எண்ணமும் எழுத்தும் - தொடர் 6



முதன் முதலாய்..........
 ஒரு பெண்ணைத்...தொட்டேன்!

அந்த ஸீனை நாம் தொடுவதற்கு முன்
1983…..பி.காம் ( எஸ்ஸ்ஸ்ஸ்….நோ அரியர்ஸ்! ) முடித்த நிலையில்...இராங்கியம் கிராமத்தின் ஒரே ஒரு ஆள் இன் ஆல் அழகு ராசா நாந்தேன்




ஒரு நாள் போஸ்ட் மேன் உத்யோகம்…(லீவ் டியூட்டி) ஓல்ட் ஏஜ் பென்ஷன் பாட்டிகளின் விரலை அழுத்தாமல் கைநாட்டு வாங்கிடும் கலை கைகூடியது. ஏறக்குறைய தபால் பட்டுவாடா செய்த எல்லா வீடுகளிலும் ஒரு வாய் எதாவது சாப்பிட்டுப் போப்பா என்னும் அன்புடன் வழியும் பச்சை வயல் மனசுகள்!
 
மறுவாரத்தில் ...பாங்க் ஆஃப் மதுரா - கிளார்க் லீவு டூட்டி ..தினசரி அதே லெட்ஜர்அதே டி.டி சலான் எழுதி உதவிடெய்லி ஸ்டேட்மெண்ட் ஒரே மாதிரி வேலை மீது எரிச்சல் வந்தது….( கடைவீதியில் நண்பரிடம் சத்தியமா காசே இல்ல மச்சான்ன்னு சொல்பவரின் SB கணக்கில் இருப்பு  எவ்ளோ என்று எனக்கு அப்போ தெரியும். ஏனெனில் கணினி வராத மேனுவல் காலம்! ) சில நேரம் அக்கா -  மாமாவுக்கு ஒத்தாசையா வயல் மோட்டார் ...கரண்ட் ..மீட்டர் ரீடிங் என்ட்ரி ( அப்போ இலவச மின்சாரம் லேது) ..


.
மேலும்….
தேர்தல் நேரத்தில் ரெண்டு கட்சிக்கும் ஒரே சுண்ணாம்பு ...ஒரே ராபின் நீலம்ஒரே 3ஆம் நம்பர் பிரஷ்…( நல்லவேளை பசுவும் கன்றும் சின்னம் கை சின்னமாக மாறியது தப்பிச்சேன்)

கீரணிப்பட்டி கோவிலில் அம்மன் படம் வரைவதிலிருந்து 33வது பூச்சொறிதல் விழா ஜிகினா தூள் எழுத்து பெட்ரோமேக்ஸ் லைட்ல மின்னும்உள்ளூர்  கள்ளுகடைக்கான எண் அம்புக்குறி வகையறா....இடுகாட்டுக் கல்லறையில் தோற்றம் மறைவு வரை...புது சைக்கிள் செயின் கவர்ல ஸ்டைலா பேர் எழுதுறது… ஒரு பழைய கிட்டாரில் இளைய நிலாவை டேப் ரெக்கார்டரில் டேப் நஞ்சு போகும் அளவுக்குத் தேயத்தேயக் கேட்டு வாசிக்க…ஆன மட்டும் முயற்சித்தேன்! 



இது போக

உள்ளூர்  திருமுருகன் டூரிங் ....தியேட்டரில் சுண்ணாம்பு தடவிய கண்ணாடி ஸ்லைடில் இன்று இப்படம் கடைசி.. மற்றும் 5 வது ரீல் ஓடிக்கொண்டிருக்கும் நிறம் மாறாத பூக்களுக்கு நடுவில் ராமாயி அக்கா வெளியே வரவும்என ஒவெர் லாப்பிங் FLASH NEWS வேற! ( நன்றி: இன்றும் தொடர்பில் இருக்கும் அன்றைய தியேட்டர் உரிமையாளர்கள்ஆவுடை அண்ணன் வெங்கடாசலம் அண்ணன்)


