…(நல்லாத்தானே
போய்ட்ருந்துச்சு… வரிசையா…கதைய அடுத்தடுத்த
பக்கத்துல போட்டுத்தொலைய வேண்டியதுதானே…!)… ஒய்…பிரேக்
அண்ட் ஜம்ப் கண்ணாம்மூச்சி டு பேஜ் நம்பர் 49ன்னு… அப்போ யோசிச்சவங்கள்ளாம் இப்போ கையைத்
தூக்கலாம்! அதுக்கான பதில்
அடுத்த 2வது பாராவுல….
‘குதிரை’ன்னு ஒரு
கதைத் தலைப்பு…wall painting நாட்களில்
பஸ்ஸ்டாண்ட் கட்டைச் செவத்துல எழுதுவது போல் (ascender
line க்கு மேலே ‘தி’ என்ற எழுத்தின்
கொக்கியை தூக்கி எழுத வாய்ப்பில்ல… )… ஒரு தலைப்பு
எழுதி ஆர்டிஸ்ட் கரோ அவர்களிடம் முதல் 2 பக்கத்துக்கு
ஒரு லேஅவுட் மாடலை கிறுக்கி ஸ்கெட்ச் செய்து… அதற்கான
ஓவியத்தை வரைந்து வாங்கி…நீள அகலம்
பாத்து அளந்து (அளவு முக்கியம்
அமைச்சரே மாதிரி!) வடிவமைப்பை ஆரம்பித்தேன். ஆறு பக்கத்துக்குள் லேஅவுட் முடிக்க உத்தேசம்! டபுள் ஸ்ப்ரெட்ல ஆரம்பிச்சு….’ மண்வெட்டி
தொழிலாளியை ஆங்கில மேதையாக்கும்(!) அமெரிக்கன்
இன்ஸ்டிடியூட்’ ஒரு அரைப்பக்கம்
வெளம்ம்ம்ம்பரம் (வேற!) வெச்சாகணும். இடையில
ரெண்டு ஜோக்ஸ்..அல்லது துணுக்குகள் + அட்வைஸ்
அம்புஜம்னு வாரா வாரம் ஒரு டிப்ஸ் தொடர் வேற!
எல்லோரும்
போல… தலைப்பு அப்புறம் கதை…என ஆரம்பத்துலேர்ந்து
வெட்டி ஒட்ட ஆரம்பிச்சா ….சில சமயம்
6 பக்கத்தைத்
தாண்டி கதை எகிறும்!…(அடுத்த 16 பக்க கலர் ஃபாரம் அல்ரெடி பிரிண்ட ஆகி… PIN
அடிக்கக்
காத்திருக்கும்). அதுனால 32 அல்லது 48 பக்கம்
தள்ளி ….தொடர்ச்சி-49ம் பக்கம்னு
போடணும்!…
(அங்க்கே..16ம் பக்கத்தோட
தொடர்ச்சின்னு… ஞாவுகமா வேற
(!) ஒரு வரி போடணும்!) இந்தக்
கண்டியூட்டி…பல சமயங்கள்ல
கவனமா இருந்தும் கவுத்துரும்.
அதுனால…வில்லேஜ்
விஞ்ஞானி மாதிரி ’யோசிச்சு’…(..கதையின்
கடைசியிலிருந்து
ஒட்டுவோம்). உருது மொழி போல! டபுள் பெனிஃபிட்….கதை சரியாக
பக்க அமைப்பின்
மூலையில் முடியும். தொடர்ச்சின்னு
போட்டு உங்களப் போட்டு இழூக்க்க்க்கவேண்டிய அவசியமிருக்காது. ஆனால் இதுவே… இந்தியா
டுடே போன்ற பத்திரிகைகளில் இந்த வாரம் ஒவ்வொரு செய்தியும் இத்தனை பக்கம் என்னும் முடிவு
செய்து உள்ளடக்கம் ..பொருளடக்கம்
போட்டு ’ப்ப்ப்ளான்ன்ன்ன்’ பண்ணி செய்யும்
போது…இந்தத் தொடர்ச்சின்ன்ற இழுவை இருக்காது…
இந்த 80 களின்
லேஅவுட் டெக்னிக் பேசுனதுல …
’குதிரை’ய வுட்டுட்டோம்
பாருங்க!
