BSNL -ன் அதிரடி மெகா திட்டம்- 436 நாட்களுக்கு தினமும் 3ஜிபி டேட்டா !

ஜனவரி 26ம் தேதி முதல் பிப்ரவரி 15ம் தேதி 2020க்குள் ரீசார்ச் செய்யும் BSNL பயனாளர்களுக்கு மட்டுமே இச்சேவை பொருந்தும்.

தனியார் மொபைல் சேவை நிறுவனங்களை கதிகலங்க வைத்திருக்கும் அளவில்  BSNL நிறுவனம் தற்சமம் அறிவித்திருக்கும் புதுமையான அறிவிப்பு பல தரப்பு மக்களை BSNL பக்கம் தானாகவே இழுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதைப்பற்றிய முழுவிபரங்களை இனி பார்க்கலாம்.
BSNL இரண்டு திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த திட்டம் ஏற்கனவே உள்ளது என்றாலும் இதில் சில சலுகைகளை அதிகரித்துள்ளது.  இரண்டு திட்டம் ஒன்று ரூ.108 குறுகிய காலம் ( 28 நாட்களுக்கு ) மட்டும் மற்றொன்று ரூ.1999 நீண்ட காலம் ( 436 ) நாட்களுக்கு.

ரூ.108 பீரிபெய்ட் திட்டம் :

* 28 நாட்களுக்கு  தினமும் 250 நிமிட வாயிஸ் கால், தினமும் 1 ஜிபி டேட்டா
*  28 நாட்களுக்கு 500 SMS  வரை இலவசமாக அனுப்பலாம்.
* 1ஜிபி அளவை தாண்டியதும் 80 கேபிபிஎஸ் (Kbbs) வேகத்தில் அளவில்லாமல் பயன்படுத்தலாம்.

ரூ.1999 பீரிபெய்ட் திட்டம் :

ஏற்கனவே இத்திட்டம் உள்ளது 365 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி வழங்கப்பட்டது ஆனால் சிறப்பு சலுகையாக ஜனவரி 26ம் தேதி முதல் பிப்ரவரி 15ம் தேதி 2020க்குள் ரீசார்ச் செய்யும் அனைவருக்கும் 436 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.

*  436 நாட்களுக்கு  தினமும் 250 நிமிட வாயிஸ் கால்,  தினமும் 3 ஜிபி டேட்டா,
*  தினமும் 100 SMS  இலவசம்.
* 3 ஜிபி அளவை தாண்டியதும் 80 கேபிபிஎஸ் (Kbbs) வேகத்தில் அளவில்லாமல்    பயன்படுத்தலாம்.

Post a Comment

புதியது பழையவை