மேற்படி வேலைகளை என் இராங்கியத்து வட்ட்த்துக்குள் மட்டும் செய்த எனக்கு…. தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்து ஒரு அழைப்பு .....ஒரே ஒரு டவுன் பஸ் அல்லது எட்டு கிலோ மீட்டர் சைக்கிள் மிதியில் குழிபிறை. ( குழி-பிறை பெயரே தமிழ் அழகு).. .
சிற்பி சோமு அவர்கள் எழுதி இயக்கிய "தேரில் வந்த திருமகன் " என்னும் சரித்திர நாடகத்தில் வில்லனாக ....ஒரு ரோல் ...அதுக்கு பக்கம் பக்கமா வசனம் பேசக்கூடிய ஒரு ஆள் வேணும்.........அந்த வாய்ப்பு என்னைத் தேடி வந்தது! ....புதிய ஊரின் நட்பு வட்டம் ... ...பக்கத்து ஊரிலிருந்து அந்த ஊர் கோவில் விஷேசம் சிறக்க தோள் கொடுப்பதால் எல்லோரிடமும் ஒரு சிறப்பு கவனிப்பும் மரியாதையும் அந்த வயதுக்கு ...ஜாலியா 'கெத்தாக' இருந்தது.


கதாநாயகியாக பெண் வேடத்தில் நடிப்பவருக்கு .பதிலாக..ஒரு சிவப்புக் காசித் துண்டை தோளில் வளைத்துப் போர்த்தியபடி காசி வாத்தியாரே வசனத்தைப் படிப்பார் ...ரிகர்சல் வரை..   எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு ....
நாடகத்துக்கு முதல் நாள் கிராண்ட் ரிகர்சல் .அஞ்சு ஸீன் gone...என்ன்னுடைய ஆறாவது சீன் .....
அழுது கொண்டிருப்பவரை தோளைத் தொட்டுத் தூக்கி ....யார் அந்தக் கயவன்சொல்! .....கட்டி இழுத்துவந்து உன் காலடியில் ......என்று ஆரம்பித்து
அது அதுக்கப்புறம் ஒரு ஒன்றைப்பக்க வசனம் போகும்....
அந்த கிராண்ட் ரிகர்சலில் நிஜமான கதாநாயகி (பக்கா professional அதுவும் ஃப்ரம் ஸ்ரீரங்கம்! கடந்துபோன 30களை 25 ஆக்கிய லேசான மேக்கப்! )...நாயகி .நிஜமாவே அழுதுகொண்டே ....இருக்க ..முதன் முதலாய் ஒரு பெண் ...இவ்வளவு அருகாமையில்! ...இப்போ என் வம் ..ம்ம்.ம்




#
சொல்.... பூங்குழலி .....சொல்! என ஆரம்பிக்கும் என் முதல் பாரா.....
...................................................................................................
.....................................................................................
இட்'ஸ் gone...போயே போச்சு ....
.........................................................................................
குனிந்து .தோளைத்தொட்டேன் (சாரி…..…சாரியோட பார்டர் texture விரல்களில் பட…)
...இன்னும் கொஞ்சம் கண்ணீர் விட்டு அழுதாங்க ....அந்த நடிப்புக்கரசி! ரிகர்சலுக்கெல்லாம் அவ்ளோ அழுகை தேவையில்ல….(but… என்ன செய்யுறது!)  நெஜம்ம்ம்ம்ம்ம்ம்மா பயந்துட்டேன்..!
....அடுத்தடுத்து இருந்த மற்ற பாராக்களும் என் மனக்கண்ணால்கூட தொடர்பு கொள்ள இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டு மீதி….அதுக்கப்புறம் உள்ள .ஒன்னறைப்பக்கமும் 
..அவுட். ஆஃப் போகஸ் ஆகி .....வேர்த்து...விறுவிறுத்து .... ( நெஜமா...அத அந்த feel  எப்டிங்கறத நம்ம வாத்யார்சுஜாதா சார் மட்டும்தான் எழுத்துல சொல்ல முடியும்)...
அய்ய்ய்ய்யோ என்னாச்சு..என்னாச்சுன்னு நட்பு வட்டத்துக்கு கேட்கணுமா! ...நல்லவேளை கலாய்ங்கற வார்த்தையே அப்போ புழக்கதுலயும் வழக்கத்துலயும் இல்லை! கேமராவும் யார்ட்டயும் இல்லாத காலம்!
.(இப்போல்லாம் உடனடி டிக் டாக்கியிருப்பனுங்க! )