கரும்புதின்ன
கூலி மாதிரி எல்லா கதையையும் யாரும் படிக்குமுன் படிச்சுரலாம்…அந்தக்
’குதிரை’க் கதை
இன்னிக்கும் மனசுல நிக்கும்… வகை!… குதிரைக்
கதை நாயகி ’ஒட்டப் பந்தய
வீரி’ இதே போன்ற ஊரடங்கு சமயத்தில்…ஆபத்தான
நிலையில்.. ஒரு மாரத்தான்
ரன்னடிச்சு…தன்னை கிண்டல்
பண்ணவனுக்கே மருத்துவ உதவி செய்வதாய் புதிய நடையில் எழுதப்பட்ட கதை! அப்போதெல்லாம்
பத்திரிகைகள்ல…அப்பெல்லாம்….ஒரு கதை செலக்ட்
ஆவுறதே பெரிசு. கடுமையான…எடிட்டோரியலின்
தொடர் கண்காணிப்பு வளையத்தைத் தாண்டி… கதை கம்போஸிங்ல
அட்மிட் ஆயி… லேஅவுட்ல வந்து
சுருண்டு விழும்!…நாங்க ’கிளவுஸ்’ எதும் போடாம
வெறும் சிசர்ஸ் …ரப்பர் சொல்யூசன
வெச்சி ஆப்ரேஷன முடிச்சிருவோம்! J
மேற்படி
குதிரைக் கதை
அச்சுக்கு அனுப்புமுன் … ஆறு பக்கத்திலும்
ஆசிரியரின் ஓக்கே…சீல் வாங்க வேண்டி… …அவை தற்போது…பாக்யராஜ்
சார் கையில்….
கதைய ஒரு
glance படிச்சார்…’வெரி மச்…இம்ம்ம்ப்ரெஸ்டு’… யாருப்பா
எழுதுனது…முடிஞ்சா..இந்தக்
கதைய எழுதனவர தேடிப்பிடிங்கப்பா...என்று
தன் அஸிஸ்ட் டீம்க்கு…சொல்லிட்டு..
இவர்
அறிமுக எழுத்தாளர்தான். இருந்தாலும் அருமையான எழுததாளராக வரக்கூடிய அறிகுறி தெரிகிறது.இவருடைய
தனி பாணி பாராட்டுக்குறியது
-
ஆசிரியர்
’கல்யாண்… இந்த நாலு வரிய… கதை தலைப்பு
கிட்ட வெச்சுருங்கன்னு’ சொல்ல….அந்த நாலு
வரிகளை உதவி ஆசிரியர் நண்பர் கல்யாண்குமார் அவரே ஓவர் போன்லே ஹைடெக் ராஜேந்திரன்ட்ட
டிக்டேட்&
கம்போஸ்
செய்துகொடுக்க… அங்கிருந்த
ஒரு படத்த தூக்கிட்டு லேசா ’லேஅவுட்’ல அட்ஜஸ்ட் பண்ணி முடிச்சிட்டு திரும்புனா…அங்கே…
தீயா வேல
செஞ்சு ….அஸிஸ்டண்ட் டைரக்டர்
பழனிச்சாமி & கோ அந்த கதை எழுதிய ரவிசங்கர ’ எதோ சினிமாவுல
வர்றா மாதிரி ’ஆளத் தூக்கியாந்துட்டாங்க..!
அசிஸ்டண்டா
சேர..சிபாரிசுகளுடன் பாக்யராஜ் சாரைப்
பார்க்க அப்போல்லாம் ஒரு கூட்டமே காத்திருக்கும்!…ஆனால்
ஒரு குதிரைக் கதை அதை அவருக்கு சாத்தியமாக்கியது!
திரு மணவை
பொன்.மாணிக்கம், கல்யாண்குமாருடன்…(அரும்பு
மீசையுடன் வந்த ரவிசங்கரை அன்றிலிரிந்து ‘குதிரை ரவிசங்கராக்கி) எடிட்டோரியலில்
இணைத்துக்கொண்டோம்! …(அவர் பத்திரிகை
வேணாம்…சினிமா அசிஸ்டண்ட்
டைரக்டரா வேணா சேந்துக்குறேன்னார்…சிறு உத்திரவாத்தின்
பேரில்). பின்னாளில் இயக்குநர்
விக்கிரமன்ட்ட அஸிஸ்டண்ட் ஆகி…பின்னர்
ஆர்.பி சவுத்ரி தயாரிப்பில் ’ வருஷமெல்லாம்
வசந்தம்’ படம் ரவிசங்கர்
தான் இயக்கம். அவரது கதை, திரைக்கதை
வசனம், பாடல்களுடன்
வெளிவந்தது அது ஒரு கிளைக்கதை.
