வேதாத்திரி மகரிஷி சிறப்புப் பாடல்

வேதாத்திரி மகரிஷி சிறப்புப் பாடல்


மனிதனை மையப்படுத்திய ஆன்மீகத்தை முன்மொழிந்தவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

மனித மனத்தை வளப்படுத்தினால்தான் உலகத்தின் சகல சிக்கல்களுக்கும் தீர்வு காணமுடியும் என்று சிந்தித்த மிகப்பெரிய சிந்தனையாளர் வேதாத்திரி மகரிஷி.

எல்லா மதங்களும் சொர்க்கத்திற்குப் போவதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, பூமியை எப்படி சொர்க்கமாக்குவது என்று கவலைப்பட்டவர் வேதாத்திரி மகரிஷி.

கடவுள் என்பவர் ஒரு நபரல்ல. அது ஒரு தன்மை என அறிவுறுத்திய பேராசான்.

கடவுள் ஒரு தனிநபர் என்பதிலிருந்து, சமூகத்தை விடுவித்த அண்மைக்கால அருட்தந்தை தான் வேதாத்திரி மகரிஷி.

மகரிஷி அவர்களைப்பற்றி பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி திருமதி. வாணி ஜெயராம் அவர்கள் இயற்றி மெட்டமைத்த பாடல் தான் இது.

11வயதே நிரம்பிய செல்வி. யாழ்நங்கை அவர்களின் இனிய குரலில் வேதாத்திரியம் ஒலிக்கிறது.

நன்றி: ம்யூசிக் ட்ராப்ஸ் டீம்.

Post a Comment

புதியது பழையவை