நான் கண்ட ...ராஜராஜன்
நியூஸ் 7முகமது அலிபட்டப்படிப்பு முடித்தவுடனே அய்யாவை பாத்து 'தந்தி'யில வேலைக்கு சேர்ந்திடலாம் என அப்பா அமரர் எஸ்என் தம்பிதுரை சொல்ல...
1985 மே மாதத்தில் படிப்பு முடிஞ்சது
ஜூலை மாசமே 'தந்தி'யில வேலைக்கு சேர்ந்தாச்சு..
பயோடேட்டாவுடன் அய்யாவை போய்ப் பாத்தோம்...உனக்கெதுக்குடா பயோடேட்டான்னு சொல்லிட்டு என்னிடமே திருப்பித்தந்தார் அய்யா
(பயோடேட்டாவை வாங்காம வேலைக்கு சேர்த்த அய்யாவோட பெரிய மனசை என்ன சொல்ல)
அம்மா பேருல காலேஜ் கட்டப்போறோம்.. நீதான் அதுக்குப் பொறுப்பு...என்ஜீனியர்ட்ட 6 மாசம் ட்ரெயினிங் முடிச்சுட்டு வந்துருன்னு அய்யா சொல்ல, டிரெய்னிங் முடிச்சாச்சு...
பெரிய அய்யா காலேஜ் வெள்ளிவிழா வருது... அய்யாவோட சிலை திறக்க இருக்கோம்... உன்னுடைய முதல் வேலை பெரியய்யா சிலை வைக்கிறதுதான் எனச் சொல்லிட...சிலையும் வைத்தாகிவிட்டது
சிலை திறக்க அன்றைய முதல்வர் கலைஞர் வருவாருன்னு பரபரப்பா இருந்தோம். சிலை திறக்க வந்தது சிலம்புச்செல்வர் ம.பொ.சி.
சிலை திறப்பு விழா சிறப்பாக நடந்து முடிந்தது - நிகழ்ச்சிக்குப் பின்னர், பெரியய்யா சிலை முன்பு அய்யாவுடன் நின்றபடி எல்லோரும் போட்டோ எடுத்தாங்க..
நானும் நண்பர் முத்துகிருஷ்ணனும் நின்னுட்டே இருந்தோம்...அய்யாவுடன் போட்டோ எடுத்துடலாம் என்ற நினைப்பில்...
எங்க முகத்தைப் பாத்ததும் வாங்கன்னு சொல்லிட.. போட்டோ எடுக்க ஆயத்தமானோம்
அய்யா இங்க இல்ல... இதுமேல என சொல்லி அந்த சுற்று பீடத்தில் ஏறி எடுத்த போட்டோ...
நான் கண்ட ...ராஜராஜனுக்கு
மணிமண்டபம்
கருத்துரையிடுக