இன்றும் யூடியூபில் சுந்தரன் என்ற பெயரில் கலக்கி வருகிறார்.
அந்த கட்
& பேஸ்ட் லேஅவுட் காலங்களில் தொடர்கதைகளுக்கு ஓவிய ஜாம்பவான்கள்
ம.செ, ஜெ… மாருதி, அரஸ், போக மீதமுள்ள
ஒரு சில கதைகளுக்கு இடையிடையே நானும் வழக்கமான தூரிகையுடன் Air
Brush கலந்த முறைமையில்
சில
கதைகளுக்கான எனது ஓவியங்களில் வித்தியாசப்படுத்த செய்த முயற்சியுடன்
நான் வரைந்த
படங்களும் அச்சேறும். அதில் அப்பவே
கொஞ்சம் Dots ஸ்கிரீன் பேப்பர்
& ஸ்பிரே எஃபெக்ட்ன்னு…எதோ கலந்து
கட்டி அடிப்பேன்.
அதை அவ்வப்போது
உற்றுக் கவனித்து வந்த ஓவியர் மாருதி சார்…(என்னை நேரில்
ஒரு முறை கூட பார்த்திராத அந்த நிலையில்) திரு மாரியப்பன்
மூலம் எனக்காக ஒரு ‘ஓவியக் கடிதம்’ ஒன்றை
வரைந்து அனுப்பினார். இன்றும் அது
எனக்கு பொக்கிஷமான ஒன்று!
கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதையாக…தனியாக
சென்னை வந்த எனக்கு இந்தக் கடிதம் தந்த ஊக்கம்......1000
முறைக்கு மேல் படித்திருப்பேன்! அன்று ஆரம்ப நிலையிலிருந்த எனக்கு
அந்தக் கடிதம் என் நரம்பு
வழியே க்ளூக்கோஸ்
ஏறிய தெம்பு …அவ்வளவு...அது சத்தியமான
உண்மை என்பதை (அப்போதைய என் நிலையை உணர்ந்து) படிச்சுப் பாத்தால் நீங்களும் உணரமுடியும்!
ஒரு தந்தைப்
பாசத்துடன் அகம் மகிழசெய்யும் மாருதி சாருடன் அதன் பின்னர் பலமுறை நேரில் கிடைத்த சந்திப்பு…என் பாக்கியம்! என் போலவே அவருக்கும் புதுக்கோட்டை
ஏரியாதான் பூர்வீகம்!…ஒரு சமயம் அவரது
ஓவியத்தை அவருக்கே வரைந்தளித்து அவரது ஸ்டைலான…மாருதி
எனும் கையெழுத்துடன் பெற்றுக்கொண்ட்து ஜென்ம சுகம்!
சரி… அந்த
மடிச்சு வெச்ச 18 பக்க
மேட்டருக்கு வருவோம்!
கிழிச்சு
படித்த அத்துணை பேருக்கும் பூர்வ ஜன்ம புண்ணியத்துடன் திருமுருக
கிருபானந்த வாரியார் சுவாமிகளின் (ஆன்மீகப் பரவசம்! தந்த அருளுரையுடன்) ஆசிச்
செய்தியை உள்வைத்துச்செய்த புதுமையான லேஅவுட்.. மறக்கமுடியாத
அனுபவம். சில இதழ்கள் வினியோகஸ்தர்களிடமிருந்து லேட்டாக ரிட்டர்ன் வரும்! அவை கார் ஷெட் அருகே சில நூறு பிரதிகள் அடங்கிய கட்டுகளாகக் கிடந்தவை இயக்குநர் பாக்யராஜ் கண்ணில் பட…அவை அனைத்து புத்தகங்களையும் எடைக்குப் போடாமல் தவிர்த்து..10
..10 (வாரத்து) புத்தகங்களாகக் கட்டி அனைத்து சலூன் கடைகளிலும் இலவசமாகக் கொண்டு சேர்க்கச் சொன்னார். அவை யாவும்
பத்திரிகை உலகில் இன்று வரையிலும் யாரும் செய்திடாத ’சம்பவம்ஸ்”!
இதே ஏப்ரல்
மாதம் (32 வருடங்களுக்குமுன்) நான் வடிவமைப்பு
செய்த முதல் அட்டைப்’பயம்’ பற்றி ….வெயிட்டீஸ்!
…தொடர்வேன்!
கருத்துரையிடுக