பாக்கி 22 ஸீன்ஸ்! ....
எல்லாருடைய ஸீன் ரிகர்சலும் தெளிவா போய்டுச்சு... நான் ஸ்டேஜ்ல பாத்துக்கிறேனேன்னு ஒதுங்கி வந்தது….என்னவோ செய்தது!  ...லேசான  குழப்பம் ( ஆடிட்டர் மாதிரி யாரும் அட்வைஸ் பண்ணாமலேதியானம் போல எதோ பண்னேன்! )

ஸ்கூல் டிராமாவுல எல்லாம் பசங்களே பெண் வேடமும்ம்ம் போட்டு நடிச்சிருந்தாலும் ....இது கொஞ்சம் ஹைய்லி professional  touch...
பக்கத்து ஊர்ல நல்லது செய்றேன்னு வந்து ….நம்ம இராங்கியம் ஊர் மானத்த கெடுத்துடக்கூடாதுன்னுஉள்ளுணர்வு உதைக்க வசனம் எழுதிய தாள்கள் வியர்வையில்கசிய
அந்த யெல்லொலீனியர் கிரேடியண்ட் மாலைப்பொழுது இருட்டாக மாறியது….

இட்லித் தட்டு போன்ற சுழலும் வண்ண ஒளி வட்டங்கள்….. தையல் மெஷின் போலும் பெடல் கொண்ட ஹாண்ட்ஸ் ஃப்ரீபட்டு ஜிப்பா ஆர்மோனிய மோதிர விரல்கள்தோய்த்து தேய்த்துத் தட்டப்படும் தபேலா சத்தம் மைக் டெஸ்டிங் 1..2..3…4 வரைக்கும் போய் ரிபீட்ட்ட் ஆகுதுதென்னங்கீத்து வழியா சில சிறார்களின் கண்கள்!

பாண் கேக் வாசனை...மேக்கப் ஏறிடுச்சு ...உள்ளுக்குள்ள பல்ஸ் தாறுமாறு… பாவாடை மாதிரியான ராஜ உடை (ப்ளஸ் லெக்கிங்ஸ்!!!)...உறைக்குள் ஒரு நிஜமான பளபளக்கும் கத்தி .... அதுவே தோளை தூக்கி நிறுத்தி நடக்கச் செய்தது...ஆரம்ப ஸீன்களிலே .என் ஊர் நண்பர்கள்  அண்ணன் சிவா, சைக்கிள் கடை பழனிவேல்பெட்டிக்கடை பாபு மற்றும் அப்பாவுடன் பணியாற்றும் பள்ளி ஆசிரியர்கள், என இடைஇடையே ....மேடையிலே வந்து இராங்கியமே பாராட்டி க்ளுக்கோஸ் ஏற்றியதில் வசனங்களின் ஏற்ற இறக்கத்தில் மிகக் கவனமானேன்.
 ..
அந்த ராஜ வம்சத்துப் பெண் உடையலங்காரம்…(ப்ப்ப்ப்ப்ப்ப்பா….!
உள்ளுக்குள் சற்று மிரளச் செய்தது உண்மை)....இருந்தும்
அந்த முக்கியமான அந்த 6 வது சீன்ல மங்களம் என்னும் ஸ்ரீரங்கத்து …..யை தோளைத் தொட்டு தூக்கி நிறுத்தி… (அவளின் அழுது வழிந்த விழிகளைப் பார்க்காமல்…) அத்தனை வசனத்தையும் அவளின் நெற்றிப்பொட்டை பார்த்துக்கொண்டே தெறிக்கவிட்டேன் ....என் ஊர் மக்கள் கைதட்ட அந்த ஊரும் சேர்ந்து கைதட்டிய அந்த மைக்ரோ செகண்ட்ஸ்.....அது ஒரு போதை மாதிரியான கண்ணுக்கு தெரியாத வஸ்து !


அந்த நாடகத்தால் அந்த ஊரில் அடுத்த நாடகம் போடும் வரை ஓரிரு மாதங்களுக்கு மேல் பேசப்பட்ட ஸீன் அதுவாகத்தான் இருந்தது ....ஏன்னா ஒரு 2 மாசத்துக்கு குழிபிறை மற்றும் சுத்துப்பட்ட  ஊர்ல எந்த டீக்கடையில் டீ சாப்பிட்டாலும் காசு வாங்க மறுத்ததில்  அவர்களின் அன்பையும் அவதானிப்பையும் உணரமுடிந்தது!

பின்னாளில் ஆல் இண்டியா ரேடியோ திருச்சி வானொலியில் ஒரு ஞாயிறு மதியம் 3 மணி ஒலிச் சித்திரத்துக்குப் பதிலாக எங்களின் அந்த தேரில் வந்த திருமகன்நாடகம் ஒளிபரப்பப்பட்டது...வீட்டில் இருந்த மர்பி ரேடியோவில் குடும்பத்துடன் கேட்ட்க்காமல்.... குழிபிறைக்கு வந்து அந்த நாடக நண்பர்கள் சூழக் கேட்டு ரசித்த சுகம் .....இப்போ எந்த you tube வீடியோவிலும்  கிடைக்காத ரகம் !




( இந்தப் படத்தில் மஞ்சள் வட்டத்தில் என்னுடன் இருக்கும் காசி வாத்தியார் சொன்ன ஒரே ஒரு டிப்ஸ்….அந்தம்மா கண்ணை மட்டும் எக் காரணம் கொண்டும் பாத்துறாதன்னார் ....அதான் கிளீனா ஒர்க்கவுட் ஆச்சு....#யப்பே ..நடிப்பு ரொம்பக் கஷ்டம்ம்ம்ம்லே! )

அப்போ இருந்த குறைவான வசதியில் கிடைத்த Click III ..120 சைஸ் பிலிம் ரோல் B/W மற்றும் ஃபிளாஷ் இல்லாத available அரை வெளிச்சத்தில்  என் மாப்ள ரவிசங்கர் Ravi Sankar Madhavan எடுத்த படங்கள் இல்லைன்னா  நான் நாடகத்தில் நடித்ததுக்கு போதிய ஆதாரம் இல்லாமல்நான் சொல்வதெல்லாம் உண்மைஇல்லன்னு சந்தேகக் கேஸ்ல போயிருக்கும்!..இவை நடந்தது 1983 …
(
இந்த அனுபவத்தகவல் முன்னரே ஃபேஸ்புக் பதிவாக பலரும் படித்திருக்கலாம்அவர்கள் யாவரும் இந்த boring மீள் பதிவுக்கு மன்னிச்சூ!)
மீண்டும் வருவேன்.


3 கருத்துகள்

  1. அருமையான தொடர்!

    பதிலளிநீக்கு
  2. கடைசி நிமிட வரிகளைப்படிக்கும் வரை உனது டென்சன் எனக்குள்ளும்...அப்பாடா வசனத்தை தெறிக்கவிட்டுட்டியே....

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை